Перейти к содержимому

இலங்கை வானொலி பிறை எப்எம் வழங்கும் "இரண்டு நிமிடங்கள்!"போட்டி நிகழ்ச்சி 26.09.2026

M.I.USANAR SALEEM NINTAVUR

0:00 / 0:00

இலங்கை வானொலி பிறை எப்எம் வழங்கும் "இரண்டு நிமிடங்கள்!"போட்டி நிகழ்ச்சி 26.09.2026

193 просмотра · 15 часов назад
M.I.USANAR SALEEM NINTAVUR
11,3 тыс. подписчиков
193 просмотра · 15 часов назад
"இரண்டு நிமிடங்கள்!" போட்டி நிகழ்ச்சி! ************************************** இலங்கை வானொலி பிறை எப்.எம் வழங்கும் பரிசுகளுடன் கூடிய கால்மணிநேர விறுவிறுப்பும் வினோதமும் நிறைந்த விளம்பர நிகழ்ச்சிதான் சனிக்கிழமை தோறும் வாரமோர் தடவை ஒலிபரப்பாகும் "சொர்ணத்துடன் இரண்டு நிமிடங்கள் போட்டி நிகழ்ச்சி! இந்நிகழ்ச்சி நமது அன்னை வானொலியாம் இலங்கை வானொலியின் " தென்றல்!"சேவையில் ஓர்சில தசாப்தங்களின் முன்பு வலம்வந்து நேயர்கள் மனதைக் கொள்ளைகொண்ட ஓர் அருமையான விளம்பர நிகழ்ச்சி! இப்போது இந்நிகழ்ச்சிக்குப் பூரண அனுசரணையாளர்கள் கல்முனை சொர்ணம் நகை மாளிகையினராகும். ஜனாப் நிஸார் காரியப்பர் அவர்கள் நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்க, எமது இலங்கை வானொலி அறிவிப்பாளர்களான ஜனாப் ஏ.எல்.நயீம் அவர்களும் ரம்ஸானா ஸமீல் அவர்களும் நிகழ்ச்சியைச் சுவைபடத் தொகுத்து வழங்கி பார்வையாளர்கள் ; போட்டியாளர்கள் ; நேயர்களை மகிழ்விக்கிறார்கள். கடந்த 26 . 09 . 2026 சனிக்கிழமை அன்று பிறை எப் எம் வானொலியில் ஒலித்த " சொர்ணத்துடன் இரண்டு நிமிடங்கள்!"நிகழ்ச்சியின் ஒலிப் பதிவிது. வானொயில் கேட்கத் தவறியோர்களுக்கும் மீண்டும் ஓர் தடவை நிகழ்ச்சியைச் செவிமடுக்க ஆவலுடையோருக்குமாக இங்கே பதிவேற்றம் செய்யப்படுகிறது. கல்முனை ராமகிருஷ்ணா மகாவித்தியாலயத்தில் அண்மையிலே இந் நிகழ்ச்சி ரசிகர்கள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியிலே பிரமாண்டமான முறையில் ஒலிப்பதிவு செய்யப்பட்டமை இங்கு குறிப்பிடத் தக்கதாகும்!அனைவருக்கும் எமது நல்வாழ்த்துகள்!! என்றும் அன்பு அபிமான நேயர் ****************************** எம்.ஐ.உஸனார் ஸலீம் நிந்தவூர் - இலங்கை ( கி.மா) """""""""""""""""""""""""""""""""""""""""" 0777161224 - 0754551230.