Перейти к содержимому

நற்சாட்சி உறுதிப்படும் | GOOD TESTIMONY WILL BE CONFIRMED | INNERMAN DEVOTIONS

Grace Tabernacle apostolic church

0:00 / 0:00

நற்சாட்சி உறுதிப்படும் | GOOD TESTIMONY WILL BE CONFIRMED | INNERMAN DEVOTIONS

28 просмотров · 4 дн. назад
Grace Tabernacle apostolic church
733 подписчика
28 просмотров · 4 дн. назад
ரோமர் 12:2 - நீங்கள் இந்தப் பிரபஞ்சத் திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மை யும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள். விசுவாச மார்க்கத்தார் தானதர்மங்களை செய்து நற்சாட்சியை பெற்றுக் கொள்கின்றார்கள். அது நன்மையானது அதை விட்டுவிடக்கூடாது. பிலிப்பர் சபையோர், பெருந்தன்மையோடு, உதாத்துவமாய் கொடுக்கி ன்றவர்களாக இருந்து வந்தார்கள். அதனால் தேவ ஊழியராகிய பவுல் நன்மைகளை பெற்றுக் கொண்டார். அவர்களுக்கு நன்றியறிதலுள்ள வராக இருந்தார். அதனால், அவர்கள் செய்வது எல்லாம் சரி என்று கூறுவது நியாயமாகுமோ? அல்லது அவர்கள் அப்படியே இருக்கின்ற வண்ணமாக இருந்தால், தேவ அன் பிலே அவர்கள் வளர்ந்து பெருகுவா ர்களோ? ஆண்டவர் இயேசுவை அறி யாத உலகத்தாலும் பெரும் பெரும் தானதர்மங்களை செய்கின் றார்கள். தேவ ஊழியராகிய பவுல் பிலிப்பி யருக்கு எழுதும் போது, உங்கள் அன்பு உதாரத்துவமாக கொடுப்ப துடன் நின்றுவிடாமல்: 'மேலும், உத் தமமானவைகளை நீங்கள் ஒப்புக் கொள்ளத்தக்கதாக உங்கள் அன்பா னது அறிவிலும் எல்லா உணர்விலும் இன்னும் அதிகமதி கமாய்ப் பெரு கவும், தேவனுக்கு மகிமையும் துதியும் உண்டாகும்படி இயேசுகிறிஸ்து வினால் வருகிற நீதியின் கனிகளால் நிறைந்தவர்களாகி, நீங்கள் கிறிஸ்துவின் நாளுக்கென்று துப்புரவானவர்களும் இடறலற்ற வர்களு மாயிருக்கவும் வேண்டுதல் செய்கிறேன்.' அதாவது, வெளிப்ப டையான தானதர்மங்களோடு நின்று விடாமல், பிதாவாகிய தேவன் எதற்காக அழைத்தாரோ, அந்த நோக்கம் நிறைவேறத்தக்கதாக, அவருடைய திருக்குமாரனாகிய இயேசுவின் சாயலிலே வளரவேண்டும். சபையிலே சகோதருக்கு இடையிலே பிரிவினைகள் இருக்கக்கூடாது. ஏக மனதுள்ளவர்களாக இருந்து கிறிஸ்துவின் சிந்தையை தரித்துக் கொள்ள வேண்டும். உலக அந்தஸ்து ஏற்றத்தாழ்வுகள் விசுவாசிகள் மத்தியிலே காணப்படகூடாது என்று அவர்களுக்கு அறிவுரை கூறினார். அதுபோலவே, பிலேமோனுடைய வாழ்விலும், தேவன் விரும்பும் நற்சாட்சியானது, அவருடைய வாழ்விலே உறுதிப்பட வேண்டும். அந்தக் காரியத்தை, நடைமுறையிலே சபையோர் மத்தியிலே காண்பிக்க வேண்டும். அதுபோலவே நாமும் நற்சாடசியிலே உறுதிப்பட வேண்டும். தேவன் விரும்பும் கிரியைகள் நம்முடைய வாழ்விலே கனிகளினாலே உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஜெபம்:பரலோக தேவனே, கிறிஸ்து வழியாக நான் பெற்றுக் கொண்ட சுயாதீனத்தை துஷ்பிரயோகம் செய்யாமல், காரியத்தின் கடைத்தொகையை நிதானித்தறிந்து, உம்முடைய சித்தத்தை நிறைவேற்ற எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன். மாலைத் தியானம் - 2 கொரி 4:16 Romans 12:2 - And be not conformed to this world: but be ye transformed by the renewing of your mind, that ye may prove what is that good, and acceptable, and perfect, will of God.. (KJV) Based on: The Inner Man Tamil Monthly Magazine - Published by Grace Tabernacle apostolic church, Toronto Canada Background Music: Recorded by Grace Tabernacle apostolic church Our Website: https://gtachurch.ca/daily https://gtachurch.ca/im Produced by: Grace Tabernacle apostolic church, Toronto Canada