Перейти к содержимому

🔴18/01/2026|ஞாயிறு திருப்பலி பாடல்களின் இசை மட்டும்lஆண்டின் பொதுக்காலம் இரண்டாம் ஞாயிறுlSunday Mass|

Catholic Sunday Mass Songs -திருவழிபாட்டு பாடல்கள்

0:00 / 0:00

🔴18/01/2026|ஞாயிறு திருப்பலி பாடல்களின் இசை மட்டும்lஆண்டின் பொதுக்காலம் இரண்டாம் ஞாயிறுlSunday Mass|

101 просмотр · 8 месяцев назад
Catholic Sunday Mass Songs -திருவழிபாட்டு பாடல்கள்
312 подписчиков
101 просмотр · 8 месяцев назад
🔴18/01/2026 ஞாயிறு திருப்பலி பாடல்கள் இசைமட்டும் ஆண்டின் பொதுக்காலம் இரண்டாம் ஞாயிறு Sunday's Holy Mass songs பாடல்களின் இசை தொகுப்புகள்: -------------------------- அடுத்த பாடலுக்குச் செல்ல கீழேயுள்ள நேரத்தை தொடுக! 1. (00:00) அருளின் திருகுலமே (வருகைப் பாடல்) 2. (05:07) திபா 40: 1,3ab. 6-7a. 7b-8. 9 (பல்லவி: 7a-8a) (பதிலுரைப் பாடல்) 3. (08:56) ஆவியிலே புதுப்பிறப்படைந்த (காணிக்கைப் பாடல்) 4. (14:26) திருமுழுக்குப் பெற்ற இறைமகன் இயேசு (திருவிருந்துப் பாடல்) 5. (20:06) நீராலும் ஆவியாலும் பிறந்தோம் (நிறைவுப் பாடல்) 1. வருகைப் பாடல் இதோ வருகின்றேன் நான் இதோ வருகின்றேன் இயேசுவின் நல்வார்த்தை நம்பி இதோ வருகின்றேன் - 2 பார்வையற்றோர் பார்க்க காது கேளாதோர் கேட்க என படைத்தவரின் துணை கொண்டு இதோ வருகின்றேன் 1. ஆபிரகாமை அழைத்த தேவன் என்னையுமே அழைக்கின்றார் ஆபேலின் காணிக்கையை போல் என்னையும் நான் அழைக்கின்றேன் - 2 இருள்சூழ்ந்த பள்ளதாக்கில் நாளும் நடக்கும் போதிலும் - 2 கரம் பிடித்து காக்கும் எனை மார்போடு அனைக்கும் வல்ல தேவன் வார்த்தை நம்பி இதோ வருகின்றேன் 2. எளியோருக்கு நற்செய்தி சொல்ல இதோ வருகின்றேன் சிறைபட்டோரே விடுவிக்க இதோ நானும் வருகின்றேன் - 2 இறையருள்தரும் ஆண்டினை அறிவிக்க வருகின்றேன் - 2 ஆயன் குரல் கேட்டு என் ஆடுகளை காக்க தூய ஆவி துணை கொண்டு இதோ வருகின்றேன் 3. அடிமைகளின் சங்கிளியை உடைக்க இதோ வருகின்றேன் அருள்சாதனம் நிறைவேற்ற ஆவலோடு வருகின்றேன் ஏழ்மை என்றும் அடிமை என்றும் இல்லை இந்த உலகிலே - 2 சமத்துவத்தை படைக்க இறை சமூகத்தை எழுப்ப ஆற்றல் தரும் ஆண்டவரை அண்டி வருகின்றேன் இதோ வருகின்றேன் 2. பதிலுரைப் பாடல் திபா 40: 1,3ab. 6-7a. 7b-8. 9 (பல்லவி: 7a-8a) உமது திருவுளம் நிறைவேற்ற ஆண்டவரே, இதோ வருகின்றேன் - 2 1. நான் ஆண்டவருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவரும் என் பக்கம் சாய்ந்து எனது மன்றாட்டைக் கேட்டருளினார். 3. புதியதொரு பாடலை, நம் கடவுளைப் புகழும் பாடலை என் நாவினின்று எழச் செய்தார். 6. பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை; எரிபலியையும் பாவம் போக்கும் பலியையும் நீர் கேட்கவில்லை; ஆனால், என் செவிகள் திறக்கும்படி செய்தீர். 7. எனவே, ‘இதோ வருகின்றேன்.’ 7ç. என்னைக் குறித்துத் திருநூல் சுருளில் எழுதப்பட்டுள்ளது; 8. என் கடவுளே! உமது திருவுளம் நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்; உமது திருச்சட்டம் என் உள்ளத்தில் இருக்கின்றது என்றேன் நான். 9ç. என் நீதியை, நீர் நிலைநாட்டிய நற்செய்தியை மாபெரும் சபையில் அறிவித்தேன்; நான் வாயை மூடிக்கொண்டிருக்கவில்லை; ஆண்டவரே! நீர் இதை அறிவீர். 3. காணிக்கைப் பாடல் இதோ இதோ என்னை தந்தேன் இறைவா இதோ இதோ எல்லாம் தந்தேன் தலைவா - 2 பொன்னை தரவா பொருள் தரவா என்னை தருவேன் எல்லாம் தருவேன் 1. அனைத்து உலகின் இறையவனே உன் அருட்பெருக்கின் கொடை தரவந்தோம் - 2 நிலத்தின் விளைவையும் உழைப்பையுமே அப்பமாய் ரசமாய் தருகின்றோம் - 2 2. தீமை எமக்கு செய்தவரை தினம் மன்னித்து பலி தர வருகின்றோம் - 2 தேவ கிருபை மழையாகும் இத்தியாக பலிதனை தருகின்றோம் - 2 4. திருவிருந்துப் பாடல் அன்பில் கனிந்து வந்த அமுதே சிந்தை மகிழ் உறவே தந்தை தரும் உணவே - 2 உனக்காக நான் ஏங்கி தவித்தேன் எனில் வாழும் உணவாக அழைத்தேன் - 2 1. விருந்தாக வரும் தேவன் உனை காண்கையில் வரும் தாகம் பசி எல்லாம் பறந்தோடுதே மறந்தாலும் மறவாத உனதன்பையே இருந்தாலும் இறந்தாலும் மனம் தேடுதே பசியாற பரிவோடு அழைக்கின்றேன் வா இசையோடு தமிழ் சேரும் சுவை காணுவேன் உனைத் தேடி உனை நாடி நிறைவாகுவேன் உன்னில் உருவாகுவேன் 2. என்னோடு நீ கொண்ட உறவானது எந்தன் உயிர் போன பின்னாலும் விலகாதது என்மீது நீ கொண்ட அண்பானது அது தினந்தோறும் பலியாக அரங்கேறுது இறைவா என் இறைவா என் அகம் வாருமே இதயம் என் இதயம் உன் அருள் காணுமே இறையாட்சி சமபந்தி உருவாகுமே மண்ணில் உருவாகுமே 5. நன்றிப் பாடல் ஒளியே ஒளியின் ஒளியாம் இறை ஒளியை ஏற்றுவோம் எங்கும் ஏற்றுவோம் - 2 வீடு எங்கும் தெருவுகள் வீதி எங்கும் நாடு எங்கும் இந்த உலகம் எங்கும் இறையின் அருளால் அருளின் ஒளியை ஏற்றுவோம் - 3 1. பார்வை வேண்டி ஒளியை தேடும் கண்கள் கோடி நீயே போர்வை மூடி உண்மை மறைத்து வாழும் மனங்களில் ஏற்றுவோம் ஒளி உண்மை நம்மையாம் ஒளியை நீதி நேர்மையாம் - 2 தனலாய் எறியும் நிறையின்‌ ஒளியை ஏற்றுவோம் - 3 2. ஒளியில் வாழும் இறைவன் உறவை மண்ணில் வளரசெய்வோம் ஞானகீதம் எங்கும் முழங்க சேர்ந்து பாடிடுவோம் ஒளி உணவும் உயிருமாம் ஒளி வாழ்வும் வழியுமாம் - 2 கதிரால் வீசும் அணையா ஒளியை ஏற்றுவோம் - 3 #CatholicMassSongs #SundayMass #HolyMass #CatholicHymns #CatholicWorship #Eucharist #CatholicChurch #MassSongs #SundayWorship #ChurchSongs #ChristianHymns #WorshipSongs #CatholicPraise #EntranceHymn #OffertorySong #CommunionHymn #RecessionalHymn #LiturgyMusic நன்றிகள் : இந்த பாடலுக்கு உழைத்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கு இதயம் நிறைந்த நன்றிகள் ☑️NOTE : “I don’t own these songs all rights reserved to the owner” ☑️DISCLAIMER: ▫️Regarding copyright issues please contact “catholicsundaymasssongs@gmail.com” ▫️We do not own this audios. All rights belong to its rightful owner ▫️If any producer or label has an issue with any of the uploads please get in contact (catholicsundaymasssongs@gmail.com) and it will be deleted immediately 🔘If any producer or label has an issue with this song please (CONTACT US DIRECTLY) before doing anything. By sending us an e-mail or a personal message and your content will be removed immediately 🔘We will respond with in 24 hours or less 👍🏻 like Share & Subscribe to our channel