Перейти к содержимому

பகை கடிதல் | பாம்பன் சுவாமிகள் | Pagai kadithal | Pamban swamigal | Bhavya Hari

Bhavya Hari

0:00 / 0:00

பகை கடிதல் | பாம்பன் சுவாமிகள் | Pagai kadithal | Pamban swamigal | Bhavya Hari

10 563 просмотра · 4 месяца назад
Bhavya Hari
4,4 тыс. подписчиков
10 563 просмотра · 4 месяца назад
Muruga sharanam With Lord Muruga's abundant grace, we are happy to present Pamban Srimad Kumaragurudasa Swamigal's Pagai Kadithal. Ragam - Sivaranjani Talam - Adi (tisram) Credits Lyrics Pamban Srimad Kumaragurudasa Swamigal Tuned by 'Pambanadimai' Sri V. Muthukumaragurusami (Sadguru) Sung by Smt Bhavya Hari Violin - Smt Haritha Narayanan Mridangam - Sri B Guru Raghavendra Music arrangements - Sri Sai Aditya Ramesh Audio recording, mixing and mastering - SPB images studio, Mahalingapuram, Chennai Recording Engineer - Sri Gobi Video production - Sri Vishnu © All rights reserved. #murugan #pamban #pagaikadithal #prayer #tamil #music #bhavyahari #spirituality திருவளர் சுடருருவே சிவைகரம் அமருருவே அருமறை புகழுருவே அறவர்கள் தொழுமுருவே இருள்தபும் ஒளியுருவே எனநினை எனதெதிரே குருகுகள்‌ முதன்மயிலே கொணர்தியுன்‌ இறைவனையே 1 மறைபுகழ் இறைமுனரே மறைமுதல் பகருருவே பொறைமலி உலகுருவே புனநடை தருமுருவே இறையிள முகவுருவே எனநினை எனதெதிரே குறைவறு திருமயிலே கொணர்தியுன் இறைவனையே 2 இதரர்கள் பலர்பொரவே யிவணுறை எனதெதிரே மதிரவி பல வெனதேர் வளர்சர ணிடையென மா சதுரொடு வருமயிலே தடவரை யசைவுறவே குதிதரும் ஒருமயிலே கொணர்தியுன் இறைவனையே 3 பவநடை மனுடர்முனே படருறும் எனதெதிரே நவமணி நுதலணியேர் நகைபல மிடறணிமால் சிவணிய திருமயிலே திடனொடு நொடிவலமே குவலயம் வருமயிலே கொணர்தியுன் இறைவனையே 4 அழகுறு மலர்முகனே அமரர்கள் பணிகுகனே மழவுரு வுடையவனே மதிநனி பெரியவனே இழவிலர் இறையவனே எனநினை எனதெதிரே குழகது மிளிர்மயிலே கொணர்தியுன் இறைவனையே 5 இணையறும் அறுமுகனே யிதசசி மருமகனே இணரணி புரள்புயனே எனநினை எனதெதிரே கணபண வரவுரமே கலைவுற எழுதருமோர் குணமுறு மணிமயிலே கொணர்தியுன் இறைவனையே 6 எளியஎன் இறைவகுகா எனநினை யெனதெதிரே வெளிநிகழ் திரள்களை மீன் மிளிர்சினை யெனமிடைவான் பளபள எனமினுமா பலசிறை விரிதருநீள் குளிர்மணி விழிமயிலே கொணர்தியுன் இறைவனையே 7 இலகயின் மயின்முருகா எனநினை எனதெதிரே பலபல களமணியே பலபல பதமணியே கலகல கலவெனமா கவினொடு வருமயிலே குலவிடு சிகைமயிலே கொணர்தியுன்‌ இறைவனையே 8 இகலறு சிவகுமரா எனநினை எனதெதிரே சுகமுனி வரர்எழிலார் சுரர்பலர் புகழ்செயவே தொகுதொகு தொகுவெனவே சுரநடமிடுமயிலே குகபதி யமர்மயிலே கொணர்தியுன் இறைவனையே 9 கருணைபெய் கனமுகிலே கடமுனி பணிமுதலே அருணையன் அரனெனவே அகநினை எனதெதிரே மருமல ரணிபலவே மருவிடு களமயிலே குருபல வவிர்மயிலே கொணர்தியுன் இறைவனையே 10 துர்மதி வருடம் தைமாதம் 15ந் தேதி சனி வாரம். இத்திருப்பத்தை காலை மாலை பூசித்துப் பத்தி பிறங்கப் பாடுவோர், திருமயில் மீது செவ்வேட்பரமனைத் தரிசிப்பர்; பகையை வெல்வர். சண்முக கவச பாராயணத்திற்கு இது வேறாம்.