ETAC 50th Year Celebration Song | Emmanuel Nammodu | Ithuvarai Nadathinavar | Thanksgiving Song
Joshua Gnanaruban
0:00 / 0:00
ETAC 50th Year Celebration Song | Emmanuel Nammodu | Ithuvarai Nadathinavar | Thanksgiving Song
476 просмотров · 6 дн. назад
Joshua Gnanaruban
291 подписчик
476 просмотров · 6 дн. назад
இதுவரை நடத்தினவர்
இனியும் நடத்திடுவார்
இதுவரை நடத்தினவர்
இனிமேலும் நடத்திடுவார்
இம்மானுவேல் நம்மோடு
நம்மை அழைத்தவர் என்றும் நம்மோடு (2)
காலங்கள் கடந்தாலும் கர்த்தர் நம்மோடு
தலைமுறைகள் தலைமுறையாய்
தேவன் நம்மோடு
நீர் உண்மையுள்ளவரே, ஸ்திரமாய் நிற்கச்செய்தவரே
உம் புயம் என்றும் தாங்கியதேபுயல்கள் அலைகள் என்றாலும்
அஸ்திபாரங்கள் அசைந்தாலும்
இம்மானுவேல் என்றும் நம்மோடு (3)
தரிசனம் தந்தவர்சொன்னதைச் செய்திடுவார்
தம் சித்தம் என்றுமே நிறைவாய் செய்திடுவார்
தயங்காமல் முன்செல்ல இணைந்திடுவோம்
இயேசுவின் மகிமைக்காய் உழைத்திடுவோம்
இயேசுவின் மகிமைக்காய் உழைத்திடுவோம்
கிருபையால் அனுதினம்கட்டி எழுப்பினவர்
கரங்களில் ஏந்தியே தொடர்ந்து நடத்திடுவார்
கர்த்தரின் திட்டங்கள் நிறைவேறிட
ஒருமனமாய் நாம் எழும்பிடுவோம்
எழுப்புதல் அடைந்து நாம் தொடர்ந்திடுவோம்