Перейти к содержимому

horror story crime story ghost full story Tamil Audiobooks online/பத்ரன் badhran‪@gktamilnovels‬

GK Tamil Novels

0:00 / 0:00

horror story crime story ghost full story Tamil Audiobooks online/பத்ரன் badhran‪@gktamilnovels‬

14 674 просмотра · 3 года назад
GK Tamil Novels
10,1 тыс. подписчиков
14 674 просмотра · 3 года назад
தன்னைக் கொன்ற பத்ரனைப் பழிவாங்க அடுத்தடுத்த ஜென்மங்களில் பத்ரனை தேடுகிறது. அவனால் கொலை செய்யப்பட்ட கொள்ளையனின் ஆவி. பத்ரன் பழிவாங்கப்பட்டானா? விஷால் அதிரடியில் அசத்தலான ஒரு ஹாரர் கதை பத்ரன். நாவலில் இருந்து... ஒரு இடத்தில் மட்டும் நாகம் ஒன்று சீற கண்டுகொள்ளாமல் ஆகாயகங்கை அருவியைத் தாண்டினான். அருவியில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. அருவிக்குப் பக்கவாட்டில் ஆடுதின்னாப்பாளை செடிகள் இருக்க இருளன் மகிழ்ந்தான். வழுக்குப் பாறையில் கவனமாக காலை வைத்த செடிக்கு அருகில் சென்றான். கொஞ்சம் பறித்து மடியில் வைத்துக் கட்டிக் கொண்டான். வேகவேகமாய் திரும்பினான். நடக்கும்போது சத்தம் கேட்கக் கூடாது என்பதில் உஷாராக இருந்தான். திரும்பவும் ஆங்கிலேயர்கள் கண்ணில் பட்டாலோ அல்லது கொள்ளையர்களின் கண்ணில் பட்டாலோ நிலைமை மோசமாகிவிடும் என்பதை உணர்ந்திருந்தான். குடிசையை அடைந்தான். "வள்ளி "கிசுகிசுப்பாய் கூப்பிட்டான். வள்ளி குடிசையின் தட்டியைத் திறக்க உள்ளே நுழைந்தவள் மடியில் கட்டியிருந்த ஆடு தின்னாப்பாளை செடி இலைகளை கீழே கொட்டினான். "இது எல்லாத்தையும் நல்லா அரைச்சுக் கொடு புள்ள" "சரி மச்சான்" "யாரும் வந்தாங்களா?" "யாரும் வரல மச்சான். சாமி மட்டும் ரெண்டு தடவை கண் முழிச்சுப் பார்த்துட்டுத் தூங்கிடுச்சு." "ம்" வள்ளி ஆடு தின்னாப்பாளை செடி இலைகளைக் களிம்பாய் அரைத்துக்கொண்டு வந்தாள். அதை பத்ரனின் காயங்களின் மேல் பூசி விட்டான் இருளன். "கஞ்சி காய்ச்சினியா புள்ள?" "இருக்கு மச்சான்." "கொண்டு வா சாமிக்கு கொடுப்போம்" வள்ளி கொண்டுவந்து கொடுக்க இருளன் கஞ்சியை பத்ரன் வாயில் புகட்டினான். பத்ரன் கஞ்சி சாப்பிடுவதை நெஞ்சம் நெகிழப் பார்த்தான் இருளன். அப்போது சற்று தூரத்தில் புரவிகளின் குளம்படி சத்தம் கேட்க வள்ளி நடுங்கினாள். இருளன் முகம் வெளிறியது. புரவிகளின் சத்தம் அருகில் மிக அருகில் கேட்க "சாமிய மறைச்சு வைக்கணும் " சொன்ன இருளன் ஒரு பெரிய துணியை எடுத்து பத்ரனைப் போர்த்தினான். பழைய துணிகளை எடுத்து கட்டிலை முழுவதுமாக மறைத்தான். "யாரது வெளியே வா?" சத்தம் குடிசைக்கு வெளியே கேட்க இருளன் வள்ளியைப் பார்த்தான். "புள்ள நான் போறேன் எனக்கு எது நடந்தாலும் கவலைப்படாதே" "மச்சான்" வள்ளியின் கண்களில் கண்ணீர். "அழாத புள்ள. ஒருவேளை செத்துப் போயிட்டா நீ அழுததே என்னைப் பேயா சுத்த வைக்கும்." இருளன் சொல்ல வள்ளி கண்களைத் துடைத்துக் கொண்டாள். "காது கேக்கலையா வா வெளியே" மீண்டும் ஒரு குரல் வெளியிலிருந்து உறும இருளன் குடிசையின் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தான். கொள்ளையர்கள் நான்கு பேர் நின்று கொண்டிருந்தனர். "என்னடா பண்ணிட்டுருக்க உள்ள?" "அய்யா தூங்கிட்டேனுங்க" சொன்ன இருளனைப் பளார் என்று அறைந்தான் ஒருவன். "பொய் சொல்றியா இப்பத்தான் அருவிப் பக்கம் உன்னப் பார்த்தோம் " "ஐயா" "சரி உன் பொண்டாட்டியை வெளிய அனுப்பு" "ஐயா" "என்னடா காது கேக்கலையா? இவன் சரிப்பட மாட்டான் நீ உள்ள போய் அவளை இழுத்துட்டு வா." ஒரு கொள்ளையன் மற்றவனிடம் சொல்ல இருளன் கத்தினான். "வேண்டாங்கய்யா." ஒருவன் குடிசையின் தட்டியை தள்ளிக் கொண்டு உள்ளே சென்றான். மற்ற மூன்று கொள்ளையர்களும் சிரித்தபடி இருளனைப் பார்த்தனர். கொஞ்ச நேரத்தில் தட்டி பறந்தபடி உள்ளே சென்ற கொள்ளையன் வெளியே வந்து விழுந்தான். அனைவரும் திடுக்கிட்டுப் போய் பார்க்க பத்ரன் போர்வை போர்த்திய படி நின்றிருந்தான். போர்வையை விலக்கினான். உடலெங்கும் ரத்தக்காயங்களுடன் நின்ற பத்ரனைப் பார்த்த கொள்ளையர்கள் சிரித்தனர். பத்ரன் அவர்களையே பார்த்தான். சட்டென்று ஒருவன் மீது பாய்ந்து அவனுடைய குறுவாள் எடுத்து அவன் கழுத்தை அறுத்தான்..அறுபட்டவன் மரம் போல் கீழே விழ மற்ற மூவரும் பத்ரனை சூழ்ந்தனர். பத்ரன் அவர்களை சர்வசாதாரணமாக எதிர்கொண்டான். இரண்டே நிமிடங்களில் இரண்டு கொள்ளையர்கள் சவமாக சரிந்தனர். கொள்ளையர்களின் தலைவன் பயங்கரமாகக் கத்தினான். "பத்ராஆஆஆ" கத்தியபடி குதிரையிலிருந்து கீழே குதித்தான். பத்ரன் மேல் பாய்ந்தான். அவன் வாள் பத்ரன் கழுத்தை வெட்ட இருளனும் வள்ளியும் கத்தினர். "சாமி" பத்ரன் அவர்களைப் பார்த்து புன்னகைத்தான். கொள்ளையர் தலைவனைக் கீழே தள்ளி அவன் நெஞ்சில் குறுவாளால் குத்தினான். கொள்ளையர் தலைவன் அதை நம்ப முடியாமல் அதிர்ந்து போய் பார்த்தான். "பத்ரா உன்னை நான் விடமாட்டேன். எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அத்தனை ஜென்மத்திலும் உனக்கு என் கையாலதான் சாவு." கத்தியவன் பத்ரனையே பார்த்தபடி அடங்கினான். "பத்ரன் " அமேசானில் படிக்க Amazon KDP India https://www.amazon.in/dp/B091MBH1DX?r... Amazon KDP US https://www.amazon.com/dp/B091MBH1DX?... கவுதம் கருணாநிதி (எழுத்தாளர்) ஷர்மி (வாசித்தவர்) #crimestory #horrorstory #ghoststory #horrorstories #ghoststories #tamilaudionovels #tamilaudiobooks #tamilvoiceover #horrorlovetamil #gktamilnovels #gk