Перейти к содержимому

கலிலேயா கானா ஊர் கலியாணம் | Your Miracle Begins | Tamil Christian Wedding Song

YESUVIN KURAL

0:00 / 0:00

கலிலேயா கானா ஊர் கலியாணம் | Your Miracle Begins | Tamil Christian Wedding Song

2 001 просмотр · 12 дней назад
YESUVIN KURAL
122 подписчика
2 001 просмотр · 12 дней назад
இப்பாடல் வெளிப்படுத்தும் சத்தியங்கள்: “குணசாலியான ஸ்திரீயைக் கண்டுபிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்களைப்பார்க்கிலும் உயர்ந்தது. குணசாலியான ஸ்திரீ தன் புருஷனுக்குக் கிரீடமாயிருக்கிறாள். சௌந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண்; கர்த்தருக்குப் பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள்.” அப்படியானால், யார் இந்தக் குணசாலியான ஸ்திரீ? அவள், கர்த்தருக்குப் பயப்படுகிறதான ஸ்திரீ. எனவே, ஒருவன் தன் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும்போது, முதன்மையாகக் கவனிக்க வேண்டிய தகுதி, தான் தேர்ந்தெடுக்கிறவள் கர்த்தருக்குப் பயப்படுகிறவளாக இருக்கிறாளா என்பதுதான். அப்படிப்பட்டவள், குடும்ப வாழ்க்கைக்குத் தேவையான குணநலன்களையும், நற்பண்புகளையும் தன்னகத்தே கொண்டிருப்பாள். வெளிப்புற அழகைக் காட்டிலும், தேவபயம் நிறைந்த இருதயமும் நற்குணங்களுமே ஒரு ஸ்திரீயின் சிறப்பாகும். அப்படியானால், இத்தகைய குணசாலியான ஸ்திரீயை எவ்வாறு எவ்வாறு அடையாளம் கண்டு வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுப்பது? தொடர்ந்து வாசியுங்கள். ஆபிரகாம் தன் குமாரனாகிய ஈசாக்குக்கு மனைவியைத் தெரிந்துகொண்ட விதம், நாமும் நம் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதற்கு ஒரு சிறந்த உதாரணமாக வேதத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. நாமும், எந்த சூழ்நிலையிலும் கர்த்தரை அறியாத அந்நிய ஸ்திரீகளையோ, அவிசுவாசிகளையோ விவாகம் செய்யக்கூடாது. ஏனெனில், “அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக” என்று வேதம் நம்மை எச்சரிக்கிறது (II கொரிந்தியர் 6:14). நாம் நம்மை முழுமையாக தேவனுடைய சித்தத்திற்கு ஒப்புக் கொடுக்கும்போது, கர்த்தரே நமக்கு முன்பாகத் தமது தூதனை அனுப்பி, மனிதர்களுடைய விருப்பங்களுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் அப்பாற்பட்டு, நம்முடைய திருமண காரியங்கள் கைகூடுவதற்கு நம்மை வழிநடத்துகிறவராயிருக்கிறார். நிச்சயமாக, “இந்தக் காரியம் கர்த்தரால் வந்தது” என்று மணமகளும், பெண் வீட்டாரும் ஒப்புக்கொண்டு, வாழ்த்துதலுடன், குறித்தவேளையில், திருமணம் அற்புதமாக நடந்தேறும் படி கர்த்தர் உதவி செய்வார். கலிலேயா நாட்டிலுள்ள கானா ஊரிலே ஒரு கலியாணம் நடந்தது. அங்கே, திராட்சரசம் குறைவுபட்டபோது, குறித்த நேரத்தில், திராட்சரசம் தண்ணீராய் மாறி அற்புதம் நடப்பதற்கு முக்கிய காரணம் இயேசுவும் அவருடைய சீஷரும் அந்தக் கலியாணத்துக்கு அழைக்கப்பட்டிருந்ததே. அதேபோல, நம்முடைய திருமண நிகழ்வுகளிலும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிரசன்னம் இருக்குமானால், ஏற்படும் எல்லாக் குறைவுகளும் நீங்க, அற்புதம் நடக்கும், கர்த்தருடைய பெரிதான மகிமை வெளிப்படும். நம்மைச் சுற்றியுள்ளவர்கள் கர்த்தரை விசுவாசிப்பதற்கு அது ஏதுவாக அமையும். எனவே, நம்முடைய திருமண நிகழ்ச்சிகளில் இயேசுவின் பிரசன்னத்திற்காக நாம் அதிகமாக ஜெபிப்போம். புருஷர்கள், தங்கள் மனைவிகளில் அன்புகூரவேண்டும், அவர்கள்மேல் கசந்து கொள்ளக்கூடாது. மனைவிகள் கர்த்தருக்கு ஏற்கும்படி, தங்கள் புருஷருக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்பது தெய்வீக கட்டளை. ஆகையால், குடும்ப வாழ்க்கையில் இருக்கிற ஒவ்வொருவரும் இக்கட்டளைகளை உணர்ந்து, அவற்றின்படி நடந்து, தேவனுக்குப் பிரியமான குடும்ப வாழ்க்கையை வாழ்வோம். நாம் பலமுறை கர்த்தரை விட்டு பின்வாங்கி, சோரம் போனோம். அப்படியிருந்தும், அவருடைய கிருபையின்/இரக்கத்தின் அடிப்படையில், நித்திய விவாகத்திற்கென்று உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்” (Betrothal) என்றும், “மணவாளன் மணவாட்டியின்மேல் மகிழ்ச்சியாயிருப்பதுபோல, உன் தேவன் உன்மேல் மகிழ்ச்சியாயிருப்பார்” என்றும் கர்த்தர் நமக்கு வாக்குரைத்திருக்கிறார். இங்கு “நியமித்துக்கொள்ளுவேன்” என்பது நித்தியமானதும், மாற்றப்பட முடியாததுமான உறவைக் குறிக்கிறது. கர்த்தர் நம்மைத் தம்முடைய மணவாட்டியாக நிச்சயித்திருப்பது எவ்வளவு பெரிய பாக்கியம் என்பதை நாம் ஒருகணம் சிந்தித்துப் பார்ப்போம்! இந்த மகத்தான பாக்கியத்தைப் பெற்ற நாம், இந்த உலகில் எப்படிப்பட்ட பரிசுத்தமான வாழ்க்கையை வாழ வேண்டும்! நீதியிலும், பரிசுத்தத்திலும், பிறரை நேசிப்பதிலும், கிறிஸ்துவுக்கேற்ற நற்குணங்களிலும் எவ்வளவாக வளர வேண்டும்? சிந்திப்போம்! செயல்படுவோம்!! ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணத்துக்காக நம்மை ஆயத்தம் பண்ணிக்கொள்வோம்!!! பக்திவிருத்தி தரும் புதிய பாடல்களுக்கு எங்கள் சேனலை Subscribe செய்து, Bell பட்டனை அழுத்தி இணைந்திருங்கள்! SONG LYRICS கலிலேயா கானா ஊர் கலியாணம் இயேசுவும் சீஷரும் அழைக்கப்பட்டனரே! தண்ணீரைத் திராட்சரசமாய் மாற்றி மகிமையை வெளிப்படுத்தினாரே! இந்நாளினிலும் உம் ஆசிகள் நல்கி குறைவுகள் நீக்கி அற்புதம் செய்யுமே! 1. குணசாலியான ஸ்திரீயைக் கண்டுபிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்களிலும் உயர்ந்ததே! தன் புருஷனுக்குக் கிரீடமாய் இருக்கிறாளே! கர்த்தருக்குப் பயப்படுகிற அவளே புகழப்படுவாளே! 2. எம்மை நேர்வழியாய் நடத்தி வந்த கர்த்தரே உம்மை நாங்கள் என்றும் ஸ்தோத்தரிக்கிறோமே! இந்தக் காரியம் கர்த்தரால் வந்ததே! எங்கள் சகோதரியே, நீ கோடாகோடியாய்ப் பெருகுவாயே! 3. புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்களே அவர்கள்மேல் கசந்துகொள்ளாதிருங்கள் மனைவிகளே, கர்த்தருக்கு ஏற்கும்படி என்றுமே உங்கள் புருஷருக்குக் கீழ்ப்படியுங்களே 4. நித்திய விவாகத்துக்கென்று உன்னை எனக்கு நியமித்துக் கொள்ளுவேனே! மணவாளன் மணவாட்டியின்மேல் மகிழ்வதுபோலவே உன் தேவன் உன்மேல் மகிழ்ச்சியாயிருப்பாரே! AI SONG எழுதியவர் &தயாரிப்பு: Bro.Morris வீடியோ எடிட்டிங்க்: Bro.JamesFernandes #கானாஊர்கலியாணம் #குணசாலியானஸ்திரீ #இந்தக்காரியம்கர்த்தரால்வந்தது #நீகோடாகோடியாய்ப்பெருகுவாயாக #நித்தியவிவாகம் #கிறிஸ்தவதிருமணம் #திருமணபாடல் #கிறிஸ்தவதிருமணப்பாடல் #VirtuousWife #CanaWedding #MiracleBegins #WeddingAtCana #ChristianWeddingSong #ChristianWedding #TamilChristianWedding #YesuvinKural #BroMorris