தரங்கம்பாடியில் முதல் முறையாக வெட்டிவேர் சாகுபடி | மாற்று விவசாயத்தில் அசத்தும் இளைஞர் | MALAIMURASU
Malaimurasu Tv 24X7
0:00 / 0:00
தரங்கம்பாடியில் முதல் முறையாக வெட்டிவேர் சாகுபடி | மாற்று விவசாயத்தில் அசத்தும் இளைஞர் | MALAIMURASU
13 932 просмотра · 1 г. назад
Malaimurasu Tv 24X7
2,08 млн подписчиков
13 932 просмотра · 1 г. назад
தரங்கம்பாடியில் முதல் முறையாக வெட்டிவேர் சாகுபடி | மாற்று விவசாயத்தில் அசத்தும் இளைஞர் | MALAIMURASU
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி ஆணைகோவில் கிராமத்தை சேர்ந்தவர் கதிரவன். 40 வயதான இவர் ஒரு விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்.
இவர் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூரில் பணியாற்றி வந்த நிலையில் விவசாயம் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் அந்தப் பணியை உதறித் தள்ளிவிட்டு ஊர் திரும்பி வந்து விவசாயம் பார்க்கத் தொடங்கியுள்ளார்.
கடந்த ஏழு ஆண்டுகளாக தனக்கு செந்தமான நிலத்தில் தர்பூசணி, வெள்ளேரி, முளைக்கீரை, நிலக்கடலை உள்ளிட்ட பல்வேறு பயிர்களை சாகுபடி செய்து வந்துள்ளார் கதிரவன்.
இதில் போதிய வருவாய் இன்றி நஷ்டம் ஏற்பட்ட நிலையில்,
மாற்று விவசாயத்தில் ஈடுபட முடிவு செய்து என்ன பயிரிடலாம் என்று தேடி வந்துள்ளார்.
அப்போதுதான் கடலுரைச் சார்ந்த தனியார் நிறுவனத்தின் மூலம் வெட்டிவேர் சாகுபடி குறித்து தெரிந்து கொண்ட கதிரவன்,
வெட்டிவேர் சாகுபடி செய்வது என முடிவு செய்து, அதற்காக நிலத்தை பண்படுத்த தொடங்கியுள்ளார்.
ஆனால் தரங்கம்பாடியில் இதுவரை யாரும் வெட்டி வேர் சாகுபடி செய்யாத நிலையில், அருகில் இருந்த விவசாயிகள், இதெல்லாம் சரிப்பட்டு வராது என்றும் நமது மண்ணுக்கு இந்த பயிர் வராது என்றும் எதிர்மறை கருத்துக்களை கூறியுள்ளனர்.
ஆனால், மாற்று விவசாயத்தில் அதிக ஆர்வம் கொண்ட கதிரவன், பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி வெட்டி வேர் சாகுபடியில் ஈடுபட்டு உள்ளார்.
இதற்காக, கடலூரில் இருந்து வெட்டிவேர் நாற்றுக்களை வாங்கி வந்து தனது நிலத்தில் தொழு உரம் இட்டு கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் வெட்டிவேர் நாற்றுகளை நடவு செய்துள்ளார்.
தற்போது வெட்டி வேர் நன்கு செழித்து வளர்ந்துள்ளது, கதிரவனுக்கு மகிழ்ச்சியை மட்டுமின்றி, நம்பிக்கையையும் கொடுத்துள்ளது.
வெட்டிவேர் நடவு செய்யும்போது தொழு உரம் இட்டதைத் தவிர இதுவரை, வேறு எந்த உரமும் பயன்படுத்தவில்லை என்று கூறும் கதிரவன், வெட்டிவேர் அனைத்து சூழலையும் தாங்கி வளரக்கூடிய தன்மை கொண்டது என்றும், வெட்டி வேர் பயிருக்கு பூச்சி தாக்குதல் மிக மிக குறைவு என்பதால், செலவினமும் குறைவாகவே உள்ளது என்றார்.
பல்வேறு மருத்துவ குணம் கொண்ட வெட்டி வேரைக் கொண்டு சோப், வெட்டி வேர் எண்ணெய், அழகு சாதன பொருட்கள், வாசனை திரவியங்கள், வெட்டி வேர் மாலை, வெட்டிவேர் சர்பத் என பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.
இதனால் வெட்டி வேரை பல்வேறு நிறுவனங்களும் போட்டி போட்டு வாங்கிச் செல்வதால், வெட்டி வேருக்கு நல்ல வரவேற்பு உள்ளதுடன், நல்ல வருவாயும் கிடைத்து வருகிறது.
இதனால் விவசாயி கதிரவனைப் பார்த்து, தரங்கம்பாடியில், மேலும் இரண்டு பேர் வெட்டி வேர் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். எனவே, தமிழ்நாடு அரசு வெட்டிவேர் விவசாயத்தை ஊக்குவித்து, உரிய வழிகாட்டுதலுடன், மானியமும் வழங்கினால், விவசாயிகள் வெட்டி வேர் விவசாயத்தில் ஈடுபட்டு, நல்ல லாபம் ஈட்ட முடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் விவசாயி கதிரவன்.
நெல், கரும்பு என வழக்கமான பயிர்களை சாகுபடி செய்து வரும் விவசாயிகள், விவசாயத்தில் பெரிய அளவுக்கு லாபம் இல்லாமல் தவித்து வரும் நிலையில், படித்த, இளம் விவசாயிகள் இப்படி வித்தியாசமாக சிந்தித்து, மாற்று பயிர் சாகுபடியில், வெற்றியையும் பெற்று வருகின்றனர்.
மாற்றுப் பயிர் சாகுபடியில் சாதித்து வரும் இளம் விவசாயி கதிரவனுக்கு வாழ்த்துகளை கூறி விடைபெற்றோம்...
#malaimurasu #farmer #tharangambadi @malaimurasunewslive
Watch Malai Murasu Seitthigal(மாலை முரசு செய்திகள்), Tamil Nadu’s Top 24x7 Tamil News Channel, bringing the best of latest live news, breaking news, election, general, updates, headlines, crime reports, reported deep from rural and uprban. entertainment, sports, business, social media and so much more., Stay updated on the latest stories and headlines today from the worlds of politics.
Follow on:
Insta : / malaimurasutv_official
twitter : / malaimurasutv
facebook : / malaimurasu
website : http://www.malaimurasu.com
Live News : / malaimurasunewsdigital
SUBSCRIBE to get the latest news updates: / @malaimurasunewslive