Перейти к содержимому

🔴04/10/2026|ஞாயிறு திருப்பலி பாடல்கள்lஆண்டின் பொதுக்காலம் இருபத்தி ஏழாம் ஞாயிறுlSunday Mass song|

Catholic Sunday Mass Songs -திருவழிபாட்டு பாடல்கள்

0:00 / 0:00

🔴04/10/2026|ஞாயிறு திருப்பலி பாடல்கள்lஆண்டின் பொதுக்காலம் இருபத்தி ஏழாம் ஞாயிறுlSunday Mass song|

1 024 просмотра · 3 дня назад
Catholic Sunday Mass Songs -திருவழிபாட்டு பாடல்கள்
365 подписчиков
1 024 просмотра · 3 дня назад
🔴04/10/2026 ஞாயிறு திருப்பலி பாடல்கள் ஆண்டின் பொதுக்காலம் இருபத்தி ஏழாம் ஞாயிறு Twenty Seventh Sunday in Ordinary Time Holy Mass songs பாடல்களின் தொகுப்புகள்: -------------------------- அடுத்த பாடலுக்குச் செல்ல கீழேயுள்ள நேரத்தை தொடுக! 1. (00:00) இறைவன் ஆட்சி மண்ணில் மலர (வருகைப் பாடல்) 2. (05:33) திபா 80 : 8, 11. 12 - 13. 14 - 15. 18 - 19 (பல்லவி : எசா 5 : 7a) (பதிலுரைப் பாடல்) 3. (10:17) என்னை உன்னிடம் தந்தேன் (காணிக்கைப் பாடல்) 4. (14:56) என் இயேசுவே (திருவிருந்துப் பாடல்) 5. (19:49) நீங்காத வரம் வேண்டும் (இறை அமைதி சிறப்புப் பாடல்) 6. (24:53) கருணை நிறைந்த தாயே (மாதாப் பாடல்) 1. வருகைப் பாடல் இறைவன் ஆட்சி மண்ணில் மலர இதயம் மகிழ்ந்து பகிர்ந்து வாழ ஆயனாய் அன்பனாய் நம்மை அழைக்கின்றார் - 2 வாருங்கள் கூடுங்கள் அன்பில் நனைய அருளில் வளர சேருங்கள் - 2 1. ஏழை மாந்தர் ஏற்றம் காண இறைவன் அழைக்கின்றார் ஆலயம் வாருங்கள் அன்பு தேவன் பாருங்கள் எழுச்சி வாழ்வை பிறரில் விதைக்க அவரே விழைகின்றார் ஆலயம் வாருங்கள் அன்பு தேவன் பாருங்கள் விழுகின்ற மனிதமும் அழுகின்ற இதயமும் ஆலயம் வாருங்கள் அன்பு தேவன் பாருங்கள் - 2 2. வார்த்தையான தேவன் இன்று வாழ்வில் இணைகின்றார் ஆலயம் வாருங்கள் அன்பு தேவன் பாருங்கள் வளமை நிறைந்த குருதிதனை பருக தருகின்றார் ஆலயம் வாருங்கள் அன்பு தேவன் பாருங்கள் நலிந்திடும் மனிதமும் நொறுங்கிடும் இதயமும் ஆலயம் வாருங்கள் அன்பு தேவன் பாருங்கள் - 2 2. பதிலுரைப் பாடல் திபா 80 : 8, 11. 12 - 13. 14 - 15. 18 - 19 (பல்லவி : எசா 5 : 7a) பல்லவி: ஆண்டவரது திராட்சைத் தோட்டம் இஸ்ரயேல் குடும்பத்தாரே. 3. காணிக்கைப் பாடல் என்னை உன்னிடம் தந்தேன்  என்னை ஏற்றிடுவாய் இறைவா - 2 இருப்பதெல்லாம் கொடுத்து விட்டேன் உன்னைப் போல் மாற்றிடுவாய் 1. நொறுங்கிய உள்ளம் தருகின்றேன் நிறை வினைக் காண விளைகின்றேன் - 2 உன்னிடத்தில் சரணடைந்தேன் இனி எல்லாமும் நிறைவாகும் - 2 அதை உணர்ந்து கொண்டேன் இறைவா 2. கொடுப்பதில் இன்பம் காண்கின்றேன் கோடி சுகம் அதில் பெறுகின்றேன் - 2 என்னிடத்தில் என்ன உண்டு எல்லாம் நீ தந்த கொடை தானே - 2 அதை ஏற்றிடுவாய் இறைவா 4. திருவிருந்துப் பாடல் என் இயேசுவே - 2 என ஏங்கி அழைத்தேனே உம்மை - 2 எந்தன் குரல் கேட்டீர் செவிசாய்தீர் அப்பத்தில் உயிராய் எழுந்தீர் - 2 நாளும் உம்மை ஆன்ம உணவாக்கி மகிழ்ந்திடுவேன் 1. அறிவின் ஞானம் என்னை உருவாக்கிட செய்யும் தெரிவின் தெளிவும் என்னை உயர்வாக்கிடுமே - 2 இயேசு என் நெஞ்சில் இருக்க இனி நன்மையில் வாழ்வேன் செழிக்க - 2 எந்நாளும் திடம் கொள்வேன் உம்மோடு வாழ்ந்திடுவேன் 2. அன்பும் அருளும் என்னை வளமாக்கிடச் செய்யும் பண்பும் பணிவும் என்னை உருவாக்கிடுமே - 2 இயேசு என் நெஞ்சில் வசிக்க இனி விருந்தினில் கலந்து நான் புசிக்க - 2 நாள்தோறும் பலம் பெறுவேன் என்னோடு நடந்திடுவார் 5. இறை அமைதி சிறப்புப் பாடல் நீங்காத வரம் வேண்டும் எனை நீங்கா நிழலாய் நீ - 2 தன்னுயிர் தந்து என்னையே காக்கும் இறையே திருவே நீ நீங்கா வரமாய் வா - 2 1. அன்பினை ஆடையாய் கொண்டவரே நீங்கா நிழலாய் வா மன்னித்து அணைக்கும் பேரன்பின் சிகரமே நீங்கா நிழலாய் வா நலம் தந்து காக்கும் காருண்யமே நீங்கா நிழலாய் வா ஆறுதல் வார்த்தையின் அன்புள்ளமே நீங்கா நிழலாய் வா தமக்கன்றும் யாவரின் அடைக்கலமே நீதியை நிலையாய் கொண்டவரே ஆன்மீக வாழ்வின் அதிபதியே காயங்கள் தீர்க்கும் மருத்துவரே நீங்கா வரமாய் எனில் வாரும் - 2 இறை அன்பின் சாட்சியாய் எனை மாற்றும் - 2 2. கரங்களில் என்னை பொறித்தவரே நீங்கா நிழலாய் வா இறை அன்பில் வாழ அழைப்பவரே நீங்கா நிழலாய் வா சிறகினுள் என்னை காப்பவரே நீங்கா நிழலாய் வா சினமில்லா தோழனாய் அணைப்பவரே நீங்கா நிழலாய் வா வாழ்வின் தேடலும் உன்னிடமே வாழ்வேன் உனக்காய் என் இறையே வரங்களை நல்கும் வானமுதே என் வாழ்வின் வெளிச்சம் நீ இறையே நீங்கா வரமாய் எனில் வாரும் - 2 இறையன்பின் சாட்சியாய் எனை மாற்றும் - 2 6. மாதாப் பாடல் கருணை நிறைந்த தாயே கன்னி மரியே அம்மா காவல் தெய்வம் நீயே காக்கும் அன்னை நீயே - 2 கரம் கூப்பி உமைத்தொழுதோம் கடவுளிடம் பேசும் அம்மா எளியோர் எம் வேண்டுதல்கள் இறைவனிடம் சொல்லும் அம்மா - 2 1. வழியெல்லாம் இருளாக விழியெல்லாம் நீராக மனமெல்லாம் சுமையாக மாறாத துயராக - 2 என் வாழ்நாள் கழிகின்றதே என் சோகம் வளர்கின்றதே - 2 கனிவுடனே உன் பாதம் தேடி வந்தோம் என் தாயே கருணை மழைப்பொழிந்து எங்கள் கவலைகளை தீரும் அம்மா 2. உறவெல்லாம் பகையாக உழைப்பெல்லாம் வீணாக உயர்வெல்லாம் கனவாக உதவாத நினைவாக - 2 கண்ணீரில் நான் வாழ்கிறேன் கலக்கத்தால் நான் வீழ்கிறேன் - 2 கருத்துடனே உன் துணையை நாடி வந்தோம் எம் தாயே தீவினைகள் போக்கி எம்மை நல்வழியில் நடத்தும் அம்மா #CatholicMassSongs #SundayMass #HolyMass #CatholicHymns #CatholicWorship #Eucharist #CatholicChurch #MassSongs #SundayWorship #ChurchSongs #ChristianHymns #WorshipSongs #CatholicPraise #EntranceHymn #OffertorySong #CommunionHymn #RecessionalHymn #LiturgyMusic நன்றிகள் : இந்த பாடலுக்கு உழைத்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கு இதயம் நிறைந்த நன்றிகள். ☑️NOTE : “I don’t own these songs all rights reserved to the owner” ☑️DISCLAIMER: ▫️Regarding copyright issues please contact “catholicsundaymasssongs@gmail.com” ▫️We do not own this audios. All rights belong to its rightful owner ▫️If any producer or label has an issue with any of the uploads please get in contact (catholicsundaymasssongs@gmail.com) and it will be deleted immediately 🔘If any producer or label has an issue with this song please (CONTACT US DIRECTLY) before doing anything. By sending us an e-mail or a personal message and your content will be removed immediately 🔘We will respond with in 24 hours or less 👍🏻 like Share & Subscribe to our channel