தொ.பரமசிவனின் அழகர் கோயில் - முனைவர் மா.பரமசிவன் உரை | VETCHI MRJTS
வெட்சி
0:00 / 0:00
தொ.பரமசிவனின் அழகர் கோயில் - முனைவர் மா.பரமசிவன் உரை | VETCHI MRJTS
361 просмотр · 7 дней назад
வெட்சி
108 подписчиков
361 просмотр · 7 дней назад
வெட்சி : பல்துறைத் தமிழாய்விதழ்,
கல்விப்புலத்தில் ஆய்வுகளாக நிகழ்ந்த நூல்களின் மீதான உரையாடல் நிகழ்வினை, "கல்விப்புல முன்னாய்வுகளும் எதிர்கால ஆய்வுகளும்" எனும் பொருண்மையில் இணைய வழியாக ஒருங்கிணைக்கிறது. மாதந்தோறும் 2,4 ஆவது செவ்வாய்க்கிழமைகளில் இளம் ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வுக்களம் சார்ந்த ஓர் ஆய்வுநூல் குறித்து உரையாடும் தன்மையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நிகழ்வானது, முன்னாய்வுகளின் போக்குகளை அறிதலினூடாக ஆய்வு இடைவெளிகளைக் கண்டறிதல், பல்துறைப் பார்வைகளை முன்வைத்தல், சமகால ஆய்வுகளைச் செறிவாகச் செய்யப்பட வேண்டுமென்ற நோக்கங்களை முன்வைக்கிறது. இது முதல் ஆய்வுநூல் அரங்கு. அழகர் கோயில் எனும் பொருண்மையில் தொ.பரமசிவம், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் (1976-79) செய்த முனைவர்பட்ட ஆய்வேட்டை நூலாக்கம் செய்து 1989 ஆம் ஆண்டு மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பதிப்புத்துறை வெளியிட்டுள்ளது. இந்நூல் குறித்து மதுரை தியாகராசர் கல்லூரி, தமிழ் உதவிப்பேராசிரியர் முனைவர் மா. பரமசிவன் (தமிழ் உயராய்வு மையம்) ஆற்றிய உரை.
ஆய்வின் அக-புறக்கட்டமைப்பு, மயிலை சீனி.வேங்கடசாமி, கே.என்.இராதாகிருஷ்ணன், Dennis Hudson, J.H.Hutton ஆகியோரின் அழகர் கோயில் குறித்த முன்னாய்வுகள், பிற்சேர்க்கைகளின் முக்கியத்துவம், இந்நூலில் கையாளப்பட்டுள்ள விளக்கவியல், களஆய்வு அணுகுமுறைகளுடன் சமூகவியல், வரலாற்றியல், ஒப்பியல், பண்பாட்டியல் ஆகிய பல்துறைப் பார்வைகளைக் கைக்கொண்ட தன்மை, இயல்களின் பகுப்பு, ஆய்வு முடிவுகள், மேலாய்வுக்களன்கள் என இந்த உரை மிக விரிவாகப் பேசுகிறது. முன்னாய்விலிருந்து விரியும் தன்மை, அழகர் மலை, பௌத்த சிற்ப மரபு, நரசிம்ம வழிபாடு, சமண,பௌத்த,வைணவ சமய மோதல்கள், நாட்டார் வழிபாட்டு இணைப்பு, அழகரின் தோற்றம், சித்திரைத் திருவிழா, வாய்மொழிப் பாடல்கள், பழமரபுக் கதை, பதினெட்டாம் படி கருப்பு இவற்றினூடாகத் தமிழ் ஆய்வாளர்களுக்குப் பண்பாட்டியல் மற்றும் சமூகவியல் பார்வை தேவை என்பதைப் பேராசிரியர் தொ.பரமசிவனின் ஆய்வு வலியுறுத்துவதை முன்வைக்கும் உரை.