சர்வ மதத்தினர் வணங்கும் பிரான்மலை ஷேக் அப்துல்லாஹ் தர்கா! | மாலை முரசு செய்திகள்
Malaimurasu Tv 24X7
0:00 / 0:00
சர்வ மதத்தினர் வணங்கும் பிரான்மலை ஷேக் அப்துல்லாஹ் தர்கா! | மாலை முரசு செய்திகள்
15 332 просмотра · 1 год назад
Malaimurasu Tv 24X7
2,07 млн подписчиков
15 332 просмотра · 1 год назад
சர்வ மதத்தினர் வணங்கும் பிரான்மலை ஷேக் அப்துல்லாஹ் தர்கா! | மாலை முரசு செய்திகள்
வான்மறையை நெஞ்சில் ஏந்தி, வாய்மையினை வாழ்வில் ஏந்தி வளைகுடா நாட்டிலிருந்து வந்திருந்த அந்த இளம் இறைநேசர் வானுயர்ந்த மலையிலேயே அடக்கமாகி அருள் வழங்கி வருகிறார்
வானத்தை தழுவி நிற்கும் பனிமலைகளும் , தேன் வழங்கும் நறுமண உடைய நாகமரம் மரங்களும் , மலைச்சரிவுகளிலிர்ந்து விழு வெள்ளி அருவிகளும், மரங்களோடு கொஞ்சி விளையாடும் மந்திகளும் நிறைந்து....முல்லைக்கு தேர் தந்த பாரி ஆண்ட பறம்பு மலையான பிரான் மலையில், பச்சை ஆடை போர்த்தி அடக்கமாயிருக்கிறார் ஆண்டவனின் அருள் பெற்ற இஸ்லாமிய இறை நேசர்
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே, 2500 அடி உயரத்தில் உள்ள பிரான்மலை உச்சியில் ஷேக் அப்துல்லா ஒலியுல்லாஹ் தர்ஹா தென்றல் வீசும் மலர்களின் மணங்களின் இடையே அருள் வீசி வீற்றிருக்கிறது
இஸ்லாமிய புனித இடமாக இருந்தாலும் அனைத்து சமுதாய மக்களும் ஒன்று கூடி வழிபாடு செய்யும் புன்னிய தலத்திற்கான புனித பயணம், ஆன்மிகப் பயணிகளுக்கு மறக்க முடியாத அனுபவத்தை அளிக்கின்றன.
ஏறத்தாழ பல நூறு ஆண்டுகளுக்கு முன், வளைகுடா நாட்டிலிருந்து இஸ்லாத்தின் பெருமைகளை விளக்குவதற்காக பாரத மண்ணிற்கு வருகை தந்த இறை நேசர்களில், மிக இளைமையானவராக இருந்த ஷேக் அப்துல்லா ஒலியுல்லாஹ் இந்த பிரான் மலை வந்து தங்கியதாக கூறப்படுகிறது
இஸ்லாத்தை பரப்ப வந்த வந்த அருளாலனின் ஆசி பெற்ற ஒலியுல்லாஹ். இப்பகுதி மக்களின் அன்புமிக்கவராக வாழ்ந்து வந்துள்ளார். இறக்கமும் ஈகை குணமும் கொண்ட அவர் மலை வாழ் மக்களின் மனதில் இடபிடித்ததோடு இறைவனின் அருளை கொண்டு அவர்களின் இன்னல்களை தீர்த்து வைத்தார்.
நாளுக்கு நாள் ஒலியுல்லாஹ்வின் புகழ் எல்லா இடங்களிலும் பரவ, அனைத்து சமுதாய மக்களும் பல்வேறு பிரார்த்தனைகளோடு வந்து தங்கள் பிரச்சினைகள் நீங்கி சென்றதாக கூறப்படுகிறது
மனிதர்கள் அனைவரும் இறைவனின் பிள்ளைகள் என போதித்ததோடு பல அறிய நிகழ்வுகளை நிகழ்த்தி காட்டி மறைந்த ஷேக் அப்துல்லா ஒலியுல்லாஹ், இந்த பிரான் மலையில் அடைக்கலம் கொண்டு அனைத்து சமுதாய மக்களின் இறை நேசராக, இன்னல்களை தீர்ப்பவராக இருந்து வருகிறார்
இறை நேசரின் தர்காவிற்கு செல்ல மாலை உச்சியில் அமைந்திருக்க பாறைகளில் அமைந்திருக்கும் படிகளை கடந்து பயணம் செய்ய வேண்டியுள்ளது
மனத்தில் ஒலியுல்லாஹ்வை நினைத்து படியேறும் போது கால்கள் களைப்புகளை மறந்து மனம் புத்துணர்ச்சி பெருகின்றன. வழியேங்கும் இயற்கை பசுமையான ஆடைகளை போர்த்தியிருக்க ஆங்காங்கே இயற்கை நீரோடைகள் தாகம் தீர்க்கின்றன
மலை உச்சியில் பாறைகளின் பிரமாண்டங்களோடு பச்சை நிறத்தில் காணப்படும் தர்கா எளிமையோடும், இனிமை நிறந்த இயற்கை காட்சிகளோடும் நிறைந்து நிற்கிறது
ஏறி வந்த களைப்பு நீங்கி இதயத்தில் இன்பம் சூழ, தர்காவில் ஷேக் அப்துல்லா ஒலியுல்லாஹ்வின் அடக்க தலம் வாசனை திரவியங்களில் மணமோடு காட்சியளிக்கிறது
எல்லோரும் வாருங்கள் இறைவனின் ஆசிகிட்டட்டும் என சொல்வது போல ஒலியுல்லாஹ்வின் அடக்கஸ்தலம் அமைந்துள்ளது
ஊதிபத்தியும், சந்தன வாசமும் வீசும் இந்த தர்காவை நோக்கி . தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் பக்தர்கள் மலைக்கு செல்லமுடியாத நிலையில் பிரான்மலை கீழ்ப்பகுதியில் உள்ள தோப்பு தர்ஹாவில் குழந்தை வரம் நோய் நிவாரணம் உள்ளிட்ட வேண்டுதல்களுக்காக நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
சொந்த வீடு கட்டி வாழ ஆவல் கொள்ளும் பக்தர்கள் தர்க்கா அமைந்துள்ள பாறைகளின் மீது வீடுகளை போல் கற்களை அடுக்கி பிரார்த்திப்பதோடு தர்ஹாவில் அடைக்கஸத்லத்தில் வாசனைத் திரவியங்கள் தடவி, ஊதுபத்தி ஏற்றி. சர்க்கரை பாத்திஹா ஓதி வழிபடுகின்றனர்
ஷேக் அப்துல்லா ஒலியுல்லாஹ் தர்ஹா நூற்றாண்டுகளாக மக்களின் நம்பிக்கையின் மையமாக இருந்தும் வரும் நிலையில் ஞாயிற்று கிழமைகளில் மலை அடிவாரத்தில் கூடும் பக்தர்கள், கந்தூரி எனப்படும் நேர்த்திக்கடன் வழிபாட்டில் ஈடுபட்டு உற்றார் உறவினர்களோடு விருந்துகள் உபசரித்து மகிழ்ச்சி அடைகின்றனர்.
ஆண்டு தோறும் சந்தனம் பூசும் வைபவத்தில் கலந்து கொள்ள தமிழகம் முழுவதுதிலிருந்தும் கூடும் பக்தர்கள் ஷேக் அப்துல்லா ஒலியுல்லாஹ்விடம் பாத்தியாக்கள் எனபடும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று அருள் பெருகின்றனர்
பிரான்மலை தர்ஹா ஆன்மிகத்தின் மையமாக மட்டுமல்லாமல் சமுதாய ஒற்றுமையின் சின்னமாகவும் திகழ்வதால் இங்கு நடைபெறும் வழிபாடுகள் மக்களின் இதயங்களை இணைத்து, அமைதியையும், பக்தியையும் பரப்புகின்றன.
#malaimurasu #singampunari #dharga @malaimurasunewslive
Watch Malai Murasu Seitthigal(மாலை முரசு செய்திகள்), Tamil Nadu’s Top 24x7 Tamil News Channel, bringing the best of latest live news, breaking news, election, general, updates, headlines, crime reports, reported deep from rural and uprban. entertainment, sports, business, social media and so much more., Stay updated on the latest stories and headlines today from the worlds of politics.
Follow on:
Insta : / malaimurasutv_official
twitter : / malaimurasutv
facebook : / malaimurasu
website : http://www.malaimurasu.com
Live News : / malaimurasunewsdigital
SUBSCRIBE to get the latest news updates: / @malaimurasunewslive