வரமழை பொழிகின்றாயே வாராஹித் தாயே - திரு கி.பாலாஜி -15.10.2026 - திரு பொரும்பூர் சிவராமன் ராஜகோபாலன்
Yamuna Raju
0:00 / 0:00
வரமழை பொழிகின்றாயே வாராஹித் தாயே - திரு கி.பாலாஜி -15.10.2026 - திரு பொரும்பூர் சிவராமன் ராஜகோபாலன்
849 просмотров · 4 дня назад
Yamuna Raju
2 тыс. подписчиков
849 просмотров · 4 дня назад
நவராத்திரி 2026 பாடல் 9
வாராஹித் தாயே
ராகம்: அம்ருதவர்ஷிணி
வர மழை பொழிகின்றாயே
வாராஹித் தாயே
வந்தனை புரிவோர்க்கெல்லாம்
வளங்களை அருள் வாயே
(வரமழை)
திரும்பிய திசைகளில் எல்லாம்
நின் திருவுரு காண வைத்தாயே
வரம்புகள் இல்லா வகையில்
கவி பாட வைத்தருள்கின்றாயே
நாடி நரம்புகள் எல்லாம்
நல்லிசையினை ஓட வைத்தாயே
பாடிப் பணிய வைத்தாயே
நின் பதங்கள் காண வைத்தாயே
(வரமழை)
அஞ்சும் மனங்களில் எல்லாம்
வீரம் விளையவைத் தாயே
ஆறுதலென்றுமுன் நாமம்
தனிலுள்ளதை உணரவைத்தாயே
இகபர சுகங்களை எல்லாம்
ஈவது நீயே தாயே
இன்னருளீயும் துர்க்கை
அன்னையின் முன்நின்றாயே
(வரமழை)
**********************************
பாடல் இயற்றியவர் :-
திரு கி.பாலாஜி
15.10.2026
பஞ்சமி நவராத்திரி
பாடியவர் :-
திரு பொரும்பூர் சிவராமன் ராஜகோபாலன் .
18-10-2026
காலை 10.45