Jehovah Nissi ஜெயக்கொடி (யேகோவா நிசி) Tamil Christian Song - Leonard Giftson Donald E
Leonard Giftson Donald E | KINGDOM CHURCH
0:00 / 0:00
Jehovah Nissi ஜெயக்கொடி (யேகோவா நிசி) Tamil Christian Song - Leonard Giftson Donald E
3 571 просмотр · 2 месяца назад
Leonard Giftson Donald E | KINGDOM CHURCH
2 тыс. подписчиков
3 571 просмотр · 2 месяца назад
#JehovahNissi #ஜெயக்கொடி #cross #யெகோவா #நிசி
அப்பொழுது மோசேயும் இஸ்ரவேல் புத்திரரும் கர்த்தரைப் புகழ்ந்துபாடின பாட்டு:
கர்த்தரைப் பாடுவேன்;
அவர் மகிமையாய் வெற்றி சிறந்தார்; குதிரையையும் குதிரைவீரனையும் கடலிலே தள்ளினார்.
யாத்திராகமம் 15:1
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு அருளும் வெற்றியைப் பாடும் ஒரு புதிய தமிழ் கிறிஸ்தவப் பாடல்!
"யேகோவா நிசி" - கர்த்தரே நமது ஜெயக்கொடி.
நம் வாழ்வின் போராட்டங்களிலும்,
சாத்தானின் தந்திரங்களிலும்
கர்த்தர் நமக்கு வெற்றியைத் தருகிறார்.
பாவத்தின் பிடியிலிருந்தும்,
சாபத்தின் கட்டுகளிலிருந்தும்
நம்மை விடுவித்த அந்த வல்லமையுள்ள தேவனைப் போற்றிப் பாடுவோம்.
இந்த பாடல் உங்கள் ஆவிக்குரிய வாழ்வை உற்சாகப்படுத்தி, கர்த்தருடைய வெற்றியை உங்கள் வாழ்வில் அறிக்கை செய்ய உதவும்.
இந்த பாடலைக் கேட்டு ஆசீர்வதிக்கப்படுங்கள்!
#TamilChristianSong #JehovahNissi #LeonardGiftsonDonaldE #ChristianDevotional #WorshipSong #TamilGospelSongs #ஜெயக்கொடி #யேகோவாநிசி
மோசே பாடினார்:
கர்த்தர் என் பெலனும் என் கீதமுமானவர்;
அவர் எனக்கு இரட்சிப்புமானவர்; அவரே என் தேவன்,
அவருக்கு வாசஸ்தலத்தை ஆயத்தம்பண்ணுவேன்;
அவரே என் தகப்பனுடைய தேவன், அவரை உயர்த்துவேன்;
கர்த்தரே யுத்தத்தில் வல்லவர்; கர்த்தர் என்பது அவருடைய நாமம்.
யாத்திராகமம் 15:2-3
பார்வோனின் இரதங்களையும் அவன் சேனைகளையும் சமுத்திரத்திலே தள்ளிவிட்டார்;
அவனுடைய பிரதான அதிபதிகள் சிவந்த சமுத்திரத்தில் அமிழ்ந்துபோனார்கள்.
ஆழி அவர்களை மூடிக்கொண்டது; கல்லைப்போல ஆழங்களில் அமிழ்ந்துபோனார்கள்.
கர்த்தாவே, உம்முடைய வலதுகரம் பலத்தினால் மகத்துவம் சிறந்திருக்கிறது;
கர்த்தாவே, உம்முடைய வலதுகரம் பகைஞனை நொறுக்கிவிட்டது.
யாத்திராகமம் 15:4-6
உமக்கு விரோதமாய் எழும்பினவர்களை உமது முக்கியத்தின் மகத்துவத்தினாலே நிர்மூலமாக்கினீர்;
உம்முடைய கோபாக்கினியை அனுப்பினீர், அது அவர்களைத் தாளடியைப்போலப் பட்சித்தது.
உமது நாசியின் சுவாசத்தினால் ஜலம் குவிந்து நின்றது; வெள்ளம் குவியலாக நிமிர்ந்து நின்றது; ஆழமான ஜலம் நடுக்கடலிலே உறைந்துபோயிற்று.
தொடருவேன், பிடிப்பேன், கொள்ளையாடிப் பங்கிடுவேன், என் ஆசை அவர்களிடத்தில் திருப்தியாகும், என் பட்டயத்தை உருவுவேன், என் கை அவர்களைச் சங்கரிக்கும் என்று பகைஞன் சொன்னான்.
யாத்திராகமம் 15:7-9
உம்முடைய காற்றை வீசப்பண்ணினீர், கடல் அவர்களை மூடிக்கொண்டது;
திரளான தண்ணீர்களில் ஈயம்போல அமிழ்ந்துபோனார்கள்.
கர்த்தாவே, தேவர்களில் உமக்கு ஒப்பானவர் யார்?
பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரும், துதிகளில் பயப்படத்தக்கவரும், அற்புதங்களைச் செய்கிறவருமாகிய உமக்கு ஒப்பானவர் யார்?
நீர் உமது வலதுகரத்தை நீட்டினீர்; பூமி அவர்களை விழுங்கிப்போட்டது.
நீர் மீட்டுக்கொண்ட இந்த ஜனங்களை உமது கிருபையினாலே அழைத்து வந்தீர்;
உம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்துக்கு நேராக அவர்களை உமது பலத்தினால் வழி நடத்தினீர்.
யாத்திராகமம் 15:10-13