Перейти к содержимому

மக்காவில் இடம்பெற்ற குர்ஆன் போட்டியில் வெற்றியீட்டிய இலங்கை மாணவனுக்கு விமான நிலையத்தில் வரவேற்பு

vidiyal lk

0:00 / 0:00

மக்காவில் இடம்பெற்ற குர்ஆன் போட்டியில் வெற்றியீட்டிய இலங்கை மாணவனுக்கு விமான நிலையத்தில் வரவேற்பு

96 284 просмотра · 6 дней назад
vidiyal lk
6,88 тыс. подписчиков
96 284 просмотра · 6 дней назад
புனித மக்கா நகரில் இடம்பெற்ற 46ஆவது 'மன்னர் அப்துல் அஸீஸ் சர்வதேச அல் - குர்ஆன் மனனப் போட்டியில்’ வெற்றியீட்டிய இலங்கை மாணவன் அல் - ஹாபிழ் இம்தாத் இயாஸுக்கு இன்று (22) சனிக்கிழமை அதிகாலை விமான நிலையத்தில் வரவேற்களிக்கப்பட்டது. முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் ராஜகிரிய மவாஹிபுல் உலும் மத்ரஸா ஆகியன இணைந்து இந்த வரவேற்பினை ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்வில் கல்கின்னையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் முஸ்லிம் சலாஹூதீன், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் அப்ரோஸ் அஹமட், திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தரும் குர்ஆன் போட்டிகளுக்கான ஒருங்கிணைப்பாளரும் முப்தி முர்ஷி, பிரதி அமைச்சர் முனீர் முளப்பரின் இணைப்புச் செயலாளர் எல்.ஐ.ஏ.எம். சாஜஹான், ராஜகிரிய மவாஹிபுல் உலும் மத்ரஸாவின் விரிவுரையாளர்கள் மற்றும் கல்கின்னையைச் சேர்ந்த உலமாக்கள், முக்கியஸ்தர்கள் எனப் பலர் பங்கேற்றனர். இதன்போது, மன்னர் அப்துல் அஸீஸ் சர்வதேச குர்ஆன் மனனப் போட்டியில் பங்கேற்ற ஏனைய மூன்று இலங்கை மாணவர்களும் பங்கேற்றனர்.