Перейти к содержимому

பாமாலை 341 : ஒன்றே தேவை என்றுரைத்தீர்

R D Durai Selvakumar

0:00 / 0:00

பாமாலை 341 : ஒன்றே தேவை என்றுரைத்தீர்

108 просмотров · 2 недели назад
R D Durai Selvakumar
444 подписчика
108 просмотров · 2 недели назад
பாமாலை 341 : ஒன்றே தேவை என்றுரைத்தீர் One thing is needful, Lord Tune : Bavarian 43 Major : Eb 1 ஒன்றே தேவை என்றுரைத்தீர், ஸ்வாமீ, அதை நாடுவேன்; என்னை உம்மண்டைக்கழைத்தீர், மாய்கையை அரோசிப்பேன்; நான் உலகை எத்தனை தழுவினாலும் பலதிலே மெத்த உழன்றறுத்தாலும் அனைத்தும் அபத்தம், ஒன்றானதை நான் அடைந்தால், நான் பூரண பாக்கியவான். 2 இதைச் சிஷ்டிகளிடத்தில் தேடினால், கிடையாதே; இயேசு ஸ்வாமியின் வசத்தில் வாழ்வெல்லாம் இருக்குமே; என் ஆத்துமமே, உன் இக்கட்டுக்குசாவும் இம்மானுவேலே பரிபூரணம் யாவும், அகப்படப்பண்ணுவர், அவரை நீ உன் பங்கும் உன் கதியுமாகப் பிடி. 3 இந்தப் பங்கையே மரியாள் தனக்குத் தெரிந்தாளே; வாஞ்சையாகிய பசியால் கிறிஸ்தின் பாதத்தண்டையே இருந்து தன் போதகர் சொன்ன தெய்வீக மொழியைத் தன் நெஞ்சில் உட்கொண்டு லௌகீக சிந்திப்பை வெறுத்துத் தன் மீட்பரையே அடைந்ததால், மனதில் பூரித்தாளே. 4 நானும் அந்த வாஞ்சையோடே உம்மையே, என் இயேசுவே, அண்டிக்கொண்டேன்; நீர் என்னோடே ஐக்கியமாகும், ஜீவனே பெரும் கூட்டத்தோடே அநேகர் சேர்ந்தாலும் நான் உம்மையே நேசத்தால் ஆசையினாலும் தொடருவேன்; உமக்குள் யாவும் உண்டே, நீர் சொல்லுவதாவியும் ஜீவனுமே. 5 இப்போ பூரணக் களிப்பு என் நெஞ்சை நிரப்பிற்று; நல்ல மேய்ச்சலின் தித்திப்பு என்னைத் திருப்தியாக்குது. உம்மோடே நான் ஐக்கியமாம் ஆறுதலுக்கும் நான் பக்தியில் உம்மைக் கண்ணோக்குவதுக்கும் சரியாம் மகிழ்ச்சியை எங்கும் பெறேன், சரியாம் தித்திப்பை ருசித்து மிரேன். 6 ஆகையாலே நான் தெரிந்து பற்றும் பேறெல்லாம் நீரே; என்னை நீர் ஆராய்ந்தறிந்து உண்மையாக்கும், இயேசுவே; நான் போம் வழி வாதையாமோ என்று பாரும், என் கால்களை மோட்ச வழியிலே காரும்; நான் உம்மை ஆதாயப்படுத்திக் கொண்டே இருக்கவும்; மற்றது குப்பையாமே.