Перейти к содержимому

பார்க்கும் விழி நான் உனக்கு 1|ramanichandran novels | rc novels |Tamil audio novels | RJ suja

ரமணிசந்திரன் நாவல்கள் (RC Novels) и ещё 2

0:00 / 0:00

பார்க்கும் விழி நான் உனக்கு 1|ramanichandran novels | rc novels |Tamil audio novels | RJ suja

27 870 просмотров · 1 месяц назад
ரமணிசந்திரன் நாவல்கள் (RC Novels) и ещё 2
27 870 просмотров · 1 месяц назад
   • பார்க்கும் விழி நான் உனக்கு 1|ramanichandr...   தொடர்ந்து வந்த பிரிவுகளிலும் அப்படி ஒன்றும் அவள் தேறியதாகத் தெரியவில்லை. விக்கிரமாதித்தனின் 'காடாறு மாதம் நாடாறு மாதம்' போல, கணவன் அருகாமையில் கொஞ்ச நாள் சுகிப்பதும், அடுத்து சில நாட்கள் அவனைப் பிரிந்து வாடுவதுமாக, இதுதான் வாழ்வு என்பதற்கு மாதவி ஒருவாறு பழகிக் கொண்டாள். ஆனால், அவள் அதற்குப் பழகிக் கொண்ட விதம்தான் அவளுடய கணவனுக்குப் பிடிக்கவில்லை! மாதவி என்னதான் மறுத்தாலும், அவன் ஊரில் இல்லாத நாட்களில், அவள் சரிவர உண்ணாமல், உறங்காமல் சோர்வது அவனுக்குப் புரியாமல் இல்லை. ஒருநாள் மொத்தமாகப் பொங்கி 'ஃப்ரிஜ்ஜில்' வைத்துவிட்டு, அன்றாடம் அதில் கொஞ்சம் எடுத்து, வெறும் பருப்புப் பொடியும் ஊறுகாயுமாக, அதையும் அரைகுறையாக அவள் உண்பதை ஊகித்து அறிய முடியாத அளவுக்கு அவன் முட்டாள் அல்ல! மனைவியிடம் சீக்கிரமாக வந்து சேர்ந்துவிட வேண்டும் என்பதற்காக, வேலை முடிந்ததும் மறுநாள் ரயிலுக்காகக் காத்திராமல், அங்கங்கே தொடர்பு பஸ்களில் ஏறி, ஒரு பன்னிரெண்டு மணி நேரம் முன்னதாக வீடு வருகிறவன் தானே அவனும்! முதல்தடவை அப்படி வந்த மகிழ்ச்சி சற்று அடங்கியதும், வயிற்றுப்பாட்டுக்காக அடுப்படியை நோக்கிச் சென்றவளிடம், “வெறும் சோறு மட்டும் பொங்கு, மது! நான் வரும்போதே சிப்ஸ் வாங்கிட்டு வந்துட்டேன். சாதத்துல பருப்புப் பொடிய பிசைஞ்சு சாப்பிடுவோம்” என்றவன், “பருப்புப்பொடி தீர்ந்துடுச்சே!” என்று மாதவி சொன்னபோது, முதலில் கொஞ்சம் ஆச்சரியம் மட்டும்தான் பட்டான். அவன் வெளியூர் செல்வதற்கு முன்தினம் இருவருமாய் சென்று வாங்கிவந்த சாமான்களில் பருப்புப்பொடியும் இருந்ததாகத் தான் அவனுக்கு நினைவு! 'இல்லையோ' என்று எண்ணி , “சரி! நான் போய் வேற வாங்கிட்டு வர்றேன்!” என்று அவன் கிளம்ப, “வேணாம், வேணாம். வந்தவுடனே கிளம்ப வேணாம்! ரசம் வைக்கிறேன். நீங்க இங்க வந்து என்னோட பேசிக்கிட்டு இருங்க” என்று மனைவி கூற, "ஓ! நான் ரெடிப்பா!" என்று சிரித்தபடி நெருங்கியவன், சற்றே தயங்கி நின்றான். “இல்லம்மா. நான் குளிச்சுட்டு வந்துடுறேன். பஸ்ஸில வந்தது, தலை உடம்பெல்லாம் கசகசன்னு இருக்கு” என்று, பஸ்சில் வந்த காரணம் சொல்லி அவன் குளிக்கச் சென்றபோது, அவளுக்கும் ஒரே நெகிழ்ச்சி தான். #tamilaudionovels #tamilnovelsaudiobooks #tamilnovels #starnovels #ramanichandrannovels #ramanichandrantamilnovels #ramanichandranaudionovels #ramanichandrantamilnovelsaudiobooks #ramanichandrannovelsaudio