Перейти к содержимому

தேன் இனிமையிலும் ஏசுவின் நாமம்

CHRISTIAN DEVOTIONAL SONGS

0:00 / 0:00

தேன் இனிமையிலும் ஏசுவின் நாமம்

443 просмотра · 1 год назад
CHRISTIAN DEVOTIONAL SONGS
1,09 тыс. подписчиков
443 просмотра · 1 год назад
தேன் இனிமையிலும் ஏசுவின் நாமம் திவ்விய மதுரமாமே – அதைத் தேடியே நாடி ஓடியே வருவாய், தினமும் நீ மனமே சரணங்கள் 1. காசினிதனிலே நேசமதாகக் கஷ்டத்தை உத்தரித்தே – பாவக் கசடதை அறுத்துச் சாபத்தைத் தொலைத்தார் கண்டுணர் நீ மனமே — தேன் 2. பாவியை மீட்கத் தாவியே உயிரைத் தாமே ஈந்தவராம் – பின்னும் நேமியாம் கருணை நிலைவரமுண்டு நிதம் துதி மனமே — தேன் 3. காலையில் பனிபோல் மாயமாய் யாவும் உபாயமாய் நீங்கிவிடும் – என்றும் கர்த்தரின் பாதம் நிச்சயம் நம்பு கருத்தாய் நீ, மனமே — தேன் 4. துன்பத்தில் இன்பம் தொல்லையில் நல்ல துணைவராம் நேசரிடம் – நீயும் அன்பதாய்ச் சேர்த்தால் அணைத்துனைக் காப்பார் ஆசை கொள் நீ மனமே — தேன் 5. பூலோகத்தாரும் மேலோகத்தாரும் புகழ்ந்து போற்று நாமம் – அதைப் பிடித்துகொண்டால்தான் பேரின்பவாழ்வில் பெறுவாய்நீ மனமே — தேன்