மயிலம் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஐப்பசி மாத கிருத்திகை விழா நடைபெற்றது.
JOTHI BHAKTHI
0:00 / 0:00
மயிலம் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஐப்பசி மாத கிருத்திகை விழா நடைபெற்றது.
58 просмотров · 11 дн. назад
JOTHI BHAKTHI
339 подписчиков
58 просмотров · 11 дн. назад
மயிலம் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஐப்பசி மாத கிருத்திகை விழா நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த மயிலத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஒவ்வொரு மாதமும் கிருத்திகை விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதே போல் ஐப்பசி மாத கிருத்திகை விழாவையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு மூலவருக்கு மூலிகை பொருட்கள், சந்தனம், பால், தயிர், தேன், இளநீர், திருநீறு உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டன. அதனை தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட சுவாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது . மூலவர் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மாலை உற்சவருக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. தொடர்ந்து உற்சவமூர்த்தி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். இரவு உற்சவர் கோவில் உட்பிரகாரம் வலம் வந்ததை தொடர்ந்து க்ஷே வாகனத்தில் மலை வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.