Перейти к содержимому

பெ.மாதையனின் தமிழ் அகராதிகளில் பல்பொருட்சொல் ஒப்புருச்சொல் பதிவமைப்பு - முனைவர் தி.மோகன்ராஜ் உரை

வெட்சி

0:00 / 0:00

பெ.மாதையனின் தமிழ் அகராதிகளில் பல்பொருட்சொல் ஒப்புருச்சொல் பதிவமைப்பு - முனைவர் தி.மோகன்ராஜ் உரை

89 просмотров · 1 день назад
வெட்சி
108 подписчиков
89 просмотров · 1 день назад
வெட்சி : பல்துறைத் தமிழாய்விதழ், கல்விப்புலத்தில் ஆய்வுகளாக நிகழ்ந்த நூல்களின் மீதான உரையாடல் நிகழ்வினை, "கல்விப்புல முன்னாய்வுகளும் எதிர்கால ஆய்வுகளும்" எனும் பொருண்மையில் இணைய வழியாக ஒருங்கிணைக்கிறது. மாதந்தோறும் 2,4 ஆவது செவ்வாய்க்கிழமைகளில் இளம் ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வுக்களம் சார்ந்த ஓர் ஆய்வுநூல் குறித்து உரையாடும் தன்மையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நிகழ்வானது, முன்னாய்வுகளின் போக்குகளை அறிதலினூடாக ஆய்வு இடைவெளிகளைக் கண்டறிதல், பல்துறைப் பார்வைகளை முன்வைத்தல், சமகால ஆய்வுகளைச் செறிவாகச் செய்யப்பட வேண்டுமென்ற நோக்கங்களை முன்வைக்கிறது. பேராசிரியர் பெ.மாதையனின், “தமிழ் அகராதிகளில் பல்பொருட்சொல் ஒப்புருச்சொல் பதிவமைப்பு” எனும் பொருண்மையில் தமிழ்நாடு அரசின், தமிழ் – இந்தோ – ஐரோப்பிய மொழிகளின் வேர்ச்சொல் ஒப்பீட்டு அகராதித் திட்டத்தின் உதவிப் பதிப்பாசிரியர், முனைவர் தி.மோகன்ராஜ் உரையாற்றினார். பொருண்மையியல் - அகராதி உருவாக்கத்திற்கான உறவு, மொழி கற்றல், மொழிபெயர்ப்புப் பணிகளுக்கு அகராதி உருவாக்கத்தின் தேவை, D.A.Cruse எழுதிய Lexical Semantics (சொற்பொருண்மையியல்) எனும் நூலின் அவசியம், பல்பொருட்சொல், ஒப்புருச்சொல் குறித்துத் தமிழ்ச்சூழலில் நிகழ்ந்த முன்னாய்வுகள், தமிழ்த்திரை நகைச்சுவை (வடிவேலு, கிரேஸி மோகன், பாஸ்கி, பிரவீன்குமார்) உருவாக்கத்தில் சொல்நிலைப் பொருள்மயக்கம், ஒப்புருச்சொற்கள் செயல்படும்விதம், ஒருமொழி - இருமொழி அகராதி பதிவமைப்பும் ஒப்பீட்டாய்வும், சதுரகராதி முதல் க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதிவரையுள்ள அகராதிகளில் பல்பொருட்சொல், ஒப்புருச்சொல் பதிவமைப்பு, அகராதிக்குழுவினரின் நெறிமுறைக்கேற்ப பதிவமைப்புகளில் உள்ள முரண்பாடுகள், இதுவரை வெளிவந்த அகராதிகளிலிருந்து பதிவமைப்புகளின் அடிப்படையிலிருந்தே புதிய அகராதிக்கான நெறிமுறைகளை உருவாக்க வேண்டியதன் அவசியம் ஆகியவற்றை உரை விவரிக்கிறது. தமிழ் வரலாற்றுணர்வு, மொழிப் பொருண்மையியல் அறிவு, தமிழ் இலக்கணம், இலக்கியம், வரலாறு, பண்பாடு சார்ந்த பின்புல அறிவுடன் மேலாய்வுகள் செய்யப்பட வேண்டியதன் அவசியத்தையும் முன்வைக்கிறது.