Перейти к содержимому

இதய தேவதை| Idhaya Devadhai|🎧 New Tamil Love Song 2026 VKLyrical Tamil Video- Indie music#காதல் பாடல்

VKathiresan's _TamilLyrical_Songs

0:00 / 0:00

இதய தேவதை| Idhaya Devadhai|🎧 New Tamil Love Song 2026 VKLyrical Tamil Video- Indie music#காதல் பாடல்

284 просмотра · 2 дня назад
VKathiresan's _TamilLyrical_Songs
31 подписчик
284 просмотра · 2 дня назад
🎵 Song Details: Lyrics: Written by [V.Kathiresan ] Channel Name:[VKathiresan's _TamilLyrical_Songs] Music Production: Created using [ AI Platform Name] (Free Tier) -Track created using (https://aimusicgen.ai/) This video is non-monetized and shared for non-commercial/creative purposes only in compliance with AI platform terms. [Lyrics by: V. Kathiresan] [SONG TITLE: Idhaya Devathai ] [PRELUDE] [INTRO / HOOK] இதய தேவதை இளமை தாரகை இனிய புன்னகை புதிய மல்லிகை.... புன்னகையில் புது ராகம் பாடும் காதல் வண்ண மயில் முத்தாரம் சூடும் காலம்.... மான்விழி மங்கையே தேன்விழி கங்கையே பார்வையில் பனியும் கொட்டுதே பாவையே இதயம் தொட்டதே.... இதய தேவதை இளமை தாரகை இனிய புன்னகை புதிய மல்லிகை.... புன்னகையில் புது ராகம் பாடும் காதல்... [INTERLUDE 1] [VERSE 1 / CHARANAM 1] கவிதை ஓவியம் காதல் காவியம் இதய நாதமே இனிய கீதமே... எனை ஆள வந்த வசந்த காலமே.... மலர் சூடும் நிலவாய் மனதை ஆளுமே... விழி பேசும் மொழியில் விழுந்தேன் நானுமே... நிழலாக உன்னைத் தொடர்வேன் நாளுமே... வண்ணத் தமிழ் பேசும் வானவில் நீயோ... மெல்லினம் பேசும் மெல்லிய தென்றலோ... சந்தனச் சாரலே சித்திரப் பாவையே... மந்திரப் புன்னகை சிந்தும் தேவதையே... [INTERLUDE 2] [VERSE 2 / CHARANAM 2] மின்மினிப் பார்வையில் மின்சாரம் பாயுதே... உன்முகம் பார்க்கையில் உள்ளம் தான் சாயுதே... சித்திரப் புருவம் வில்லாய் வளையுதே முத்துச் சிரிப்பில் முழு நிலவு விளையுதே... உதிராத பூவாய் உள்ளத்தில் பூத்தாய்... பகிராத அன்பை பார்வையில் கோர்த்தாய்... உயிரோடு கலந்து உன்னதம் சேர்த்தாய்... உயிரின் நரம்பில் இசையால் கோர்த்தாய்.... [chorus] இதய தேவதை இளமை தாரகை இனிய புன்னகை புதிய மல்லிகை.... மான்விழி மங்கையே தேன்விழி கங்கையே பார்வையில் பனியும் கொட்டுதே பாவையே இதயம் தொட்டதே.... புன்னகையில் புது ராகம் பாடும் காதல் மல்லிகையில் அவதாரம் காணும் காதல்.. சொல்லாத சொல்லில் சுகமான ராகம் கண்ணோடு பேசும் மௌனத்தின் வேதம் ...!!!