TAMIL CHRISTIAN DEVOTIONAL| சந்தியாகப்பர் பாடல்| MARIAN||
LAYAM ARTS
0:00 / 0:00
TAMIL CHRISTIAN DEVOTIONAL| சந்தியாகப்பர் பாடல்| MARIAN||
86 796 просмотров · 6 лет назад
LAYAM ARTS
6 тыс. подписчиков
86 796 просмотров · 6 лет назад
#சந்தியாகப்பர்பாடல்
#santhiyagapparsong
#புனிதர்பாடல்
#marian
#saravanaganesh
#xavier
புனித சந்தி- யாகப்பரைப் பற்றி
புகழ்ப் பாக்கள் பாடுவோமோ போற்றி
இறைமகனை இறுதிவரைப் பற்றி
வாழ்ந்ததுவே அவரின் வெற்றி
வெண்
குதிரையின் வீரர்
நம்
அன்னையின் தோழர்
மண்
வாழ்வினில் இனியர்
விண்
வாழ்ந்திடும் புனிதர்
புனிதர் அவர் புகழ் சொல்லுவோம், நாம்
இறை மகனின் வழி செல்லுவோம்
*
இயேசுவின் அழைப்பினுக்கு
அடி பணிந்தார்
அனைத்தையும் விட்டு விட்டுப்
பின் தொடர்ந்தார்
உருமாற்றம் நேர்கையிலும்
உடன் இருந்தார்
இயேசுவில் நெருக்கமாய்
தினம் இருந்தார்
விண்ணக இருக்கைக்கு
விருப்பம் கொண்டார்
இயேசுவின் மொழிகளில்
திருப்பம் கண்டார்
மறைதனைப் பரப்பிட
மனம் துணிந்தார்
கடல்களைக் கடந்தும்
பணி புரிந்தார்
புனிதரை அறிந்திடுவோம்
இயேசுவை அணிந்திடுவோம்.
*
ஏரோதின் காலத்திலே
பிடிக்கப் பட்டார்
சாவின் தண்டனைக்கு
அளிக்கப் பட்டார்
உயிரினை விடுகையிலும்
இறை போற்றினார்
கொன்றிட வந்தவனை
மனம் மாற்றினார்
புனிதரின் வாழ்வதனைப்
படித் திடுவோம்
அவரது பாதை தனில்
நடந் திடுவோம்
உலகெனும் கடலில்
வலை விரிப்போம்
அன்பினால் மனிதரை
பிடித் தெடுப்போம்
இயேசுவைப் புகழ்ந்திடுவோம்
புனிதர் போல் வாழ்ந்திடுவோம்
*