திருச்சி பொன்மலைப்பட்டியில் உள்ள பாவை அறக்கட்டளை சார்பில் உலக மனநல தின விழிப்புணர்வு நிகழ்ச்சி!
trichyfastnews
0:00 / 0:00
திருச்சி பொன்மலைப்பட்டியில் உள்ள பாவை அறக்கட்டளை சார்பில் உலக மனநல தின விழிப்புணர்வு நிகழ்ச்சி!
251 просмотр · 2 дн. назад
trichyfastnews
1,82 тыс. подписчиков
251 просмотр · 2 дн. назад
பாவை அறக்கட்டளை சார்பில் உலக மனநல தின விழிப்புணர்வு நிகழ்ச்சி!
திருச்சிராப்பள்ளி பொன்மலைப்பட்டியில் உள்ள பாவை அறக்கட்டளை சார்பில், உலக மனநல தினத்தை முன்னிட்டு இன்று 10.10.2026 மாலை 7 மணியளவில் மனநல விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
பாவை அறக்கட்டளையின் கண்காணிப்பாளர் திரு. தினேஷ் பாபு வரவேற்பு உரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியின் கருப்பொருளாக “என்னால் முடியும்” (I Can Do It) என்பது எடுத்துக்கொள்ளப்பட்டது. மனநலத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துதல், தன்னம்பிக்கையை வளர்த்தல், மன அழுத்தங்களை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்துதல் மற்றும் நேர்மறையான சிந்தனைகளை வளர்த்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சிறப்பு வளவாளராக, திருச்சி தூய வளனார் கல்லூரியின் செப்பர்டு (SHEPHERD) துறையின் ஒருங்கிணைப்பாளர் திருமதி H. யசோதை (MSW, PGDC) பங்கேற்று, “என்னால் முடியும்” என்ற தலைப்பில் உரையாற்றினார். மேலும் சமூக ஆர்வலர் திரு. பாபு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் உரையாற்றினார்.
மனநலத்தைப் பேணுவதன் அவசியம், தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்வது, மன உறுதியை வளர்த்துக்கொள்வது மற்றும் நேர்மறையான அணுகுமுறையுடன் செயல்படுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
உடல் நலனைப் போலவே மனநலனுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி அமைந்தது.