Перейти к содержимому

ஈணியக்கை ஞானவைரவர் : நீராம்பல் நிலவே…

Kayts-தீவகம் : ஊர்காவற்றுறை _சரவணை_சின்னமடுவடி

0:00 / 0:00

ஈணியக்கை ஞானவைரவர் : நீராம்பல் நிலவே…

3 просмотра · 11 дней назад
Kayts-தீவகம் : ஊர்காவற்றுறை _சரவணை_சின்னமடுவடி
5 подписчиков
3 просмотра · 11 дней назад
நீராம்பல் நிலவே என் நெஞ்சத்துக் கனவே தாமரைக் குளத்தில் நீந்தும் நட்ஷத்திரமே நீ என் நிலவுக்கு தூது செல்…! ஆகா… ஆகா…குங்குமம் தரித்த புதுமகள் நிலா நீ என் செண்பகம் பருந்து பறக்கும் உயரம் கண்டு கோழிகளுக்கு எச்சரித்தவளே ஓ… குயிலே நீ இசைத்த கீதம் கண்டு சேவல் கூவியதே… ஈணியக்கை ஞான வைரவர் கோவில் விருட்ஷ மரமே விந்தை மிகு முது மரமே பொந்தில் வைத்திருக்கும் அரவும் என்ன ? கம்பராயக் குளத்தில் தவமிருக்கும் கொக்கு குருக்கள் கேணியில் குளித்துச் சிறகடிக்கும் ஆட்காட்டி ஈணியக்கை குளத்தில் தரை இறங்கும் நீராம்பல் நிலவே என் நெஞ்சத்துக் கனவே தாமரைக் குளத்தில் நீந்தும் நட்ஷத்திரமே நீ என் நிலவுக்கு தூது செல்…! பொன்வானம் தந்த புகழ்மிகு கதிரவனும் நானே சூரியன் பொய் உலகின் நிலவு தேய்பிறை இச்சை கொள் ஒளியை ஒய்யாராக் கொண்டை ஆக்கி அள்ளிச் செல்வாள் மனதை அவள் நீராம்பல் நிலவு…. சித்திரைப் பனியில் சிறகு விரிக்கும் குயிலே நீ விட்டுச் செல்லும் கீதமொன்று சோளகத்தில் கரைந்து போகும் இலை இழுத்த புகையிலை விளைந்து முறுகி அறைவடையாகி மூன்றுமுறை புகைவாங்கி மொறு மொறு என்று கலகலக்கும் மாலை மதியம் ஐயர் வந்து பூஜையிட்டார் ஞான வைரவருக்கு தேவாரம் பாடிய எங்களிடம் பொங்கல் தந்து மகிழ்வார் ஐயா… சித்திரைப் பனியில் சிறகு விரிக்கும் குயிலே நீ விட்டுச் செல்லும் கீதமொன்று சோளகத்தில் கரைந்து போகும் நீராம்பல் நிலவே என் நெஞ்சத்துக் கனவே தாமரைக் குளத்தில் நீந்தும் நட்ஷத்திரமே நீ என் நிலவுக்கு தூது செல்…! ஆகா ஆகா குங்குமம் தரித்த புதுமகள் நிலா நீ என் செண்பகம் பருந்து பறக்கும் உயரம் கண்டு கோழிகளுக்கு எச்சரித்தவளே ஓ…குயிலே நீ இசைத்த கீதம் கண்டு சேவல் கூவியதே… பொன்வானம் தந்த புகழ்மிகு கதிரவனும் நானே சூரியன் பொய் உலகின் நிலவு தேய்பிறை இச்சை கொள் ஒளியை ஒய்யாராக் கொண்டை ஆக்கி அள்ளிச் செல்வாள் மனதை அவள் நீராம்பல் நிலவு….