Перейти к содержимому

🔴06/09/2026|ஞாயிறு திருப்பலி பாடல்கள்lஆண்டின் பொதுக்காலம் இருபத்தி மூன்றாம் ஞாயிறுlSunday Mass song|

Catholic Sunday Mass Songs -திருவழிபாட்டு பாடல்கள்

0:00 / 0:00

🔴06/09/2026|ஞாயிறு திருப்பலி பாடல்கள்lஆண்டின் பொதுக்காலம் இருபத்தி மூன்றாம் ஞாயிறுlSunday Mass song|

747 просмотров · 2 недели назад
Catholic Sunday Mass Songs -திருவழிபாட்டு பாடல்கள்
312 подписчиков
747 просмотров · 2 недели назад
🔴06/09/2026 ஞாயிறு திருப்பலி பாடல்கள் ஆண்டின் பொதுக்காலம் இருபத்தி மூன்றாம் ஞாயிறு Twenty-third Sunday in Ordinary Time Holy Mass songs பாடல்களின் தொகுப்புகள்: -------------------------- அடுத்த பாடலுக்குச் செல்ல கீழேயுள்ள நேரத்தை தொடுக! 1. (00:00) வாருங்கள் வாருங்கள் பலியினில் கலந்திடவே (வருகைப் பாடல்) 2. (04:56) திபா 95 : 1 - 2. 6 - 7. 8 - 9 (பல்லவி : 8b) (பதிலுரைப் பாடல்) 3. (08:54) உறவும் மகிழ்வும் உரிமை கனவும் (காணிக்கைப் பாடல்) 4. (13:58) வான் தந்த அன்பே (திருவிருந்துப் பாடல்) 5. (19:25) உன்னை புகழ எனக்கொரு வரம் தா இறைவா (சிலுவை நாதர் சிறப்புப் பாடல்) 6. (23:57) அருள் நிறை மரியே அம்மா (மாதாப் பாடல்) 1. வருகைப் பாடல் வாருங்கள் வாருங்கள் பலியினில் கலந்திடவே கூடுங்கள் கூடுங்கள் இறைவனில் மகிழ்ந்திடவே - 2 இகத்தில் என்றும் இனிதாய் வாழ இறைவன் ஆசீர் நம்மில் மலர ஒன்றாய் கூடிடுவோம் இணைந்தே பாடிடுவோம் - 2 1. இறைவன் நம்மில் வாழ்ந்திட வேண்டும் ஆ... நாமும் இறைவனில் வளர்ந்திட வேண்டும் ஆ... - 2 உறவில் நாளும் நிலைத்திடவே உண்மை தேவனை அறிந்திடவே - 2 2. இறைவன் பாசத்தை சுவைத்திட வேண்டும் ஆ... தந்தை இறைவனில் கலந்திட வேண்டும் ஆ... - 2 கருணை உள்ளத்தில் நனைந்திடவே என்றும் அவரில் சேர்ந்திடவே - 2 2. பதிலுரைப் பாடல் திபா 95 : 1 - 2. 6 - 7. 8 - 9 (பல்லவி : 8b) பல்லவி: உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். 1 வாருங்கள்; ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள். 2 நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்; புகழ்ப் பாக்களால் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம். - பல்லவி 3. காணிக்கைப் பாடல் உறவும் மகிழ்வும் உரிமை கனவும் சுமந்து வருகின்றோம் உயிரில் கலந்த இறைவன் உனக்கு உவந்து தருகின்றோம் - 2 1. ஆவியினால் நீ நிறைத்த புது இதயம் தர வந்தோம் ஓவியமாய் நீ வரைந்த உறவுகளும் தர வந்தோம் - 2 உன் பாதம் அமர்வதும் பலியாகி மலர்வதும் - 2 ஆ... அருளே திருவே எம் நிறைவே சிறுதுளிகள் சேர்வதால் நதியின் தாகம் தீரும பொன்னும் பொருளும் தருவதால் உனது மேன்மை உயருமோ 2. வேர்வையினால் யாம் படைத்த அழகுலகம் தர வந்தோம் வேண்டி உம்மை யாம் அடைந்த அறம் பொருளும் தர வந்தோம் - 2 உன் அன்பை உணர்வதும் உயிர் ஆற்றல் பெறுவதும் - 2 ஆ... அருளே திருவே எம் நிறைவே சிறுதுளிகள் சேர்வதால் நதியின் தாகம் தீருமோ பொன்னும் பொருளும் தருவதால் உனது மேன்மை உயருமோ 4. திருவிருந்துப் பாடல் வான் தந்த அன்பே நான் கண்ட வாழ்வே தந்தையின் சொல்லே தான் இல்லா நெஞ்சே - 2 கதிராய் இருள் கிழித்திட வழி நடத்திட துணை வா விதையாய் புவி உடைத்திட கனி கொடுத்திட அருள் தா   1. நீரில் நீந்தும் மீன் போல உன்னில் உன்னால் வாழ்கின்றேன் மண்ணைத் தேடும் வேர் போல உன்னை உண்டு உயிராகிறேன் நிழலாய் நடந்த சொந்தம் உடலாய் இணைந்ததே கரத்தில் பொறித்த பந்தம் உயிரில் கலந்ததே நெஞ்சம் எல்லாம் உன் எண்ணம் விழிகள் எல்லாம் உன் வண்ணம் 2. மீண்டும் தோன்றும் அலை போல தீண்டும் அன்பு உணவானதே தூங்கும் போதும் துயிலாமல் தாங்கும் உள்ளம் உறவானதே மனதின் கரைகளெல்லாம் மகிழ்வால் நனைந்ததே உணர்வின் தளிர்களெல்லாம் உறவாய் மலர்ந்ததே மொழிகள் எல்லாம் உன் பாடம் வழிகள் எல்லாம் உன் பாதம் 5. அன்புக்கான சிறப்புப் பாடல் உன்னை புகழ எனக்கொரு வரம் தா இறைவா உன்னை பாட எனக்கொரு வரம் தா இறைவா - 2 எந்தன் நாவால் உன் அன்பை சொல்ல எந்தன் வாழ்வால் உன் வாழ்வை வாழ உமது ஆசி எனக்கு ஆற்றல் தலைவனே 1. உந்தன் அன்பு உயர்ந்தது உந்தன் பண்பு சிறந்தது உந்தன் நேர்மை ஆள்வது உந்தன் கருணை வாழ்வது நானும் உந்தன் அன்பாலே வளர உந்தன் செயலால் சான்று பகர உம்மைப் போற்றி உம்மை புகழ வரங்கள் தா இறைவா உன்னில் வாழ என்னில் நீயும் உறைய வா இறைவா 2. உந்தன் உள்ளம் உயர்ந்தது உந்தன் செயல்கள் சிறந்தது உந்தன் எண்ணம் தூயது உந்தன் வல்லமை நிலைப்பது நானும் உந்தன் எண்ணத்தில் நிறைய எந்தன் செயலால் வாழ்வில் ஒளிர உன்னில் இணைந்து உம்மில் மகிழ அருளை தா இறைவா என்னில் வரமாய் என்றும் நீயே வாழ வா இறைவா 6. மாதாப் பாடல் அருள் நிறை மரியே அம்மா ஆண்டவன் தாயே அம்மா - 2 அடைக்கலம் நீயே நாடி வந்தோமே - 2 அன்பால் எம்மை ஆதரிப்பாயே 1. உன்னத இறைவன் உன் கரம் தவழ்ந்தார் புன்னகையோடு நீ அவர் பணி புரிந்தாய் - 2 இறையருளின் உயர் நிலையை அடைந்தவர் நீயே இறை ஆவியின் ஆலயமாய் திகழ்ந்ததும் நீயே - 2 தலைமுறைகள் வாழ்த்திடும் தயை நிறைந்த அன்னையே காலமெல்லாம் உன் புகழைப் பாடிடுவோமே 2. கவலைகள் தீரும் அன்னையே என்றால் கனவுகள் கூடும் உன் அருள் முகம் கண்டால் - 2 திருமகனைக் கரங்களிலே தாங்கிய தாயே அருள் பொழிந்து அடியவரைக் காத்திடுவாயே - 2 தலைமுறைகள் வாழ்த்திடும் தயை நிறைந்த அன்னையே காலமெல்லாம் உன் புகழைப் பாடிடுவோமே #CatholicMassSongs #SundayMass #HolyMass #CatholicHymns #CatholicWorship #Eucharist #CatholicChurch #MassSongs #SundayWorship #ChurchSongs #ChristianHymns #WorshipSongs #CatholicPraise #EntranceHymn #OffertorySong #CommunionHymn #RecessionalHymn #LiturgyMusic நன்றிகள் : இந்த பாடலுக்கு உழைத்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கு இதயம் நிறைந்த நன்றிகள். ☑️NOTE : “I don’t own these songs all rights reserved to the owner” ☑️DISCLAIMER: ▫️Regarding copyright issues please contact “catholicsundaymasssongs@gmail.com” ▫️We do not own this audios. All rights belong to its rightful owner ▫️If any producer or label has an issue with any of the uploads please get in contact (catholicsundaymasssongs@gmail.com) and it will be deleted immediately 🔘If any producer or label has an issue with this song please (CONTACT US DIRECTLY) before doing anything. By sending us an e-mail or a personal message and your content will be removed immediately 🔘We will respond with in 24 hours or less 👍🏻 like Share & Subscribe to our channel