Перейти к содержимому

கோவை TNAU துணைவேந்தர் முனைவர் V.கீதாலட்சுமி அவர்கள் தலைமையுரை || 60 ஆம் வான்மழை கருத்தரங்கம் | sky

Sky Media

0:00 / 0:00

கோவை TNAU துணைவேந்தர் முனைவர் V.கீதாலட்சுமி அவர்கள் தலைமையுரை || 60 ஆம் வான்மழை கருத்தரங்கம் | sky

1 638 просмотров · 3 года назад
Sky Media
5,24 тыс. подписчиков
1 638 просмотров · 3 года назад
31.03.2023 வெள்ளிக்கிழமை, நமது வனாலயத்தில் நடைபெற்ற 60 ஆம் வான்மழை கருத்தரங்கில், வனம் செயலாளர் திரு.ஸ்கை.வே.சுந்தரராஜ் அவர்கள் தவம் இயற்றினார். வனம் செயல்தலைவர் திரு.K.பாலசுப்பிரமணியன் அவர்கள் வரவேற்புரையாற்றினார், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இஸ்கான் சுவாமி சங்கர்சன கெளரா தாஸ் அவர்கள் சிறப்புரையாற்றினார். கோவை TNAU துணைவேந்தர் முனைவர் V.கீதாலட்சுமி அவர்கள் தலைமையுரையாற்றினார். கோவை ஸ்ரீ அன்னபூர்ணா கெளரிசங்கர் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் திரு.D.ஸ்ரீனிவாசன் சாதனையாளராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். செயற்பாட்டளாராக சத்தியமங்கலம் பல்லுயிர் பாதுகாப்பு அறக்கட்டளை நிறுவனர் திரு.R.நந்தகுமார் அவர்களின் வன விலங்குகள் மற்றும் காடுகளின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வுரையாற்றினார். வனம் அமைப்பின் பசுமை போற்றும் இறைப்பணியில் புதிதாக இணைந்த அறங்காவலர்களுக்கு பட்டயம் வழங்கி கெளரவிக்கப்பட்டனர். இயற்கை விவசாயத்தை பேணும் வனம் அறங்காவலர் கரூர் திரு.N.பெரியசாமி, கோபிசெட்டிபாளையத்தை சார்ந்த திரு.M.ரவிசந்திரன், குண்டடம் திருமதி.யுவராணி கோபால் ஆகியோருக்கு வனம் அமைப்பின் ‘நம்மாழ்வார் விருது’, ராம்ராஜ் காட்டன் மற்றும் தி சென்னை சில்க்ஸ் நிறுவனங்கள் சார்பில் பரிசு கூப்பன் மற்றும் மீன் அமிலம் இயற்கை உரம் பரிசாக வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டனர். மேலும், கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு குலுக்கல் முறையில் தேர்தெடுத்து, ராம் நெய் நிறுவனம்,+தங்கலட்சுமி ஜுவெல் லரி(பல்லடம்+பாப்பம்பட்டி பிரிவு) சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. வனம் பொருளாளர் திரு.R.விஸ்வநாதன் அவர்கள் நன்றியுரை வழங்கினார். இக்கூட்டத்தில் வனம் அமைப்பின் நிர்வாகிகள், அறங்காவலர்கள், இயக்குநர்கள், விவசாயிகள், கல்லூரி மாணவர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். நன்றி TMS, வனம் ஊடகத்துறை