Перейти к содержимому

காதல் வந்து என்னைக் கொல்லுதே||காதல் பாடல்||Gemini AI||Maaran Kumar

தண்ணீர் பந்துகள் и Maaran Kumar

0:00 / 0:00

காதல் வந்து என்னைக் கொல்லுதே||காதல் பாடல்||Gemini AI||Maaran Kumar

140 просмотров · 2 недели назад
தண்ணீர் பந்துகள் и Maaran Kumar
140 просмотров · 2 недели назад
#aisong #lovefeelings #ownsong #onesidelovesong Music - Gemini AI Singer - Gemini AI Lyricist - Maaran Kumar lyrics - காதல் வந்து என்னைக் கொல்லுதே அன்பே காதல் சொல்ல நெஞ்சம் எண்ணுதே நீயும் என்னைக் காதல் செய்வாயோ என்று எந்தன் உள்ளம் ஐயம் கொல்லுதே புதிய உணர்வு அட கண்டேன் நானே வீனஸ் செடியினில் புழுவினைப் போல் நானும் வந்து உன்னில் மாட்டிக் கொண்டேன் மாதம் கடந்துமே வெயிலினைப் போல் நானும் தினந்தினம் தவித்து விட்டேன் காதல் வந்து என்னைக் கொல்லுதே அன்பே காதல் சொல்ல நெஞ்சம் எண்ணுதே பக்கம் வந்து நீ நெருங்க அருகில் நெருங்க இதயமதுவே மெல்ல துடிப்பதை நிறுத்திவிட்டு இடியோசை மிஞ்சியே துடிக்க பனியிலிருந்து உருகும் மெல்ல உருகும் நீரைப் போலவே வியர்வையில் நானும் நனைந்து விட்டு வெயிலைக் காரணம் சொல்லி நடிக்க காதல் சொல்ல பயிற்சிகள் எடுத்திட்டப் பிறகுமே தயங்கியே கிடந்தேனே எதனாலே அரசு மருத்துவமனையில் பிள்ளை பெறும் அன்னையங்கு அச்சம் கொண்டு தவிப்பாளே அது போல காதல் வந்து என்னைக் கொல்லுதே அன்பே காதல் சொல்ல நெஞ்சம் எண்ணுதே உன்னிடத்தில் நானும் பேச நீயும் பேச மனம் சீராகுதே வேறு பெண்ணிடத்தில் நீயும் பேச மனது தீயைப் போலவே மாறுதே நிலத்தில் உதிர்ந்து கிடக்கும் உதிர்ந்து கிடக்கும் பூ இலையைப் போலவே மனதை உதிர்த்துக் காதல் கதையை உன்னிடம் சொல்லி விடவே தோணுதே உணவினை நான் மறந்து எடைகளும் தான் குறைந்து நூலாம்படை ஆகிப்போனேன் எதனாலே நியாய விலைக் கடையிலே நியாயமின்றி எடை குறைத்து பொருளினைத் தருவாரே அதுபோல காதல் வந்து என்னைக் கொல்லுதே அன்பே காதல் சொல்ல நெஞ்சம் எண்ணுதே நீயும் என்னைக் காதல் செய்வாயோ என்று எந்தன் உள்ளம் ஐயம் கொல்லுதே புதிய உணர்வு அட கண்டேன் நானே வீனஸ் செடியினில் புழுவினைப் போல் நானும் வந்து உன்னில் மாட்டிக் கொண்டேன் மாதம் கடந்துமே வெயிலினைப் போல் நானும் தினந்தினம் தவித்து விட்டேன்.    • மன்னிப்பாயோ என் உயிரே||Maaran Kumar||தண்ணீ...   மன்னிப்பாயோ எந்தன் உயிரே