RIP REVALDO♥️🐘😢பிரியா விடைகொடுக்கிறோம் எங்கள் பிரியமானவனே-வாழைதோட்டம் மாவனல்லாமக்களின் கண்ணீர்அஞ்சலி
மனிதன் ஒரு வழித்தடம்
0:00 / 0:00
RIP REVALDO♥️🐘😢பிரியா விடைகொடுக்கிறோம் எங்கள் பிரியமானவனே-வாழைதோட்டம் மாவனல்லாமக்களின் கண்ணீர்அஞ்சலி
5 388 просмотров · 6 месяцев назад
மனிதன் ஒரு வழித்தடம்
506 подписчиков
5 388 просмотров · 6 месяцев назад
ஒரு சுவாரசியமான கதையை பத்தி யாராவது சொன்ன உடனே அந்த கதையை தேடி பிடிச்சு படிக்கிறமாதிரி, ஒரு சுவாரசியமான படத்தை பத்தி யாராவது சொன்ன உடனே அந்தபடத்தை தேடி பிடிச்சு பார்க்கிற மாதிரி,
சமீபத்தில ஒரு யானைக்கும் அந்த ஊர் மக்களுக்கும் உள்ள பேரன்பை பத்தி கேள்விப்பட்டு அந்த மனிதர்களையும் அந்த யானையை பத்தியும் தெரிஞ்சிக்கறதுக்கான பயணம் தான் இந்த பயணம்.
ஊட்டி கல்லட்டி வழியா மசினகுடி போற வழியில இருக்கிறதான் வாழைத்தோட்டங்கிற ஊர் ஆதி வாசிகள் இருளர்கள்னு பூர்வகுடிகள் வாழக்கூடிய ஒரு அழகான மலை கிராமம். இந்த ஊரோட செல்ல பிள்ளைதான் ரிவோல்டோ ங்கிற இந்த யானை.
இந்த யானையோட தும்பிக்கைல ஏற்ப்பட்ட எதோ பிரச்சனையால தும்பிக்கைல கொஞ்சம் பகுதி சேதாரம் ஆயிடுச்சு, மற்ற யானைகளோட தும்பிக்கையை விட ரிவோல்டோ தும்பிக்கை நீளம் குறைவு தான்.
இந்த யானையை பத்தி தெருஞ்சுக்கனும்னா இந்த யானை நமக்கு அறிமுகமாக காரணமாக இருந்த மார்க் ஐ பத்தி தெரிஞ்சுக்கணும்.
மார்க் இந்த பகுதியில ரொம்ப காலமா வாழ்ந்தவர், இயற்கை ஆர்வலர், யானைகள் மேல பேரன்பு கொண்டவர். ரிவோல்டோ யானைக்கு உலக கால் பந்து விளையாட்டு வீரரான ரிவோல்டோ பெயரை வச்சதும் அவர்தான்னு சொல்றாங்க. ரிவோல்டோவட தும்பிக்கைகள் பாதிக்கப்பட்டு இருந்ததால மார்க் ரிவால்டோவ ரொம்பவே அக்கறையோடு கவனிச்சிருக்காரு.
ரிவோல்டோ மார்க் இருக்கற இடத்துக்கு வர்றதும் அவரோட பழகறதும் ரொம்ப வாடிக்கையான விசயம்ன்னு சொல்றாங்க.
ஒரு தடவ மார்க்கிட்ட எவ்வளவு நாள் யானைகளை இப்படி பார்ப்பீங்கனு கேட்டதுக்கு " ஒன்னு நான் இருக்கறவரைக்கும், இல்ல அந்த யானைகள் இருக்கறவரைக்குன்னு சொல்லிருக்காரு. மார்க்கோட செல்ல பிள்ளைதான் இந்த ரிவோல்டோ.
மார்க் இறந்து பிறகு பலநாட்கள் ரிவோல்டோ அவர் வாழ்ந்த இடத்துக்கு வந்து போனதா சொல்றாங்க.
அதுக்கு அப்புறம் வாழைத்தோட்டம், மாவனல்லா அதை சுற்றியுள்ள பகுதிகள் ரிவோல்டோவோட வாழ்விடமா மாறிப்போச்சு. ஊருக்குள்ள ரிவோல்டோ சுத்தி திரிஞ்சாலும் யாரையும் எதுவும் பண்றதில்ல அதனால அந்த ஊரோட செல்லப்பிள்ளையா ரிவோல்டோ மாறிட்டதா சொல்றாங்க.
கொஞ்சநாள்ல சமூக வலைதளங்கள்ல நிறைய செய்திகள் ரிவோல்டோ வ பத்தி வர ஆரம்பிச்சுது.ரிவோல்டோ யானைகள்ல ஒரு VIP ஆயிட்டான்.
சமீபத்தில ஒரு 3 மாசமா ரிவோல்டோ எங்க போனானு தெரியல, திடிர்னு ஒரு செய்தி வருது ரிவோல்டோ இறந்துட்டான்னு.
கடைசியா அவன் வாழ்ந்த வாழைத்தோட்டம் பகுதியை
ஒட்டியுள்ள காட்டுல உடல்நிலை சரியில்லாம ரிவோல்டோ உயிரிழந்திருக்கான்
வாழைத்தோட்டம் மக்களும், மாவனல்லா மக்களும், கனத்த இதயத்தோட ரிவோல்டோவுக்கு தங்களோட கண்ணீர் அஞ்சலியை செலுத்தி இருக்காங்க.
"மரணத்தின் முடிவில்தான் பேரன்பின் அத்தியாயங்கள் நீள்கிறது !
ஒருமுறை கூட நான் ரிவால்டாவை பார்த்ததில்லை ஆனால் அவனோடு வாழ்ந்த அனுபவத்தை இந்த பயணம் கொடுத்தது.
With Love
Revaldo ❤️
இந்த உலகம் அனைத்து உயிரினங்களுக்கும் சொந்தமானது. மனிதர்களை தண்டி மற்ற உயிரினங்களை பற்றிய தகவல்கள்களை கொண்ட தளம்
THANK YOU : YOU TUBE
SUBSCRIBE :👉 https://youtube.com
#revaldoelephant #riprevaldo #revaldo #elephant #masinakudi #mavanalla #saveelephant #palluyirdesam #elephantlife #mudhumalai #theppakadu #mudhumalaitigerreserve