04 thiruchendUr thala purANam, thiruppugazh - mundhu tamizh mAlai | ChendhUrAn kAlai pidi
Bhavya Hari
0:00 / 0:00
04 thiruchendUr thala purANam, thiruppugazh - mundhu tamizh mAlai | ChendhUrAn kAlai pidi
875 просмотров · 5 мес. назад
Bhavya Hari
4,4 тыс. подписчиков
875 просмотров · 5 мес. назад
திருச்செந்தூர்த் தலபுராணம்
இயற்றியவர் : வென்றி மாலைக் கவிராயர்
விருத்தம் ராகம் : தோடி
கருணை மாறாதுள் ளுறும்
கண்கள் பன்னிரண்டி னாலே
இருவினை களைந்த மேலோர்க்(கு)
இனிய ஆனந்த மெல்லாம்
வரன் முறை பெருக்கி அன்னார்
மனமெனுங் கோயில் தூண்டாத்
திருவிளக் கொளியாம் வைமேற்
செயந்தியம் பதியாய் போற்றி
============================================================
ஸ்ரீ அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
ராகம் : தோடி / மாண்ட் தாளம் : ஆதி
முந்து தமிழ் மாலை கோடிக்கோடி
சந்தமொடு நீடு பாடிப் பாடி
முஞ்சர் மனை வாசல் தேடித் தேடி உழலாதே
முந்தைவினை யேவராமல் போக
மங்கையர்கள் காதல் தூரத்தேக
முந்தடிமை யேனை ஆளத்தானு முனைமீதே
திந்திதிமி தோதி தீதித் தீதி
தந்ததன தான தானத்தான
செஞ்செணகு சேகு தாளத்தோடு நடமாடுஞ்
செஞ்சிறிய கால்வி சாலத் தோகை
துங்க அநுகூல பார்வைத் தீர
செம்பொன் மயில் மீதிலே எப்போது வருவாயே
அந்தண்மறை வேள்வி; காவற்கார
செந்தமிழ் சொல் பாவின் மாலைக்கார
அண்டருபகார சேவற்கார முடிமேலே
அஞ்சலி செய்வோர்கள் நேயக்கார
குன்றுருவ ஏவும் வேலைக்கார
அந்தம் வெகு வான ரூபக்கார எழிலான
சிந்துரமின் மேவு போகக்கார
விந்தை குறமாது வேளைக்கார
செஞ்சொலடி யார்கள் வாரக்கார எதிரான
செஞ்சமரை மாயு மாயக்கார
துங்கரண சூர சூறைக்கார
செந்தினகர் வாழும் ஆண்மைக்கார பெருமாளே
============================================================
பாடியவர்கள்
"திருப்புகழ் கான சரஸ்வதி”
திருமதி T.V. சுந்தரவல்லி
மற்றும்
திருமதி பவ்யா ஹரிசங்கர்
பின்னணி இசைத்தவர்கள்
வயலின் : மேலக்காவேரி K. தியாகராஜன்
மிருதங்கம் : நெய்வேலி S. ஸ்கந்த சுப்ரமணியன்
வீணை: முடிகொண்டான் N. ரமேஷ்
குழல் : V. மகாலிங்கம்
முகரசிங் : A.S. கிருஷ்ணன்
============================================================
‘செந்தூரான் காலைப்பிடி’
திருச்செந்தூர் பற்றி பல அருளாளர்கள் பாடிய பாடல்களை ஒருங்கிணைத்து ஒரே குறுந்தகட்டில் வெளியிடுவது ஒரு புதிய முயற்சி என்பது குறிப் பிடத்தக்கது.
இந்த இசைத் தொகுப்பில் அருணகிரிநாதர், ஆதிசங்கரர், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள், குமரகுருபரர், சுவாமிநாத தேசிகர், பகழிக்கூத்தர், காஞ்சிபுரம் சிதம்பர முநிவர், அண்ணாமலை ரெட்டியார் ஆகியோர் பாடல்களுடன் நாதஜோதி முத்துசுவாமி தீக்ஷிதர், சங்கீதகலாநிதி பாபநாசம் சிவன், ஆண்டவன் பிச்சை ஆகியோர் கீர்த்தனங்களும், செந்தூர் முருகன் அருளால் அன்பர் ராதாகிருஷ்ணன் அவர்கள் இயற்றிய பாடல்களும் இடம் பெறுகின்றன. 38 பாடல்களும் 40 இனிமையான ராகங்களில் இசையமைக்கப் பெற்றுள்ளன.
தூண்டுகை விநாயகரை வேண்டி, காஞ்சி மஹா ஸ்வாமிகளை தியானித்து, 'செந்தூரான் காலைப்பிடி' என்ற பாடலுடன் தொடங்கி, அடியார்க்கு கால்காட்டி முன்னின்று அருளுமாறு திருச்செந்தூர் முருகனை துதித்து, இந்த இசைப் பாமாலைத்தொகுப்பு நிறைவு பெறுகிறது.
இதனை திருச்செந்திலாண்டவன் திருவடிகளில் அர்ப்பணித்து இன்புறுகிறோம். அலைவாய்க் கரையில் மகிழ்சீர்க்குமரன் அன்பர்களுக்கு வேண்டும் வரங்களை அருளக் காத்திருக்கிறான். ஆதலால் செந்தில் கந்தன் புகழ் பாடுவோம்! வாருங்கள்!
செந்தில் வளர் கந்தனுக்கு அரஹரோஹரா!
=======================================================
பாடியவர்கள்
"திருப்புகழ் கான சரஸ்வதி”
திருமதி T.V. சுந்தரவல்லி,
திருமதி பவ்யா ஹரிசங்கர்
பின்னணி இசைத்தவர்கள்
வயலின் : மேலக்காவேரி K. தியாகராஜன்
மிருதங்கம் : நெய்வேலி S. ஸ்கந்த சுப்ரமணியன்
வீணை: முடிகொண்டான் N. ரமேஷ்
குழல் : V. மகாலிங்கம்
முகரசிங் : A.S. கிருஷ்ணன்
நூல் தயாரிப்பும், வடிவமைப்பும்
“திருப்புகழ் அமுதன்”
வலையப்பேட்டை ரா. கிருஷ்ணன்