காரைநகர்(காரைதீவு) கண்மணியே…களபூமி
Kayts-தீவகம் : ஊர்காவற்றுறை _சரவணை_சின்னமடுவடி
0:00 / 0:00
காரைநகர்(காரைதீவு) கண்மணியே…களபூமி
15 просмотров · 11 дн. назад
Kayts-தீவகம் : ஊர்காவற்றுறை _சரவணை_சின்னமடுவடி
5 подписчиков
15 просмотров · 11 дн. назад
காரைநகர்க் கண்மணியே
களபூமி தந்த உப்புக் காற்றே
அம்மாள் நீ , பாலாவோடை குறிஞ்சாக்குளி
ஸ்ரீ முத்துமாரி என்னவளே
முல்லைக் கொடியவளே…
முல்லைக் கொடியவளே
தன்னையம்பதி முல்லைக் கொடியவளே
உன்னைத் திக்கரை, விளானை, பாலாவோடை, வளுப்போடை, தன்னையில் கண்டேன்
வாவேன்டி சீலாமீன் வேண்டித்
தாரேன் என் தெத்தப் பல் தேன்மொழி
முத்தமிடு மொத்தமாக
அவையெம்மைச் சூடாக்கும்
தலையாட்டி, குண்டன்கரை, ஊரி, தோப்புக்காடு, பொன்னாவளைத் தெருவடியில் சந்திப்போம்
காரைநகர்க் கண்மணியே
களபூமி தந்த உப்புக் காற்றே
அம்மாள் நீ ,
பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி என்னவளே
உன் தலையில் நெய் வடியும்
காதோரம் குண்டுமணி
கை விரல் நகங்களுள்
உன் நினைவுகளைக் கண்டேன்
காரைநகர் எனும் என் காலத்து
காரைதீவுப் பெண்டே
எள்ளு வேண்ட வந்த நானும்
உனைக் கண்டேன் அன்று…
கற்பனையில் நீ கவிதையில் நீ
நின் வதனம் நெய்வேத்தியம்
நேரிய உச்சிக் கூந்தல் பிரிந்தாவனம்
என் உளமெல்லாம் மத்தளம்
நான் ஊதும் நாத ஸ்வரம்
உன் செவியில் காதல் என்றூதும் கண்ணே
கொடியவளே… கொடியவளே
தன்னையம்பதி முல்லைக் கொடியவளே
கைகளை நீட்டி வாவேன்டி
காரைதீவுப் பெண்டே பேரின்பமே…
கன்னத்தில் கைகள் உரசும்
கலைந்துவிடும் நம் காழ்ப்புணர்வு
பற்களின் வாசம் பூ வாசம்
இதயத்தில் உதிக்கும் தேன் நிலவு
காரைநகர்க் கண்மணியே
களபூமி தந்த உப்புக் காற்றே
அம்மாள் நீ ,
பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி என்னவளே
உன் இதழ் அசைத்து
நான் பேசுவேன்
காதோரம் நல்லிணக்கம்
காலமெல்லாம் நீ வாழ்வு
பூனையின் பாய்ச்சலுக்குள்
நம் உலகம்
காரைதீவு கரும் எள்ளுப் பெண்ணே
நீ அம்புக்குறி
காரைநகர்க் கண்மணியே
களபூமி தந்த உப்புக் காற்றே
அம்மாள் நீ ,
பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி என்னவளே
கொடியவளே… கொடியவளே
தன்னையம்பதி முல்லைக் கொடியவளே
உன்னைத் திக்கரை, விளானையில் கண்டேன்
நின் வதனம் நெய்வேத்தியம்
நேரிய உச்சிக் கூந்தல் பிரிந்தாவனம்
என் உளமெல்லாம் மத்தளம்
நான் ஊதும் நாத ஸ்வரம்
உன் செவியில் காதல் என்றூதும் கண்ணே
பாலாவோடை, வளுப்போடை, தன்னை, தலையாட்டி, குண்டன்கரை, ஊரி, தோப்புக்காடு, பொன்னாவளைத் தெருவடியில் சந்தித்தோம்
காரைநகர்க் கண்மணியே
களபூமி தந்த உப்புக் காற்றே
அம்மாள் நீ ,
பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி என்னவளே
கொடியவளே… கொடியவளே
தன்னையம்பதி முல்லைக் கொடியவளே
உன் இதழசைத்து
நான் பேசுவேன்
காதோரம் நல்லிணக்கம்
காலமெல்லாம் நீ வாழ்வு
பூனையின் பாய்ச்சலுக்குள்
நம் உலகம்
வாவேன்டி சீலாமீன் வேண்டித்
தாரேன் என் தெத்தப் பல் தேன்மொழி
முத்தமிடு மொத்தமாக
அவையெம்மைச் சூடாக்கும்