Перейти к содержимому

மலைப்பூட்டும் மாணிக்க மாலை.! | புவிசார் குறியீடு பெற்ற "தோவாளை மாணிக்க மாலை" THOVALAI MANIKKA MALAI

Malaimurasu Tv 24X7

0:00 / 0:00

மலைப்பூட்டும் மாணிக்க மாலை.! | புவிசார் குறியீடு பெற்ற "தோவாளை மாணிக்க மாலை" THOVALAI MANIKKA MALAI

5 333 просмотра · 1 г. назад
Malaimurasu Tv 24X7
2,08 млн подписчиков
5 333 просмотра · 1 г. назад
மலைப்பூட்டும் மாணிக்க மாலை.! | புவிசார் குறியீடு பெற்ற "தோவாளை மாணிக்க மாலை" THOVALAI MANIKKA MALAI மலர்களால் கட்டப்படும் மாலைகள் தற்போது பல வடிவங்களில் நவீன முறையிலும் கட்டப்பட்டு வருகிறது. ஆனாலும் கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் கட்டப்பட்டு வரும் மாணிக்க மாலைக்கு ஒரு தனித்துவமும், பல்வேறு சிறப்பம்சங்களும் நிறைந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தை மிகவும் பிரசித்தி பெற்றதாகவும். அதிலும், இங்கு கட்டப்படும் மாணிக்க மாலைக்கென்று ஒரு தனி சிறப்பு உள்ளது என்றே கூறவேண்டும். இந்த மாலை, மலர்களால் கட்டப்பட்ட மாலை என்றால் யாராலும் நம்ப முடியாது, கோரைப்பாய்கள், துணிகளில் நெய்யப்படும் டிசைன்கள் போன்று வெறும் மலர்களைக் கொண்டு, முழுக்க முழுக்க கைகளாலேயே இந்த மாணிக்க மாலையை தயார் செய்கின்றனர். வெள்ளை அரளி, சிவப்பு அரளி பூக்கள் மற்றும் நொச்சி இலைகளைக் கொண்டு, வாழை நாரில் கட்டப்படும் இந்த மாணிக்க மாலைகள், திருவனந்தபுரம் பத்மநாத சுவாமி கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் மிக முக்கிய இடம் பிடித்து வருகின்றன. அதுமட்டுமின்றி, சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில், திருப்பதி தேவஸ்தானம் உள்ளிட்ட தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள பல்வேறு கோயில் திருவிழாக்களில் இந்த மாணிக்க மாலை தோரணம் கட்டாயம் இடம் பெற்று வருகிறது. இந்த மாணிக்க மாலை கிட்டத்தட்ட 500 ஆண்டுகள் பழமையானது. தோவாளையை சேர்ந்த ஒரு சில குடும்பங்கள் மட்டுமே கடந்த 6 தலைமுறையாக இந்த மாணிக்க மாலையை கட்டி வருகின்றனர். எத்தனையோ மாலைகள் கட்டப்பட்டாலும், இந்த மாணிக்க மாலை கட்டும் முறையே வித்தியாசமானதுதான். இத்தனை சிறப்பு மிக்க இந்த தோவாளை மாணிக்க மாலைக்கு தற்போது புவிசார் குறியீடு அறிவிக்கப்பட்டுள்ளது, கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது. இதனால் இந்த மாலை கட்டும் தொழிலாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பெண்கள் மற்றும் ஆண்கள் என ஒரு குழுவாக இணைந்து இந்த பாரம்பரிய மாலையை கட்டுகின்றனர். ஒரு மாலை கட்டுவதற்கு, 4 மணி நேரம் ஆகிறது. இந்த மாலை கட்டும் தொழில் தங்களோடு முடிந்துவிடாமல் அடுத்த தலைமுறையினருக்கும் சென்று சேர வேண்டும் என்று விருப்பம் தெரிவிக்கும், மாலை கட்டும் தொழிலாளர்கள், கலைக் கல்லூரிகளில், இந்த மாணிக்க மாலை கட்டும் தொழிலை ஒரு பாடமாக வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர். அத்துடன் பூம்புகாரில் தஞ்சாவூர் தட்டுக்கு கொடுத்த முக்கியதுவத்தை, தோவாளை மாணிக்க மாலைக்கும் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றனர். அத்துடன் இந்த மாலை கட்டுவதற்காக ஒரு பட்டறை அமைத்து தர வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடும் தொழிலாளர்கள், அனைத்து பெண்களும் இந்த மாலை கட்டும் தொழிலை கற்றுக் கொண்டால் நல்ல வருவாய் ஈட்ட முடியும் என்பதால், பெண்கள் இந்த மாலை கட்டும் தொழிலுக்கு வர வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கின்றனர். மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளதால், இந்த மாலை மேலும் பிரபலமடைவதுடன், அதன் விற்பனையும் அதிகரிக்கும் என்பதால், மாலை கட்டும் தொழிலாளர்களை மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இத்தனை அழகான பாரம்பரிய கலை ஒரு சிலரோடு நின்றுவிடாமல் அனைவரும் அறிந்து கொண்டால், கலை பாதுகாக்கப்படுவதுடன், மாலை கட்டும் தொழிலாளர்களின் வாழ்வதாரமும் மேம்படும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. #malaimurasu #flowers ‪@malaimurasunewslive‬ Watch Malai Murasu Seitthigal(மாலை முரசு செய்திகள்), Tamil Nadu’s Top 24x7 Tamil News Channel, bringing the best of latest live news, breaking news, election, general, updates, headlines, crime reports, reported deep from rural and uprban. entertainment, sports, business, social media and so much more., Stay updated on the latest stories and headlines today from the worlds of politics. Follow on: Insta :   / malaimurasutv_official   twitter :   / malaimurasutv   facebook :   / malaimurasu   website : http://www.malaimurasu.com Live News :    / malaimurasunewsdigital   SUBSCRIBE to get the latest news updates:    / @malaimurasunewslive