பெருஞ் சுனாமி - சிவகளை மலைத் தொடர் உருவானது
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன் Krishnan
0:00 / 0:00
பெருஞ் சுனாமி - சிவகளை மலைத் தொடர் உருவானது
259 просмотров · 3 недели назад
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன் Krishnan
70 подписчиков
259 просмотров · 3 недели назад
“மலி திரை ஊர்ந்து மண் கடல் வௌவியது“ உண்மையா? தமிழகம் முழுவதையும் கடல்வெள்ளம் (பெருஞ் சுனாமி) அழித்தது உண்மையா? அதற்கான எச்சங்கள் காணக் கிடைக்கின்றனவா?
ஆம், கிடக்கின்றன!
பிரளயத்தின் போது வங்கக் கடலில் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அருகே சுமார் ஒரு இலட்சம் சதுர கீலோமீட்டர் பரப்பளவு கொண்ட நிலப்பகுதி பூமிக்குள் மூழ்கியுள்ளது. இதனால் பெரும் கடல்வெள்ளம் (பெருஞ் சுனாமி) உண்டாகி சேர சோழ பாண்டிய நாடுகள் அனைத்தும் அழிந்து போயின. கிழக்கே வங்கக்கடலில் தோன்றிய இந்த மாபெரும் கடல்வெள்ளம் தமிழகத்தை அழித்து மேற்குத் தொடர்ச்சி மலையைக் கடந்து மேற்கே அரபிக்கடலில் கலந்துள்ளது.
கடல்வெள்ளம் வைகை ஆற்றுப் பள்ளத்தாக்கு வழியாகப் பாண்டியநாட்டில் நுழைந்து மதுரையைத் தாக்கி, மதுரைக்கடந்து சென்றபோது கடல்வெள்ளத்தினால் (பெருஞ் சுனாமியால்) அடித்துவரப்பட்ட மண் படிந்து மதுரை அருகே நாகமலையும் பசுமலையும், வத்தலக்குண்டு ஊருக்கு மேற்கே பன்றிமலையும் புதிதாகத் தோன்றியுள்ளன.
வங்கக்கடலில் ‘அந்தமான் நிக்கோபார்‘ தீவுகளுக்கு அருகே உண்டான பிரளயத்தினால் பெரும் கடல்வெள்ளம் உண்டாகித் தமிழகத்தைத் தாக்கிய போது, ஒரு மாபெரும் கடல்வெள்ளம் இலங்கையைத் தாக்கி, திருச்செந்தூர் காயல்பட்டணம் இடையே உள்ள நிலப்பரப்பிற்குள் நுழைந்துள்ளது. இதனால் திருச்செந்தூர் வள்ளிகுகை அருகே கடற்கரையை ஒட்டியுள்ள உள்ள பாறைகள் பிளவுபட்டுத் தெற்கு நோக்கி நிமிர்ந்து உள்ளன. கடல்வெள்ளத்தால் அடித்து வரப்பட்ட மண் ஏரல் அருகே உள்ள ‘சிவகளை‘ என்ற ஊரின் வடமேற்கேயும் பெருங்குளத்திற்கு வடமேற்கேயும் படிந்து, இரண்டு சிறிய மலைத்தொடர்களை உருவாக்கி உள்ளன. இந்த இரண்டு மண்மலைகளும் தமிழகத்தைக் கடல்கொண்டதற்குச் சான்றாகத் திகழ்கின்றன.