Перейти к содержимому

🔴09/08/2026|ஞாயிறு திருப்பலி பாடல்|இசை மட்டும்lஆண்டின் பொதுக்காலம் பத்தொன்பதாம் ஞாயிறுlNineteenth|

Catholic Sunday Mass Songs -திருவழிபாட்டு பாடல்கள்

0:00 / 0:00

🔴09/08/2026|ஞாயிறு திருப்பலி பாடல்|இசை மட்டும்lஆண்டின் பொதுக்காலம் பத்தொன்பதாம் ஞாயிறுlNineteenth|

196 просмотров · 1 месяц назад
Catholic Sunday Mass Songs -திருவழிபாட்டு பாடல்கள்
312 подписчиков
196 просмотров · 1 месяц назад
🔴09/08/2026 ஞாயிறு திருப்பலி பாடல்கள் ஆண்டின் பொதுக்காலம் பத்தொன்பதாம் ஞாயிறு Nineteenth Sunday in Ordinary Time Holy Mass songs பாடல் இசைகளின் தொகுப்புகள்: -------------------------- அடுத்த பாடலுக்குச் செல்ல கீழேயுள்ள நேரத்தை தொடுக! 1. (00:00) இறைகுலமே எழுந்திடும் நேரமிது (வருகைப் பாடல்) 2. (05:58) திபா 85 : 8ab, 9. 10 - 11. 12 - 13 (பல்லவி : 7) (பதிலுரைப் பாடல்) 3. (09:50) தந்தேன் பலியினில் எனைத்தந்தேன் (காணிக்கைப் பாடல்) 4. (13:43) எனக்காக ஏங்கும் என் தெய்வமே (திருவிருந்துப் பாடல்) 5. (19:36) அமைதியின் தூதனாய் (அமைதி சிறப்புப் பாடல்) 6. (24:14) வங்கக்கடல் வந்து தங்கக் குரல் கொண்டு (மாதாப் பாடல்) 1. வருகைப் பாடல் இறைகுலமே இறைகுலமே எழுந்திடும் நேரமிது இறைவன் தரும் நல் பலியினிலே இணைந்திடும் வேளையிது - 2 அவர் மாட்சி மிக்கவர் நிறைவாழ்வை தந்தவர் தன்னை தந்து மண்ணில் அவர் நம்மை மீட்டவர் - 2 1. அன்பு தேவன் நம்மைத் தேடி வருகின்றார் தேவ பண்பு நீதி நேர்மை காண்கின்றார் தன் கருணை உள்ளத்தால் நம்மை மீட்கின்றார் - 2 பாவ இருளை நீக்கி ஒளியில் வாழ நம்மை அழைக்கின்றார் 2. விண்ணும் மண்ணும் அழிந்து போகும் என்கின்றார் தன் வார்த்தை என்றும் அழியாதென்று உரைக்கின்றார் - 2 அவர் வாழ்ந்த வழியைக் காணச் செய்கின்றார் - 2 அவர் பாதச் சுவட்டில் நாளும் செல்ல வழிகாட்டுகின்றார் 2. பதிலுரைப் பாடல் திபா 85 : 8ab, 9. 10 - 11. 12 - 13 (பல்லவி : 7) பல்லவி: ஆண்டவரே, உம் பேரன்பையும் மீட்பையும் எங்களுக்குத் தந்தருளும். 8ab ஆண்டவராம் இறைவன் உரைப்பதைக் கேட்பேன்; தம் மக்களுக்கு, தம் பற்றுமிகு அடியார்க்கு நிறைவாழ்வை அவர் வாக்களிக்கின்றார்; 9 அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு அவரது மீட்பு அண்மையில் உள்ளது என்பது உறுதி; நம் நாட்டில் அவரது மாட்சி குடிகொள்ளும். - பல்லவி 10 பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும்; நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும். 11 மண்ணினின்று உண்மை முளைத்தெழும்; விண்ணினின்று நீதி கீழ்நோக்கும். - பல்லவி 12 நல்லதையே ஆண்டவர் அருள்வார்; நல்விளைவை நம் நாடு நல்கும். 3. காணிக்கைப் பாடல் தந்தேன் பலியினில் எனைத்தந்தேன் என் தந்தையே உம்மில் சரணடைந்தேன் - 2 நிலையான உறவில் நிலைத்து நின்றேன் - 2 நிறைவாய் வாழ்ந்திடுவேன் 1. இதயம் என்னும் அப்பம் செய்தேன் அதில் அன்பு என்னும் ரசம் கலந்தேன் - 2 உன் பலியில் நான் பலியாக - 2 உள்ளத்தை உமக்களித்தேன் 2. தியாகம் என்னும் பீடம் கண்டேன் அதில் சுயநலத்தை தகனம் செய்தேன் - 2 பொதுப்பணியில் நான் பலியாக - 2 என்னையே உனக்களித்தேன் 4. திருவிருந்துப் பாடல் எனக்காக ஏங்கும் என் தெய்வமே என் இதயத்தில் வாழும் இனியவரே - 2 இன்றும் என்றும் நிறைந்தவரே - 2 உன் நினைவே எந்தன் நிரந்தரமே - 2 1. உலகினில் எதுவும் தேவையில்லை உன் அருகினில் அமர்ந்தேன் ஆதவனே - 2 உன்னில் என்னை சேர்த்திடுவாய் - 2 உன் நிழலாய் என்றும் நடத்திடுவாய் - 2 2. தேனாய் இனிக்கும் உன் குரலில் தெவிட்டா சுவையை அடைந்திடுவேன் - 2 தொலைத்தேன் வாழ்வை உன் கரத்தில் - 2 என் துணையாய் என்றும் வாழ்ந்திடுவாய் - 2 5. அமைதியின் தூதனாய் சிறப்புப் பாடல் அமைதியின் தூதனாய் என்னையே மாற்றுமே - 2 அன்பனே இறைவனே என்னிலே வாருமே 1. பகைமை உள்ள இடத்தில் பாசத்தை வளர்க்கவும் - 2 வேதனை நிறைந்த மனதில் மன்னிப்பு வழங்கவும் கலக்கம் அடையும் வாழ்வில் நம்பிக்கை ஊட்டவும் 2. தளர்ச்சி ஓங்கும் பொழுது மனதிடம் தழைக்கவும் - 2 இருளே சூழும் வேளை ஒளியை ஏற்றவும் துயரம் வாட்டும் நேரம் உதயம் காணவும் 3. ஆறுதல் அன்பை அளித்து புரிதலை வளர்க்கவும் - 2 கொடுப்பதில் நிறைவைக் கண்டு மன்னித்து வாழவும் தன்னலம் ஒழித்துப் புதிய உலகம் படைக்கவும் 6. மாதாப் பாடல் வங்கக்கடல் வந்து தங்கக் குரல் கொண்டு தெம்மாங்கு பாட்டொன்னு பாடுதம்மா - 2 சின்னக்குயில் ஒன்று அன்னை முகம் கண்டு ஆனந்தம் கொண்டாடத் தேடுதம்மா வைகறை மேகங்கள் வாழ்த்துதம்மா அம்மா அம்மா அழகுத் தாயம்மா அன்பே அன்பே உனது பேரம்மா - 2 1. வானிலே ஆ... தேன் நிலா ஆ... வானிலே அந்த தேன் நிலா வலம் வருவது போல என் வாழ்விலே ஒளி வீசிடும் வானம் நீயம்மா ஊனிலே அந்த இறைவனா வந்து தவழ்ந்தது உந்தன் மடியிலா ஞானமே உன்னில் உறைந்ததால் புது வேதம் பிறந்ததா உன்னையே எண்ணியே உருகிப் பாடுவேன் அன்னையே இல்லையேல் அன்பு ஏதம்மா இது பிள்ளை தாய்க்கு பாடும் பாட்டம்மா 2. பாவமே ஆ... பணிந்ததா ஆ... ஆதிமனிதன் செய்த பாவம் அழிக்க வந்தவளே அந்த ஆணவத்தின் தலைவன் அவனை மிதிக்க வந்தவளே தேடித் தேடி தேயும் வாழ்வில் நம்பிக்கை நீயே உன்னைத் தேடும் எனது தேவைகளைப் பூர்த்தி செய்பவளே அன்பெனும் ஆடையில் என்னை மூடவா அன்புக்கு சாட்சியாய் பாரில் வாழுவேன் இந்த பூமி தந்தபுதையல் நீயம்மா #CatholicMassSongs #SundayMass #HolyMass #CatholicHymns #CatholicWorship #Eucharist #CatholicChurch #MassSongs #SundayWorship #ChurchSongs #ChristianHymns #WorshipSongs #CatholicPraise #EntranceHymn #OffertorySong #CommunionHymn #RecessionalHymn #LiturgyMusic நன்றிகள் : இந்த பாடலுக்கு உழைத்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கு இதயம் நிறைந்த நன்றிகள். ☑️NOTE : “I don’t own these songs all rights reserved to the owner” ☑️DISCLAIMER: ▫️Regarding copyright issues please contact “catholicsundaymasssongs@gmail.com” ▫️We do not own this audios. All rights belong to its rightful owner ▫️If any producer or label has an issue with any of the uploads please get in contact (catholicsundaymasssongs@gmail.com) and it will be deleted immediately 🔘If any producer or label has an issue with this song please (CONTACT US DIRECTLY) before doing anything. By sending us an e-mail or a personal message and your content will be removed immediately 🔘We will respond with in 24 hours or less 👍🏻 like Share & Subscribe to our channel