என்ன கொடுப்பேன் நான் – Enna Koduppen Naan– (Cover Song) - Tamil Christian Song
Consecration & Millennium
0:00 / 0:00
என்ன கொடுப்பேன் நான் – Enna Koduppen Naan– (Cover Song) - Tamil Christian Song
686 просмотров · 5 дн. назад
Consecration & Millennium
147 подписчиков
686 просмотров · 5 дн. назад
என்ன கொடுப்பேன் நான் – Enna Koduppen Naan– (Cover Song) - Tamil Christian Song
Sung by : Br. Jackson
Music by : Br. Joe
Credit: This song is a modified version of Tamil Christian song “Enna Koduppen Naan” written by Sis. Sheela Edward, music by Bro. Solomon Augustine and sung by Sis. Christina Beryl Edward from the Album «Roeh (My Shepherd ) Vol 1 ”. The lyrics were modified to represent the complete surredering life of the consecrated Christian and giving all his 100% to God and Jesus.
நன்றி: இந்தப் பாடல், Sis. Sheela Edward எழுதிய, Bro. Solomon Augustine இசையமைத்த, Sis. Christina Beryl Edward பாடிய (Roeh (My Shepherd) Vol 1) எனும் இசைத்தொகுப்பில் இடம்பெற்ற ‘என்ன கொடுப்பேன் நான்’ என்ற தமிழ் கிறிஸ்தவப் பாடலின் மாற்றியமைக்கப்பட்ட வடிவமாகும். தேவனுக்கு தம்மை முழுமையாக அர்ப்பணித்த ஒரு கிறிஸ்தவர், தமக்குள்ள அனைத்தையும் நூறு சதவீதம் தேவனுக்கும் இயேசு கிறிஸ்துவுக்கும் ஒப்புக்கொடுக்கும் நிலையை வெளிப்படுத்தும் வகையில் இதன் வரிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
Lyrics:
என்ன கொடுப்பேன் நான் உமக்கு என்ன கொடுப்பேனோ - 2
என்னைத் தேடி வந்த தேவனும் நீரல்லவோ
என்னை மீட்டெடுத்த தேவனும் நீரல்லவோ
என்ன கொடுப்பேன், நான் என்ன கொடுப்பேன் – 2
என்ன கொடுப்பேன் நான் உமக்கு என்ன கொடுப்பேனோ - 2
ஆபேலைப் போல் மந்தையின் தலையீற்றையோ?
நோவாவைப் போல் தகன பலிகளையோ?
ஆபிரகாமைப் போல் ஒரே நேச மகனையோ? – 2 - என்ன கொடுப்பேன்
என் தாய் என்னை பாவத்திலே கர்ப்பந்தரித்தாள்
என் இருதயமோ திருக்குள்ளதும் கேடுமானது
என் தேவனோ நீர் நீதியினில் பிரியமுள்ளவரே - 2 - என்ன கொடுப்பேன்
தேவனுடைய பைத்தியம் என் ஞானத்திலும் பெரிது
தேவனுடைய பலவீனம் என் பெலத்திலும் பெரிது
தேவனுடைய அற்பம் என் சம்பத்திலும் பெரிது – 2 - என்ன கொடுப்பேன்
சிறு குழந்தை போலவே என்னை தாழ்த்துகிறேன் நான்
நீர் வசித்திடவே இருதயத்தை திறந்திடுவேன் நான்
என்னை முழுதும் தருகின்றேன் உம் மகிமைக்கே - 2
என்னைக் கொடுப்பேன் நான் என்னை கொடுப்பேன் - 2
என்னையே நான் தருகின்றேன், என்னையே நான் தருகின்றேன் - 2
என்னைத் தேடி வந்த தேவனும் நீரல்லவோ
என்னை மீட்டெடுத்த தேவனும் நீரல்லவோ
என்னைக் கொடுப்பேன் நான் என்னைக் கொடுப்பேன் – 2
என்னைக் கொடுப்பேன் நான் உமக்கு என்னை கொடுப்பேன் நான் – 2