Перейти к содержимому

திருச்சி தொட்டியம் மதுரை காளியம்மன் தேர் திருவிழா 2023

tamizh thamarai tv தமிழ் தாமரை டி.வி

0:00 / 0:00

திருச்சி தொட்டியம் மதுரை காளியம்மன் தேர் திருவிழா 2023

1 507 просмотров · 3 года назад
tamizh thamarai tv தமிழ் தாமரை டி.வி
7,82 тыс. подписчиков
1 507 просмотров · 3 года назад
திருச்சி, தொட்டியம், மதுரை காளியம்மன் திருக்கோவில் பங்குனி தேர்திருவிழா கோலாகலம்.11/04/2023 திருச்சி மாவட்டம், தொட்டியம், கௌத்தரசநல்லூர் அருள்மிகு மதுரை காளியம்மன் திருக்கோவிலில் பங்குனி தேர் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. தைத்திங்கள் இரண்டாம் நாள் பாக்கு படைத்தல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. மாசி மாதம் 30-ஆம் தேதி முதல் தட்டு சாத்துதலும், பங்குனி ஏழாம் தேதி இரண்டாவது தட்டு சாத்துதல் மற்றும் பூச்சொரிதல் விழா, பங்குனி 13-ஆம் தேதி மூன்றாவது தட்டு சாத்துதல் விழாவும், பங்குனி 14-ஆம் தேதி அம்மனுக்கு காப்பு கட்டுதல், கதவடைத்தல் நிகழ்ச்சியும், பங்குனி 15-ஆம் தேதி கதவடைத்த கோவிலுக்கு ஆயிரம் பானை கொண்டு பொங்கலிட்டு படைக்கும் நிகழ்ச்சியும், பங்குனி 20-ஆம் தேதி நான்காவது தட்டு சாத்துதல், திருக்கோவில் கதவு திறந்து அம்மன் தரிசனம் நிகழ்வு நடைபெற்றது. பங்குனி மாதம் 21-ஆம் தேதி அன்று திருத்தேர் தலை அலங்காரம் நடைபெற்று, திருத்தேரானது தொட்டியம் நகர் பகுதியில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பின்னர் வான பட்டறை வந்தடைந்தது. சுமார் 27-அடி உயரமுள்ள சிறிய தேரும், 30-அடி உயரமுள்ள பெரிய தேர் என இரண்டு தேர்கள் தலைஅலங்காரம் செய்யப்பட்டு, சிறிய தேரில் உற்சவ செட்டிஅம்மனும், பெரிய தேரில் பனை ஓலையால் வடிவமைக்கப்பட்ட காளியம்மன் ஒரு புறமும், மறுபுறம் ஓலை பிடாரி அம்மனும் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இரண்டு திருத்தேரையும் 18-பட்டி கிராம மக்கள் இளைஞர்கள், வாலிபர்கள், ஒன்றிணைந்து தோளிலும், தலையிலும் சுமந்து படி, பக்தி பரவசத்துடன் தொட்டியம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பின்னர் வானபட்டறை கொண்டு வந்தனர். திருத்தேரானது வானப்பட்டறை வந்தவுடன் அன்று இரவு வான வேடிக்கை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதில் பலவண்ண வான வேடிக்கைகள் சுமார் 2-மணி நேரத்திற்கு மேலாக வானில் வெடித்து சிதறும் நிகழ்வு அற்புதமாக நடைபெற்றது. பங்குனி தேர் திருவிழாவை முன்னிட்டு திருச்சி மாவட்ட காவல் துறை சார்பில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சிறப்பு அதிரடிப்படையினர் காவல் துறையினருடன் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வான வேடிக்கை நிகழ்வு முடிந்த மறுநாள் அருள்மிகு மதுரை காளியம்மனுக்கு பக்தர்கள் எருமை கிடாக் கன்றுகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். பங்குனி தேர் திருவிழா ஏற்பாட்டினை இந்து சமய அறநிலை துறை, ஆலய நிர்வாகத்தினர், 18-பட்டி கிராம மக்கள், ஊர் பெரியவர்கள், ஆன்மீக அன்பர்கள், உபயதாரர்கள், விழா குழுவினர் ஒன்றிணைந்து சிறப்பான முறையில் தேர் திருவிழாவை ஏற்பாடு செய்திருந்தனர். தேர் திருவிழாவையொட்டி தொட்டியம் நகர் பகுதி முழுவதும் ஆங்காங்கே ஆன்மீக அன்பர்கள், உபயதாரர்கள், விழா குழுவினர் மூலம் நீர், மோர், பானகம், அன்னதானம் ஆகியவை சிறப்பாக வழங்கப்பட்டது. பங்குனி தேர் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரளாக கலந்து கொண்டு மதுரை காளியம்மனை வழிபட்டனர்.