Перейти к содержимому

திங்கட்கிழமை தெய்வ தரிசனம்-14-9-2026-ஸ்ரீ கற்பக விநாயகர்-உற்சவ மூர்த்தி @ பிள்ளையார்பட்டி, தமிழ்நாடு

Indha Naal Iniya Naal

0:00 / 0:00

திங்கட்கிழமை தெய்வ தரிசனம்-14-9-2026-ஸ்ரீ கற்பக விநாயகர்-உற்சவ மூர்த்தி @ பிள்ளையார்பட்டி, தமிழ்நாடு

289 просмотров · 2 недели назад
Indha Naal Iniya Naal
802 подписчика
289 просмотров · 2 недели назад
அணைவருக்கும் வணக்கம் ஸ்ரீ பராபவ வருடம் ஆவணி மாதம் திங்கட்கிழமை தெய்வ தரிசனம் மற்றும் இன்றைய நாள்காட்டி - 14-09-2026 அபிஷேகம், அலங்காரம், ஆரத்தி - ஸ்ரீ கற்பக விநாயகர்-உற்சவ மூர்த்தி @ பிள்ளையார்பட்டி, தமிழ்நாடு பொது தகவல் அபிஷேகம், அலங்காரம், ஆரத்தி - ஸ்ரீ கற்பக விநாயகர் (உற்சவ மூர்த்தி) @ பிள்ளையார்பட்டி, தமிழ்நாடு பொது தகவல் தமிழ்நாட்டின் மிகப் பழமையான குகைக் கோயிலில் ஒன்றான ஸ்ரீ கற்பக விநாயகர் கோயில் தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுகாவில் உள்ள பிள்ளையார்பட்டி கிராமத்தில், சிறிய மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. திருப்பத்தூரிலிருந்து 12 கி.மீ, காரைக்குடியிலிருந்து 15 கி.மீ, மதுரையிலிருந்து 75 கி.மீ இக்கோயிலின் பிரதான தெய்வமாக கற்பக விநாயகர் இருக்கிறார். மலையைக் குடைந்து அமைக்கப்பெற்ற சுமார் 6 அடி உயரமுள்ள கற்பகப் பிள்ளையாரின் திரு உருவம், வடக்கு நோக்கியும், அவரின் தும்பிக்கை வலது புறமாக சுழித்தும் (வலம்புரி விநாயகர்) இருப்பது இக் கோயிலின் தனிச் சிறப்பாக உள்ளது. இக்கோயில், சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்டது என்பதைக் கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகிறது. தற்போது நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் மேற்பார்வையில் மிகச் சிறப்பான முறையில், ஆகம முறை தவறாமல் வழிபாடு நடைபெறுகிறது. காணொளியை பார்த்து அருள் பெறுவோம். நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.