நாலூர் மயானம் ஞானபரமேஸ்வரர் கோயில் வாழும் காலத்தில் நமக்கு ஏற்படும் இடர்கள் நீங்க வழிபட வேண்டிய தலம்
ஆன்மீகத்துடன் நட்பு
0:00 / 0:00
நாலூர் மயானம் ஞானபரமேஸ்வரர் கோயில் வாழும் காலத்தில் நமக்கு ஏற்படும் இடர்கள் நீங்க வழிபட வேண்டிய தலம்
17 228 просмотров · 3 года назад
ஆன்மீகத்துடன் நட்பு
112 тыс. подписчиков
17 228 просмотров · 3 года назад
நாலூர் மயானம் ஞானபரமேஸ்வரர் கோயில்
மூலவர்: ஞானபரமேஸ்வரர்
அம்மன்: ஞானாம்பிகை
தீர்த்தம்: ஞானதீர்த்தம்
தலவிருட்சம்: வில்வம்
புராண பெயர்: நாலூர் மயானம்
ஊர்: திருமெய்ஞானம்
மாவட்டம்: திருவாரூர்
தலபெருமை
இது நான்கு மயானங்களுல் ஒன்று. (கடவூர் மயானம், கச்சி மயானம், காழி மயானம் மற்றவைகளாகும்)
தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நான்கு தலங்கள் மயானம் என்று அழைக்கப்படுகின்றன. அவையாவன - 1)நாலூர் மயானம், 2) திருக்கடவூர் மயானம், 3) காழி மயானம், 4) கச்சி மயானம். இவற்றில் முதல் மூன்றும் பாடல் பெற்ற தலங்கள். நான்காவது கச்சி மயானம் ஒரு தேவார வைப்புத் தலம்.
கும்பகோணம் - திருச்சேறை - குடவாசல் வழித்தடத்தில் திருச்சேறை என்ற பாடல் பெற்ற தலத்தை அடுத்து வருவது நாலூர் என்ற ஊர். இது ஒரு தேவார வைப்புத் தலம். இறைவன் பெயர் பலாசவனேஸ்வரர். நாலூர் என்ற இந்த ஊரைக் கடந்து அத்திக்கடை பாலத்திற்கு முன்னால் இடதுபுறம் பிரியும் சாலையில் சிறிது தூரம் சென்றால் நாலூர் மயானம் என்ற இத்தலம் இருக்கிறது. இக்காலத்தில் இவ்விடம் திருமெய்ஞானம் என்று அழைக்கப்படுகிறது. இந்த திருமெய்ஞானம் கிராமத்தில் அமைந்துள்ள ஞானபரமேஸ்வரர் திருக்கோவிலே திருநாலூர் மயானம் என்று திருஞானசம்பந்தர் பதிகம் பெற்ற பாடல் பெற்ற தலம். நான்கு வேதங்களாலும் வழிபடப்பட்ட இத்தலம் சோழர் காலத்தில் சதுர்வேதிமங்கலம் என்று வழங்கியது.
ஆலய அமைப்பு
சோழர் காலத்து கட்டிடக் கலைப்பாணியில் அமைந்த இககோவில் கிழக்கு நோக்கி ஒரு முகப்பு வாயிலுடன் அமைந்துள்ளது. முகப்பு வாயிலுக்கு வெளியே நந்தி மண்டபமும், பலிபீடமும் உள்ளன. கோவிலுக்கு வெளியே ஞானதீர்த்தம் உள்ளது. வாயில் வழி உள் நுழைந்தால் வெளிப் பிரகாரம் உள்ளது. பிரகாரம் சுற்றி வரும்போது மேற்குச் சுற்றில் அமிர்தகடேஸ்வரர், சட்டநாதர்,ஏகாம்பரேஸ்வரர், ஸ்ரீவீழிஅழகர் ஆகிய சிவலிங்கத் திருமேனிகள் வரிசையாக உள்ளன. அதையடுத்து நாகாராஜா,சண்டிகேஸ்வரி, புதிய தட்சிணாமூர்த்தி,ஆத்மலிங்கம் ஆகியவற்றைக் காணலாம். வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமானின் சந்நிதியும் இப்பிரகாரத்தில் உள்ளது. வடக்குப் பிரகாரத்தில் கோஷ்டத்தில் விஷ்ணு துர்க்கையைக் காணலாம். நவக்கிரக சந்நிதியும் வெளிப் பிரகாரத்தில் உள்ளது.
பிரகாரச் சுற்று முடிந்து கருவறை மண்டப வாயில் வழி உள்ளே நுழைந்தால் மூலவர் கருவறையில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஆபத்தம்ப முனிவர், நான்கு வேதங்களும் வழிபட்ட சிறப்பைப் பெற்ற தலம். இறைவன் கருவறை விமானம் உருண்டை வடிவத்திலுள்ளது. அம்பாள் தெற்கு நோக்கி தரிசனம் தருகிறாள்.
தல சிறப்பு
திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளியுள்ள இப்பதிகம் 2-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. இந்த ஊரைச் சேர்ந்தவர்கள் அடிக்கடி இத்தல இறைவனின் திருமேனி மேல் பாம்பு ஊர்வதாகக் கூறி, அதற்கு ஞானசம்பந்தரின் பதிகத்தின் முதல் பாடலில் வரும் "பாலூரும் மலைப்பாம்பும் பனிமதியும் மத்தமும் மேலூரும் செஞ்சடையான்" என்னும் இவ்வூர்த் தேவாரப் பகுதியைக் காட்டுவர். இக்கோவிலின் அருகே நாலூர் என்ற வைப்புத் தலம் உள்ளது.
சோழர் காலக் கல்வெட்டுகள் 23 படி எடுக்கப்பட்டுள்ளன.
நடைதிறப்பு
ஆலயத்திற்கு வரும் முன் முதல் நாள் கட்டாயம் ஆலய அர்ச்சகரை தொடர்பு கொண்டு வரவும்.
ஆலய அர்ச்சகர் தமிழ்மணி குருக்கள் தொலைபேசி எண்கள்
+919080090339 மற்றும் +919443974854
மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்
+917994347966
அமைவிடம்
கும்பகோணத்தில் இருந்து குடவாசல் செல்லும் சாலையில் திருச்சேறை அடுத்து நாலூர் தேவார வைப்புத் தலம் வரும் அந்த நாலூர் தாண்டி அத்திகடை பாலம் என்ற இடத்தில் இறங்கி அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் நடந்து சென்று ஆலயம் அடையலாம். குடவாசலில் இருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. குடவாசலில் இருந்து ஆட்டோ வசதி உள்ளது.
if you want to support us via UPI id
9655896987@ybl
Join this channel to get access to perks:
/ @mathinam2301
தமிழ்