Перейти к содержимому

டிஜிட்டல் கல்வி & டிஜிட்டல் சாதனங்கள் அறிமுகம் தலைப்பில் பொன்மலைப்பட்டி பாவை அறக்கட்டளையில்!

trichyfastnews

0:00 / 0:00

டிஜிட்டல் கல்வி & டிஜிட்டல் சாதனங்கள் அறிமுகம் தலைப்பில் பொன்மலைப்பட்டி பாவை அறக்கட்டளையில்!

23 просмотра · 1 дн. назад
trichyfastnews
1,82 тыс. подписчиков
23 просмотра · 1 дн. назад
முதியோருக்கான டிஜிட்டல் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சி மாவட்ட சமூக நல அலுவலகம் சார்பில், முதியோரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், “முதியோருக்கான டிஜிட்டல் மற்றும் நிதியியல் கல்வித் திட்டம்” ஐந்து நாட்கள் நடைபெற்று வருகிறது. இதன் மூன்றாம் நாள் நிகழ்ச்சி இன்று 12.10.2026 காலை 10.30 மணியளவில், திருச்சிராப்பள்ளி பொன்மலைப்பட்டியில் உள்ள பாவை அறக்கட்டளையின் அன்புச் சோலை மையத்தில் நடைபெற்றது. “டிஜிட்டல் கல்வி மற்றும் டிஜிட்டல் சாதனங்கள் அறிமுகம்” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பாவை அறக்கட்டளையின் கண்காணிப்பாளர் திரு C. தினேஷ் பாபு வரவேற்புரை வழங்கினார். திருச்சிராப்பள்ளி மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி A. விஜயலட்சுமி தலைமை உரையாற்றினார். திருச்சி ஹால்மார்க் பிசினஸ் ஸ்கூல், தொழில் மேம்பாட்டு மையத்தின் உதவிப் பேராசிரியரும் ஒருங்கிணைப்பாளருமான திரு. A. எபனேசர் ராஜா சிறப்பு வளநபராகக் கலந்துகொண்டு, முதியோருக்கான டிஜிட்டல் கல்வி, டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்தும் முறைகள் மற்றும் அன்றாட வாழ்க்கையில் தொழில்நுட்பத்தின் பயன்கள் குறித்து எடுத்துரைத்தார். முதியோர் கைப்பேசிகளைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துதல், டிஜிட்டல் சேவைகளைப் புரிந்துகொள்ளுதல் மற்றும் தொழில்நுட்பத்தைத் தன்னம்பிக்கையுடன் கையாளுதல் போன்றவற்றை அறிந்துகொள்ளும் வகையில் நிகழ்ச்சி அமைந்தது. திருச்சிராப்பள்ளி மாவட்ட சமூக நல அலுவலகத்தின் மகளிர் அதிகாரமளித்தல் மையத்தின் பாலின வல்லுநர் திருமதி S. மெகருன் நிஷா நன்றியுரை வழங்கினார். முதியோர் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை எளிதாகப் பயன்படுத்தவும், தன்னம்பிக்கையுடன் வாழவும் உதவும் வகையில் இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.