Перейти к содержимому

சர்வ சிருஷ்டிக்கும் எஜமான் நீரே | Sarva Sirushtikkum Ejamaan Neere | #tamilchrstiansongs

Songs of Zion

0:00 / 0:00

சர்வ சிருஷ்டிக்கும் எஜமான் நீரே | Sarva Sirushtikkum Ejamaan Neere | #tamilchrstiansongs

80 369 просмотров · 2 месяца назад
Songs of Zion
15,9 тыс. подписчиков
80 369 просмотров · 2 месяца назад
சர்வ சிருஷ்டிக்கும் எஜமான் நீரே | Sarva Sirushtikkum Ejamaan Neere | #tamilchrstiansongs 🎹 Music & Production: Rufus 📺 YouTube Channel: @SongofZionSongs Mixed and Mastered @ Adon Fellowship Studio. Produced by Adon Fellowship. songofzionsongs@gmail.com #tamilchristiansongs I #தமிழ்கிறிஸ்தவபாடல் I 2026 Please do not re-upload our songs without obtaining proper permission. Unauthorized uploads are not permitted. Thank you for respecting our ministry and our work. 🎵 சர்வ சிருஷ்டிக்கும் எஜமான் நீரே பிரபஞ்சம் முழுவதையும் சிருஷ்டித்து, அனைத்தையும் ஆளும் சர்வவல்லமையுள்ள தேவனை மகிமைப்படுத்தும் ஆவியால் நிரம்பிய தமிழ் கிறிஸ்தவ ஆராதனைப் பாடல். வானத்தையும் பூமியையும், காணப்படுகிறவைகளையும் காணப்படாதவைகளையும் படைத்தவராகிய ஆண்டவருக்கே எல்லா மகிமையும், துதியும், கனமும் உரியது. இந்தப் பாடல் சிருஷ்டிகரான தேவனின் மகத்துவத்தையும், அவருடைய பரிபூரண ஆட்சியையும் அறிவிக்கிறது. 📖 "ஆரம்பத்தில் தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்." — ஆதியாகமம் 1:1 📖 "எல்லாவற்றையும் உண்டாக்கினவர் தேவன்." — எபிரெயர் 3:4 📖 "அவராலேயும், அவரைக்கொண்டும், அவருக்குள்ளாகவும் சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக." — ரோமர் 11:36 இந்தப் பாடல் ஒவ்வொரு இருதயத்தையும் சிருஷ்டிகரான தேவனை ஆவியோடும் உண்மையோடும் ஆராதிக்க ஊக்குவிக்கட்டும். 🙏 கேளுங்கள் • ஆராதியுங்கள் • ஆசீர்வாதம் பெறுங்கள் 👍 Like | 🔔 Subscribe | 📢 Share #சர்வசிருஷ்டிக்கும்எஜமான்நீரே #LordOfAllCreation #CreatorGod #TamilChristianSong #TamilChristianSongs #TamilWorship #TamilGospelSong #TamilChristianMusic #TamilPraiseSong #SongOfZion #RufusMusic #TamilDevotional #worshipmusic "உங்களுக்கும் பரலோகத்தில் எஜமான் இருக்கிறாரென்று அறிந்து,..." -(கொலோ. 4:1) 1).சர்வ சிருஷ்டிக்கும் எஜமான் நீரே சர்வ சிருஷ்டியைக் காப்பவர் நீரே எங்கள் இருதயத்தில் உம்மைப் போற்றிடுவோம் என்றென்றும் பணிந்து தொழுவோம் ஆ...ஆ...ஆ...அல்லேலூயா! ஆ ஆ ஆ ஆமென்! 2).வானம் பூமி ஒழிந்து போனாலும் உம் வார்த்தை என்றும் மாறாது உலகம் அழிந்து மறைந்துபோம் விசுவாசி என்றென்றும் நிலைப்பான் ஆ...ஆ...ஆ...அல்லேலூயா! ஆ ஆ ஆ ஆமென்! 3).எந்தன் மீட்பரும் ஜீவனும் நீரே என்னை காக்கும் கர்த்தரும் நீரே என்னை உமக்கு என்றும் அர்ப்பணித்தேன் என் வாழ்வினில் ஜோதியும் நீரே ஆ...ஆ...ஆ...அல்லேலூயா! ஆ ஆ ஆ ஆமென்! 4).சாத்தான் உன்னை எதிர்த்த போதும் ஜெய கிறிஸ்து உன்னோடு உண்டே தோல்வி எங்கும் உனக்கு இல்லையே துதி கானம் தொனித்து மகிழ்வாய் ஆ...ஆ...ஆ...அல்லேலூயா! ஆ ஆ ஆ ஆமென்! 5).கர்த்தர் கரத்தின் கிரியைகள் நாங்கள் கிருபை எங்கள் மேல் ஊற்றுவீரே ஆவி ஆத்துமா சரீரம் உம் சொந்தமே அதை சாத்தான் தொடாமல் காப்பீரே ஆ...ஆ...ஆ...அல்லேலூயா! ஆ ஆ ஆ ஆமென்! 6).எல்லா மனிதர்க்கும் ஆண்டவர் நீரே எல்லா ஆசீர்வாதத்திற்கும் ஊற்றே எங்கள் இதயத்தை உம்மிடம் படைக்கின்றோமே ஏங்குகின்றோம உம் ஆசீர் பெறவே ஆ...ஆ...ஆ...அல்லேலூயா! ஆ ஆ ஆ ஆமென்!