Перейти к содержимому

தண்ணீர் இன்றி தவிக்கும் குதிரைகள்; நெடுந்தீவின் அடையாளம் இன்று அழிவின் விளிம்பில்...

BBC News Tamil

0:00 / 0:00

தண்ணீர் இன்றி தவிக்கும் குதிரைகள்; நெடுந்தீவின் அடையாளம் இன்று அழிவின் விளிம்பில்...

27 092 просмотра · 5 ч назад
BBC News Tamil
2,8 млн подписчиков
27 092 просмотра · 5 ч назад
யாழ்ப்பாணக் கடற்பரப்பில் உள்ள நெடுந்தீவில் பல நூற்றாண்டுகளாக சுதந்திரமாக வாழ்ந்து வரும் காட்டுக் குதிரைகள் தற்போது கடும் வறட்சி மற்றும் குடிநீர் பற்றாக்குறையால் அழியும் நிலையை எதிர்கொண்டுள்ளன. பதினாறாம் நூற்றாண்டில் போர்த்துகேயர் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் இந்தக் குதிரைகள், காலப்போக்கில் மனிதக் கட்டுப்பாடின்றி தன்னிச்சையாக வாழத் தொடங்கி நெடுந்தீவின் தனித்துவமான அடையாளமாக மாறின. ஒரு காலத்தில் ஆயிரக்கணக்கில் இருந்த இவற்றின் எண்ணிக்கை தற்போது சில நூறுகளாகக் குறைந்துள்ளது. கடும் கோடை, புல்வெளிகள் காய்ந்துபோதல் மற்றும் நீராதாரங்கள் வற்றியதால் மனிதர்களின் உதவிக்காக இவை காத்திருக்கின்றன. இலங்கை கடற்படையினரும் உள்ளூராட்சி சபையினரும் தண்ணீர் வழங்கி வரும் நிலையில், முறையான நீண்டகால பாதுகாப்புத் திட்டங்கள் அவசியம் என வலியுறுத்தப்படுகிறது. Producer & Shoot : J Bharaneetharan Edit : Selva Sekhar #Horse #Neduntheevu #Srilanka இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJ... Visit our site - https://www.bbc.com/tamil