Перейти к содержимому

காதல்💓என்பது…. | காதல் ♥️கவிதை | Kadhal Enbathu... | Tamil Love Poem | 112

கவிதை தேசம்

0:00 / 0:00

காதல்💓என்பது…. | காதல் ♥️கவிதை | Kadhal Enbathu... | Tamil Love Poem | 112

244 просмотра · 1 мес. назад
கவிதை தேசம்
204 подписчика
244 просмотра · 1 мес. назад
உண்மைக் காதல் வாழ்க்கையில் வருவதில்லை, வாழ்க்கையையே காதலாக மாற்றிவிடும்; நிஜக் காதல் நிம்மதி தருவதில்லை, நிம்மதியை நேசமாக தந்துவிடும் என்று காதலின் ஆழத்தை விவரிக்கும் அழகான கவிதை. — கவிதை (Text Version): — 112. காதல் என்பது…. பாசம் என்பது பருவத்தில் பிறப்பதல்ல... பார்த்தவுடன் வருவதல்ல... நேசம் என்பது நேரத்தில் நிகழ்வதல்ல... நினைத்தவுடன் நிறைவதல்ல... உறவு என்பது உடலோடு ஒட்டுவதல்ல... ஒருமுறை கலப்பதல்ல.. அன்பு என்பது அருகில் இருப்பதல்ல... அப்பாலும் அழியாதது... காதல் என்பது கண்களால் காண்பதல்ல... கனவாய் காண்பது... காதல் என்பது, முகம் பார்த்து மயங்குவதல்ல... மனம் பார்த்து மருகுவது... குரல் கேட்டு குளிர்வதல்ல... குணம் பார்த்து உணர்வது... தொட்டுத் தழுவுவது மட்டும் அல்ல... தொலைவில் தனியே இருந்தும் தவிப்பது... கூடிக் கிடப்பது மட்டும் காதல் அல்ல… வேறென்ன சொல்ல? கூடாமல் இருந்தும் நினைப்பதுதான்.. வேறேன்ன என்ன சொல்ல...? காதல் வந்தால் காலம் கனமாகும்... காத்திருப்பது மனதின் இனமாகும்... இணை இல்லாத நேரமும் இரு நினைவு வந்து இளமனதை தாக்கும்… துணை இல்லாத நேசமும் துன்பம் தந்து தூரத்தில் ஏங்கும்… பேசாத மௌனமும் ஆயிரம் வார்த்தைகளாய் நெஞ்சில் ஒலிக்கும்... அதனால்தான் சொல்கிறேன்... காதல், பருவம் பார்த்து வராது... காலம் பார்த்து கரையாது... உண்மைக் காதல்... வாழ்க்கையில் வருவதில்லை, வாழ்க்கையையே காதலாக மாற்றிவிடும்! நிஜக் காதல் நிம்மதி தருவதில்லை நிம்மதியை நேசமாக தந்துவிடும்! நித்தமும் நினைவை நேரலையில் வைத்துவிடும். — 🎧 Headphones பயன்படுத்தி கேளுங்கள் ❤️ காதலை உணர்ந்து கேளுங்கள் 🔁 மீண்டும் கேட்கத் தோன்றினால் அதுதான் கவிதையின் வெற்றி KEYWORDS: tamil love poem, kadhal kavithai, tamil kavithai, tamil poetry, love poetry tamil, romantic tamil poem, kadhal enbathu, sweet love poem, kadhal varigal, feeling love lines, true love kavithai HASHTAGS: #காதல்_கவிதை #TamilLovePoem #KadhalKavithai #TamilKavithai #TamilPoetry #TamilLove.