024. திருமணம், மறுமணம், வாடகை தாய், தந்தை, ஐம்பெரும் வேள்விகள் - பாம்பன்விளை கீதா வகுப்பு 20191013
vedanishtha
0:00 / 0:00
024. திருமணம், மறுமணம், வாடகை தாய், தந்தை, ஐம்பெரும் வேள்விகள் - பாம்பன்விளை கீதா வகுப்பு 20191013
5 486 просмотров · 6 лет назад
vedanishtha
1 тыс. подписчиков
5 486 просмотров · 6 лет назад
பாம்பன் விளை கீதா வகுப்பு 20191013 113514
ஸ்ரீமத் பகவத் கீதா முன்னுரை 24
பக்கம் – 141,142
#மறுமணம்
மறுமணத்தின் கெடுதல் –
1. #ஆண், #பெண் விரும்பியபோது ஒருவரை ஒருவர் கைவிட்டு இன்னொருவருடன் சேர இடமாகும்.
2. #வாழ்க்கைத்துணை இறந்து போனால் மற்றவரின் சொத்துக்களை எடுத்துப்போவார்கள். அதனால் குடும்பத்தில் சண்டையுண்டாகும்.
3. நல்ல குடும்பங்களின் பெயர் அழிந்து சொத்து ஸுகங்கள் சின்னாபின்னமாகும்.
4. ஸ்திரீ, புருஷர் இரு பாலாரின் கற்பும் அழியும். துவிஜர்கள் மறுமணமாவது, பல மணமாவது செய்துகொள்ளக்கூடாது.
#திருமணம் நியோகம்
1. #விவாகமான பெண் தகப்பன் வீட்டை விட்டு கணவன் வீட்டிலேயே வசிக்கிறாள். நியோகம் செய்துகொண்ட விதவையும் இறந்துபோன தன் கணவன் வீட்டிலேயே வசிக்கிறாள்.
2. #கலியாணமான பெண்களின் பிள்ளைகள் அவர்கள் கணவரின் சொத்துக்குரியவராகிறார்கள். நியோக விதவையின் பிள்ளைகள், கர்பாதானம் செய்பவனின் சந்ததி யன்று, கோத்திரமுமன்று, அவன் சொத்துக்குரியவர்களுமன்று. அவர்கள் தம் தாயின் முன் கணவன் கோத்திரம், அவன் பிள்ளைகள், அவன் சொத்திற்கே உரியவர்களாய் அவன் வீட்டிலேயே வசிக்கிறார்கள்.
3. #மணம் புரிந்த சதி, பதிகள் ஒருவருக்கொருவர் சேவை செய்வது கடமை. நியோக ஸ்திரீ, புமான்களுக்கு இச்சம்பந்தமில்லை. ஒப்பந்தம் முடிந்ததும் ஒட்டுறவில்லை.
4. மணவாளர் சம்பந்தம் சாகுமட்டும் இருக்கும். நியோக சம்பந்தம் காரியமானால் அத்துடன் சரி.
5. விவாகமான ஸ்திரீ-புருஷர்கள் வீட்டுக் காரியங்களைச் சேர்ந்து நிர்வகித்து நடத்தவேண்டும். நியோகத்தில் ஸ்திரீ-புருஷர்கள் அவரவர்கள் வீட்டுக் காரியங்களை ஒருவருக்கொருவர் சம்பந்தமின்றி தனித்தனியே கவனித்துக் கொள்கிறார்கள்.
6. மணம் புரிந்த சதி, பதிகள் பத்து குழந்தைகள் வரையில் பெறலாம். நியோகிகள் இரண்டு அல்லது நான்கு குழந்தைகளுடன் நிற்கவேண்டும்.
7. கன்னிக்கும், குமரனுக்கும் திருமணம் நடக்கிறது. நியோகம் விதவைக்கும், விதவனுக்கும் நடக்கிறது. அது குமரனுக்கும், குமரிக்கும் அன்று.
8. மணமான தம்பதிகள் எப்போதும் சேர்ந்து வாழலாம். நியோகிகள் கர்பாதானத்தின்போதுதான் சேர்ந்திருப்பார்கள். இரண்டாவது கர்பத்துடன் நியோக ஸ்திரீ புருஷ சம்பந்தத்தை நிறுத்திக் கொள்ளவேண்டும். நியோக புருஷனும் அப்படியே. நியோக புருஷனுக்காகப் பெற்ற குழந்தையை நியோக விதவை இரண்டு, மூன்றாண்டுகள் வளர்த்து அப்புருஷனிடம் தந்துவிடவேண்டியது. இவ்வாறு ஒரு கைம்பெண் தனக்காக இரண்டு குழந்தைகளையும், நான்கு நியோக புருஷர் ஒவ்வொருவருக்கும் இரண்டு குழந்தைகளையும் பெற்றுத் தரலாம். இவ்வாறே ஒரு விதவனும் தனக்காக இரண்டு குழந்தைகளும், தனது நியோக விதவைகள் நால்வருக்கும் இரண்டிரண்டு குழந்தைகளும் உற்பத்தி செய்யலாம். இவ்வாறு நியோகத்தால் பத்துக் குழந்தைகள் வரை மட்டும் பெறலாம்.
பக்கம் – 143
9. உலகறிய நடக்கும் உலகறிய நடக்கும்.
10. நல்லோர் அனுமதியும், காதலர் திருப்தியும் வேண்டும். நியோகத்திற்கும் நியோகம் கொள்ளும் காதலர் தங்கள் குடும்ப உறவினர்முன், சந்தானத்திற்காகவே நியோகம் கொள்வதாகவும், நியோக உத்தேஶம் நிறைவேறியதும் பிரிவோம் என்றும் பகிரங்கஞ் செய்யவேண்டும். இதற்கு எதிராக நடப்பவர்கள் பாபிகள். அவர்கள் சாதி அல்லது அரச தண்டத்திற்குரியவர்கள் ஆவார்கள். நியோக தம்பதிகள் மாதம் ஒருமுறை கர்பாதானம் செய்க. கரு நிலைத்தபின் ஓராண்டு பிரிந்திருக்கவேண்டும்.
பக்கம் - 144
பெண் தன் குலம் அல்லது தன்னின் உயர் குல புமான்களுடன் நியோகம் செய்யலாம். அதாவது வைஶ்யப்பெண் வைஶ்யர், க்ஷத்திரியர் அல்லது பிராம்ஹணருடன், க்ஷத்ரியப்பெண் க்ஷத்ரியர் அல்லது ப்ராம்ஹணருடன் நியோகம் கொள்ளலாம்.
பக்கம் - 147
தேவரர்
59. குழந்தையில்லாமல் இறந்தவன் மனைவி, கணவன் (மனைவியையிழந்த)தம்பி, அல்லது தமையன், அல்லது மைத்துனன், அல்லது கணவனின் ஆறாவது வமிசத்திற்குட்பட்ட உறவின் முறையாருடன் நியோகம் செய்துகொள்ளலாம். குழந்தையாசை இருந்தால் மட்டுமே இப்படி #நியோகம் செய்யவேண்டும்.
குழந்தை பெறும் அவசியமோ ஆவலோ இல்லாத தம்பி மனைவியை, அண்ணன் மோகத்தால் அணுகுவதும், அண்ணன் மனைவியைத் தம்பி அணுகுவதுவும் மிகவும் இழிவாகும்.
औरसः क्षेत्रजश्चैव ।।मनु 9-159।।
தன் புருஷனுடைய தமையன், தம்பி, மைத்துனன், கணவனின் ஆறாவது வம்ஶத்திற்கு உட்பட்ட உறவின்முறையாருடன், உறவு, சுற்றம் யாராயினும் ஒரு விதவையின் இரண்டாம் புருஷன் தேவரர் எனப்படுகிறார்.
பக்கம் - 148
प्रोषितो धर्मकार्यार्थं प्रतीक्ष्योष्टौ नरः समाः ।
विद्यार्थं षड्यशोर्थं वा कामार्थं त्रींस्तु वत्सरान् ।।मनु 9-76।।
குலப்பெண், தனது கணவர் தர்மார்த்தமாகப் பரதேஶஞ் சென்றிருந்தால் எட்டாண்டுகள், கல்வி, புகழுக்காக சென்றிருந்தால் ஆறாண்டுகள், பொருளீட்டல் முதலிய விருப்பங்களை நிறைவேற்றச் சென்றிருந்தால் மூன்றாண்டுகள் பொறுத்திருந்து பிறகு நியோகம் கொண்டு சந்ததி வளர்க்கவேண்டும். சொந்தக் கணவன் வந்ததும் நியோக பதியை விலக்கவேண்டும்.
பக்கம் - 149
वन्ध्याष्टमेधिवेद्याब्दे दशमे तु मृतप्रजा ।
एकादशे स्त्रीजननी सद्यस्त्वप्रियवादिनी ।।मनु 9-81।।
அதேமாதிரி புருஷனும் மனைவி மலடானால் கலியாணமானது முதல் எட்டாண்டுகள், குழந்தைகளெல்லாம் இறந்தால் பத்தாண்டுகள், பெண் குழந்தைகளே பெற்றால் பதினோராண்டுகள் பொறுத்தும், அடங்காப் பிடாரி, சண்டைக்காரி, வாய்ப்பட்டியானால் உடனேயும் நியோகம் செய்துகொண்டு மற்றொரு பெண் மூலம் சந்ததியை வளர்க்கவேண்டும்.
அவ்வாறே புருஷன் பொறுக்கமுடியாத இடும்பை செய்தால், துயரீந்தால், நோயாளியானால், மனைவியும் நியோகங்கொண்டு அதனால் பிறக்கும் மகவிற்கு கணவனின் சொத்தைத் தரவேண்டும்... விவாகத்தால் பிறந்த ஔரஸ் புத்திரன், தந்தையின் சொத்திற்குரியவனாதல் போலவே, நியோகத்தாற் பிறந்த க்ஷேத்ரஜ புத்திரனும் தயாபாகத்திற்குரியவனாகிறான்.
கல்யாணம் பண்ணியும் ப்ரம்மச்சாரீ
பஞ்சமஹா யஜ்ஞம்