சொல்லும் செயலும் ஒன்றாக்கு நீ | Sollum Seyalum Ondrakku Nee | Munajath | Ahmad Salih Faheemi
Ahmad Salih Faheemi
0:00 / 0:00
சொல்லும் செயலும் ஒன்றாக்கு நீ | Sollum Seyalum Ondrakku Nee | Munajath | Ahmad Salih Faheemi
135 353 просмотра · 5 лет назад
Ahmad Salih Faheemi
33,2 тыс. подписчиков
135 353 просмотра · 5 лет назад
A beautiful Munajat recited after the Weekly Raatib Majlises held at the traditional Sahib Appa Thaika in the town of Kayalpatnam, Tamilnadu, S. India.
பாரம்பரியம் மிக்க காயல்பட்டணத்தின் பூர்வீகத் திருத்தலம் ஸாஹிப் அப்பா தைக்காவில் வாரந்தோறும் வெள்ளி திங்கள் இரவுகளில் நியமமாக ஓதப்பட்டு வரும் ரம்மிய மிகும் ராத்திப் மஜ்லிஸின் நிறைவில் வேண்டப்படும் பிரார்த்தனைப் பா இது..
LYRICS :
ஆக்கம்:
கண்மணி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் வழித்தோன்றல், சுதந்திரப் போராட்ட வீரர் மர்ஹூம் செய்யிது அஹ்மது மவ்லானா ரழியல்லாஹு அன்ஹு
சொல்லும் செயலும் ஒன்றாக்கு நீ!
சோர்வுறா தெங்களை ஆக்கு நீ!
வல்லவா அல்லலை போக்கு நீ!
அல்லாஹ் அடியாரை காக்கு நீ!
ஆல நபியவர் பொருட்டினால்
ஆல் அஸ்ஹாபுகள் பொருட்டினால்
அன்பியா அவ்லியா பொருட்டினால்
அண்ணலாம் ஆன்றோர்கள் பொருட்டினால்
[சொல்லும் செயலும்]
திங்கள் வெள்ளி ராத்திபோதிடும்
எங்கள் அமல்களை ஏற்றுக் கொள்வாய்
மங்களமாகும் தைக்கா வதனில்
தங்கள் புகாரி ஜிஃப்ரி சார்பால்
[சொல்லும் செயலும்]
காயல் நகர் மக்கள் எல்லவர்க்கும்
காதிரிய்யா வழி செல்பவர்க்கும்
கால விரோதங்கள் காணாமல்
காத்தருள்வாய் எங்கள் ஆண்டவா!
[சொல்லும் செயலும்]
வையம் புகழ் வகுதை பதியாம்
துய்ய முஹிய்யித்தீன் சீடர்களாய்
மெய்யாய் அவர் பொருட்டெங்களையே
ஐயமறச் செய்வாய் ஆண்டவா!
[சொல்லும் செயலும்]
CREDITS :
Voice: Hafiz B.S. Ahmad Salih Faheemi
Animation: MSL STUDIO
Audio Mixing: Sajid Khan
Technical Support:
Pilot Simple Software - Hong Kong
www.pilot.com.hk
Released by:
Faheemiya Publishers (Chennai)
Rumi International Sufi Council
Supported by:
Chinna Maraicar Famili (Kilakarai)
#AhmadSalihFaheemi