PAADI PUGAZHVOM - பாடிப் புகழ்வோம் | CATHOLIC CHOIR | 13 SEPTEMBER 2026 | COIMBATORE | MADHA TV
MADHA TV
0:00 / 0:00
PAADI PUGAZHVOM - பாடிப் புகழ்வோம் | CATHOLIC CHOIR | 13 SEPTEMBER 2026 | COIMBATORE | MADHA TV
1 295 просмотров · 12 ч назад
MADHA TV
394 тыс. подписчиков
1 295 просмотров · 12 ч назад
புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய பாடகர் குழுவினர்
சவேரியார்பாளையம், கோவை மறைமாவட்டம் | ST. FRANCIS XAVIER CHURCH CHOIR | OOTACAMOUND | EPI - 74 | @madhatelevision
PREVIOUS EPISODE LINK : • PAADI PUGAZHVOM - பாடிப் புகழ்வோம் | CATHO...
ஜீவஜோதி கலைதொடர்பகம் கோவை
01:38 கண்ணை முடினேன் உன்னை தேடினேன்
08:53 உனக்கென நான் தரும் காணிக்கையை
15:22 வருவோம் வருவோம் ஆலயம்
19:19 உணவின் வடிவே என் இயேசுவே
SONG 01
கண்ணை மூடினேன், உன்னைத் தேடினேன்,
என் மனதின் கோயிலிலே உன் முகம் கண்டேன்
உன் முக அன்பில், உருகிப்போகிறேன்,
எந்தன் மனம் உன் நினைவைப் பாட கேட்கிறேன்
உன்னைக் கண்டபின், என்ன வேண்டுவேன்,
என்ன வேண்டுவேன் யேசு தெய்வமே
உன்னை நான் பிரியா வரமாய் வருவாய் அருள் புரிவாய்
என்னை நீயும் அன்பு செய்யும் அளவைத் தேடினேன்
உந்தன் அன்பு முடிவில்லாது நீண்டு போவதேன்
மண்டியிட்டு எனது பாதம் கழுவிச் சொன்ன உன்
அன்பின் பாடம் ஆழம் கண்டு கண்கள் கலங்குதே
இந்தப் பாடம் விளக்கம் காண சிகரம் ஏறினேன்
சிகரத்திலே விரிந்த கரங்கள் விளக்கம் சொல்லுதே
இறைவன் நீதான் என நான்மனதால் சரணடைந்தேன்
விழிகள் மூடி மௌனமாய் உன் இதயம் சாய்கிறேன்
துடிக்கும் உனது இதய ஒலியில் தூங்கிப்போகிறேன்
உனது கண்கள் காட்டும் கருணை மனதில் தேக்கினேன்
மனது உனது குரலுக்காக ஏங்கி விழிக்கிறேன்
குரலைக் கேட்க ஏக்கத்தோடு உனையே தேடினேன்
உனது அழகுக் குரலும் எனக்குள் ஓலிக்கக் கேட்கிறேன்
இறைவா இனி நான் முழுதும் உனதாய் மாறுகிறேன்
SONG 02
உனக்கென நான் தரும் காணிக்கையை
உவப்புடன் ஏற்பாய் என் இறைவா (2)
பலியென எனை நான் தருகின்றேன் -2 உன்
பதமலர் பணிந்து மகிழ்கின்றேன் -2
1. உழைப்பின் கனி இது உனக்காக
உன்னருள் கொடைகளின் பலனாக (2)
படைத்தவன் கரங்களில் மகிழ்வாக -2 உன்
படைப்பினில் சிறந்ததைத் தருகின்றேன் - 2
2. உடல்பொருள் ஆவி உனக்காக
உன் பணி புவிதனில் நிறைவாக (2)
மடிந்திடும் மனிதத்தின் விளக்காக 2 நான்
மகிழ்வுடன் என்னையே தருகின்றேன் -2
SONG 03
வருவோம் வருவோம் ஆலயம்
வணங்கியே ஆண்டவர் சந்நிதி
பலியினில் கலந்து பகிர்தலில் வளர்ந்து
பலனாய் பெறுவோம் நிம்மதி.
நன்றி நன்றி என்று சொல்லி பாடுவோம்
நாளும் இயேசு வழி செல்ல ஒன்றிணைவோம்
1. குருவும் பீடமும் செம்மறியா
கிறிஸ்து இயேசுவே திகழ்கின்றார்
இது என் உடலும் இரத்தமும் என்று
இன்றே விருந்தினை அளிக்கின்றார்
2. கிறிஸ்துவ வாழ்வின் சிகரமாய்
தேவ நற்கருணையை தருகின்றார்
உலகினை உயிர்விக்கும் ஊற்றாய் நமக்கே
உண்மை உணவினை கொடுக்கின்றார்
Check us on: http://www.madhatv.in/
Subscribe us on : @madhatelevision
Follow us on :
Facebook : / madhatv
Instagram : https://www.instagram.com/madha_tv?ig...
Whatsapp : https://whatsapp.com/channel/
Spotify : https://open.spotify.com/user/3165nbz...
Join this channel to get access to perks:
/ @madhatelevision