Перейти к содержимому

கணவன் - மனைவி ஒற்றுமைக்கும், பிரிந்த கணவன் - மனைவி ஒன்று சேரவும் படிக்க வேண்டிய பதிகம்

Athma Gnana Maiyam

0:00 / 0:00

கணவன் - மனைவி ஒற்றுமைக்கும், பிரிந்த கணவன் - மனைவி ஒன்று சேரவும் படிக்க வேண்டிய பதிகம்

82 992 просмотра · 4 месяца назад
Athma Gnana Maiyam
4,35 млн подписчиков
82 992 просмотра · 4 месяца назад
காவி யுடுத்துந் தாழ்சடை வைத்துங் காடுகள் புக்குந் ...... தடுமாறிக் காய்கனி துய்த்துங் காயமொ றுத்துங் காசினி முற்றுந் ...... திரியாதே சீவ னொடுக்கம் பூத வொடுக்கம் தேற வுதிக்கும் ...... பரஞான தீப விளக்கங் காண எனக்குன் சீதள பத்மந் ...... தருவாயே பாவ நிறத்தின் தாருக வர்க்கம் பாழ்பட வுக்ரந் ...... தருவீரா பாணிகள் கொட்டும் பேய்கள் பிதற்றும் பாடலை மெச்சுங் ...... கதிர்வேலா தூவிகள் நிற்குஞ் சாலி வளைக்குஞ் சோலை சிறக்கும் ...... புலியூரா சூரர் மிகக்கொண் டாட நடிக்குந் தோகை நடத்தும் ...... பெருமாளே. மண்ணின் நல்ல வண்ணம் வாழல் ஆம், வைகலும்; எண்ணின் நல்ல கதிக்கு யாதும் ஓர் குறைவு இலை கண்ணின் நல்ல(ஃ)து உறும் கழுமல வள நகர் பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே! 1 போதை ஆர் பொன் கிண்ணத்து அடிசில் பொல்லாது எனத் தாதையார் முனிவு உற, தான் எனை ஆண்டவன்; காதை ஆர் குழையினன்; கழுமல வள நகர் பேதையாள் அவளொடும் பெருந்தகை இருந்ததே! 2 தொண்டு அணைசெய் தொழில்-துயர் அறுத்து உய்யல் ஆம் வண்டு அணை கொன்றையான், மதுமலர்ச் சடைமுடி; கண் துணை நெற்றியான்; கழுமல வள நகர் பெண் துணை ஆக ஓர் பெருந்தகை இருந்ததே! 3 அயர்வு உளோம்! என்று நீ அசைவு ஒழி, நெஞ்சமே! நியர் வளை முன்கையாள் நேரிழை அவளொடும், கயல் வயல் குதிகொளும் கழுமல வள நகர் பெயர் பல துதிசெய, பெருந்தகை இருந்ததே! 4 அடைவு இலோம் என்று நீ அயர்வு ஒழி, நெஞ்சமே! விடை அமர் கொடியினான், விண்ணவர் தொழுது எழும், கடை உயர் மாடம் ஆர் கழுமல வள நகர் பெடை நடை அவளொடும் பெருந்தகை இருந்ததே! 5 மற்று ஒரு பற்று இலை, நெஞ்சமே! மறைபல கற்ற நல் வேதியர் கழுமல வள நகர், சிற்றிடைப் பேர் அல்குல் திருந்திழை அவளொடும் பெற்று எனை ஆள் உடைப் பெருந்தகை இருந்ததே! 6 குறைவளை வதுமொழி குறைவு ஒழி, நெஞ்சமே! நிறைவளை முன்கையாள் நேரிழை அவளொடும், கறைவளர் பொழில்அணி கழுமல வளநகர்ப் பிறைவளர் சடைமுடிப் பெருந்தகை இருந்ததே! 7 அரக்கனார் அரு வரை எடுத்தவன்-அலறிட, நெருக்கினார், விரலினால்; நீடு யாழ் பாடவே, கருக்கு வாள் அருள் செய்தான்; கழுமல வள நகர் பெருக்கும் நீரவளொடும் பெருந்தகை இருந்ததே! 8 நெடியவன், பிரமனும், நினைப்பு அரிது ஆய், அவர் அடியொடு முடி அறியா அழல் உருவினன்; கடி கமழ் பொழில் அணி கழுமல வள நகர் பிடி நடை அவளொடும் பெருந்தகை இருந்ததே! 9 தார் உறு தட்டு உடைச் சமணர் சாக்கியர்கள் தம் ஆர் உறு சொல் களைந்து, அடி இணை அடைந்து உய்ம்மின்! கார் உறு பொழில் வளர் கழுமல வள நகர் பேர் அறத்தாளொடும் பெருந்தகை இருந்ததே! 10 கருந் தடந் தேன் மல்கு கழுமல வள நகர்ப் பெருந்தடங் கொங்கையொடு இருந்த எம்பிரான் தனை அருந்தமிழ் ஞானசம்பந்தன செந்தமிழ் விரும்புவார் அவர்கள், போய், விண்ணுலகு ஆள்வரே. 11