உங்களுக்கு ஒருவர் ஸலாம் சொன்னால் அமைதியும் நிம்மதியும் கிடைக்கிறதா? 31 July 2026
BMK.MANBAYEE
0:00 / 0:00
உங்களுக்கு ஒருவர் ஸலாம் சொன்னால் அமைதியும் நிம்மதியும் கிடைக்கிறதா? 31 July 2026
123 просмотра · 1 месяц назад
BMK.MANBAYEE
1,27 тыс. подписчиков
123 просмотра · 1 месяц назад
உங்களுக்கு ஒருவர் ஸலாம் சொன்னால் அமைதியும் நிம்மதியும் கிடைக்கிறதா?
===================================
ஸலாம் எனும் சொல்லுக்கு அமைதி எனும் பொருள் இருந்தாலும் எல்லோரும் எதிர்பார்க்கும் அமைதி எல்லோருக்கும் கிடைப்பதில்லை.
ஆனால் ஒருவர் அஸ்ஸலாமு அலைக்கும் என்று சொல்லும் பொழுது சொல்கிறவரின் உள்ளத்தில் இருந்து அமைதி, கேட்டவரின் உள்ளத்திற்கு சென்று சேர வேண்டும்; அதுவே ஸலாம் சொல்வதின் உண்மையான நோக்கம்.
வ அலைக்கும் ஸலாம் என்று அவர் பதில் சொல்லும் பொழுது சொல்லுகிறவரின் உள்ளத்தில் இருந்து அமைதி, ஸலாம் சொன்னவரின் உள்ளத்திற்கு சென்றடைகிறது.
இரண்டு இதயங்கள் அமைதியை பரிமாறிக் கொள்கிறது என்பதே உண்மை!
நாம் எந்த சப்தங்களையும் கேட்காமல் இருப்பதாலும் நாம் பேசாமல் இருப்பதாலும் அங்கே நிலவுகிற அமைதி, அமைதி அல்ல! இது வெளிப்புற அமைதி!
நாம் ஒவ்வொருவரும் எதிர்பார்ப்பது உள்ளத்திற்குள் அமைதியை தான்!
உள்ளத்திற்குள் அமைதி இல்லை என்றால் உடலிலும் அமைதி ஏற்படாது!
எனவே உள்ளத்திலும் உடலிலும் அமைதி இல்லாத போது உங்களால் உங்களை எப்படி உணர முடியும்?
அமைதியாக இருக்கும் பொழுது தானே ஒன்றைக் குறித்து அறிய முடியும்?
மேலும் உடலிலும் உள்ளத்திலும் அமைதி இல்லாத போது உயிர் மட்டும் எப்படி அமைதியாக இருக்கும்? அதுவும் அமைதி இல்லாமல் தரையில் எரியப்பட்ட மீனைப் போல் துடித்துக் கொண்டுதானே இருக்கும்?
நமது உள்ளத்தில் ஒரு எண்ணம் தோன்றிய பிறகு அதை செயல்படுத்த முனைகிறோம்; உதாரணமாக தண்ணீர் பருக வேண்டும் என எண்ணியதும் நாம் இருக்கும் இடத்திலிருந்து எழுந்துச் சென்று பாத்திரத்தில் இருந்து தண்ணீரை செம்பில் அள்ளி குடிக்கின்றோம் இது ஒரு செயல்.
இந்த செயலுக்கு காரணம் நம்முடைய உள்ளத்தில் எழுந்த எண்ணம்தான்.
இவ்வாறு தான் நம் ஒவ்வொரு செயலுக்குப் பின்னாலும் ஒரு எண்ணம் உள்ளத்தில் தோன்றி இருக்கும்.
நம் உள்ளத்தில் எந்த எண்ணங்களும் தோன்றாமல் இருப்பது தான் உண்மையான அமைதி !
எந்த எண்ணங்களும் தோன்றாத அமைதியான உள்ளத்தின் ஆழத்திற்குள் தொடர்ந்து பயணிக்கும் போது அல்லது தொடர்ந்து செல்லும்போது நமக்கு கிடைக்கும் ஒரு நிலை தான் உண்மையான பேரமைதி!
கடல் அசைந்து கொண்டு இருக்கும் போது கடலலை என்கிறோம்; கடல் அசைவற்று இருக்கும் பொழுது கடல் என்கிறோம்; இவ்வாறு நமது உள்ளத்தில் எண்ணங்கள் எழுந்து கொண்டே இருக்கும் பொழுது அது இதயம்; எதுவும் இல்லாமல் இருக்கும் பொழுது அது இறைவன் வாழும் ஆலயம்.
சலனம் இல்லாத இதயத்தை அடைந்து, அதன் ஆழ்மனதில் இருக்கும் பொழுது அமைதி உண்டாகும்; இந்த அமைதியினால் நிம்மதி உண்டாகும்.
இந்த நிம்மதியினால் ஆனந்தம் ஏற்படும்; இந்த ஆனந்தத்தினால் ஒரு திருப்தி கிடைக்கும்; இந்தத் திருப்தியை அடையும் நிலையே உள்ளத்தின் உயர்ந்த நிலை!
இந்த அமைதியையும் திருப்தியையும் பெறுகிற ஒருவர்தான் பிறருக்கு அஸ்ஸலாமு அலைக்கும் உங்களுக்கு நிம்மதி உண்டாகட்டுமாக என்று சொல்ல முடியும்?
வான்வெளிக்கு எல்லை இல்லாதது போல் உள்ளத்தின் ஆழ்மனதிற்கும் எல்லை இல்லை. ஆழ்மனம் மிகவும் விசாலமானது .
இந்த விசாலமான இதயத்தில் நாம் அமைதியை உணர்ந்து , உணர்ந்ததை பிறரும் அனுபவிக்க வேண்டும் என்பதற்காக சொல்லும் ஒரு சொல் தான் அஸ்ஸலாமு அலைக்கும்.
உடலின் அதிர்வையும் உள்ளத்தின் அதிர்வுகளையும் கடந்து நாம் அமைதியை அனுபவிக்கும் போது தான் நாம் பிறருக்கு அந்த அமைதியை வழங்க முடியும்.
அமைதி என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.
உடலைக் கடந்து உள்ளத்தை கடந்து ஆன்மாவை கடந்து உணர்வுகளைக் கடந்து உணரும் உன்னதமான நிலை தான் அமைதி! இந்த நிலையை அடைந்தவர்கள் எத்தனை பேர்?