Перейти к содержимому

திருவேட்களம் | அந்தமும் ஆதியும் ஆகிய அண்ணல் | திருஞானசம்பந்தர் தேவாரம் | ‪@ShaivamumThamizhum‬

Shaivamum Thamizhum

0:00 / 0:00

திருவேட்களம் | அந்தமும் ஆதியும் ஆகிய அண்ணல் | திருஞானசம்பந்தர் தேவாரம் | ‪@ShaivamumThamizhum‬

740 просмотров · 11 мес. назад
Shaivamum Thamizhum
3,48 тыс. подписчиков
740 просмотров · 11 мес. назад
01.039 திருவேட்களம் | அந்தமும் ஆதியும் ஆகிய அண்ணல் | திருஞானசம்பந்தர் தேவாரம் #SriPaasupatheswararTemple | #Thiruvetkalam | #ShivamumThamizhum | #Thirugnanasambanthar அர்ஜுனன் தவம் செய்து, பாசுபதம் பெற்ற முதன்மைத் தலமாகக் கருதப்படுவது திருவேட்களம். பாரதப்போரில் வெற்றி பெறுவதற்காக அர்ஜுனன் பாசுபதம் பெற விரும்பி சிவபெருமானை நோக்கி மூங்கில் காடாக இருந்த திருவேட்களத்தில் கடும் தவம் செய்கிறான். அர்ஜுனனின் தவத்தைக் கெடுக்க துரியோதனன் மூகாசுரனை பன்றி வடிவில் அனுப்பினான். சிவபெருமான் பார்வதியுடன் வேடன் உருவில் வந்து தனது அம்பால் பன்றியை கொன்றார். அதே பன்றியின் மீது அர்ஜுனனும் அம்பெய்தினான். அந்த பன்றியை யார் கொன்றார்கள் என்பது குறித்து சிவனுக்கும் அர்ஜுனனுக்கும் சொற்போரும், விற்போரும் நடந்தது. விற்போரில் அர்ஜுனின் வில் முறிந்தது. இதனால் கோபமடைந்த அவன் முறிந்த வில்லால் வேடனை அடித்தான். இந்த அடி மூவுலகத்தில் உள்ள அனைத்து உயிர்களின் மீதும் விழுந்தது. இதனால் அன்னை பார்வதி கோபமடைந்தாள். சிவன் பார்வதியை சமாதானப்படுத்தி தனது திருவடியால் அர்ஜுனனை தூக்கி எறிகிறார். அவன் சிவனின் பாத தீட்சை பெற்று, அன்னையின் கருணையால் இத்தல தீர்த்தத்தில் விழுகிறான். சிவன், உமாதேவியுடன் காட்சிகொடுத்து, அர்ஜுனனுக்கு பாசுபதம் கொடுத்து அருளினார். அர்ஜுன் வில்லால் அடித்த தழும்பு லிங்கத்தின் மீது இருப்பதை இன்றும் காணலாம். கிராத மூர்த்தியாக பாரவதிதேவியுடன் பாசுபதாஸ்திரம் கையில் ஏந்திய இறைவனின் உற்சவ விக்கிரகமும், அர்ஜுனன் உற்சவ விக்கிரகமும் இவ்வாலயத்தில் உள்ளன. வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தில் அர்ஜுனனுக்கு பாசுபதாஸ்திரம் அளித்த உற்சவம் நடைபெறுகிறது. இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ பாசுபதேஸ்வரர், ஸ்ரீ பாசுபதநாதர் இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ சற்குணாம்பாள், ஸ்ரீ நல்லநாயகி திருமுறை : முதல் திருமுறை 039 வது திருப்பதிகம் அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள் பதிக குரலிசை : திரு மதுரை முத்துக்குமரன் ஓதுவார் திருஞானசம்பந்தர் சிதம்பரத்தில் தங்கியிருப்பதற்கு மனமில்லாமல் திருவேட்களம் என்ற இத்தலத்திலிருந்து கொண்டு தான் சிதம்பரத்திற்கு எழுந்தருளி நடராஜப் பெருமானை தரிசித்து வந்தார். அந்தமும் ஆதியும் ஆகிய அண்ணல் ஆரழல் அங்கை அமர்ந்திலங்க மந்த முழவம் இயம்ப மலைமகள் காண நின்றாடிச் சந்தம் மிலங்கு நகுதலை கங்கை தண்மதியம் அயலே ததும்ப வெந்த வெண்ணீறு மெய் பூசும் வேட்கள நன்னகராரே. ..... (01) சடைதனைத் தாழ்தலும் ஏற முடித்து சங்க வெண்தோடு சரிந்திலங்கப் புடைதனில் பாரிடம் சூழப் போதரு மாறிவர் போல்வார் உடைதனில் நால்விரல் கோவண ஆடை உண்பதும் ஊரிடு பிச்சை வெள்ளை விடைதனை ஊர்தி நயந்தார் வேட்கள நன்னகராரே. ..... (02) பூதமும் பல்கணமும் புடைசூழ பூமியும் விண்ணும் உடன் பொருந்தச் சீதமும் வெம்மையும் ஆகி சீரொடு நின்ற எம் செல்வர் ஓதமும் கானலும் சூழ்தரு வேலை உள்ளம் கலந்து இசையால் எழுந்த வேதமும் வேள்வியும் ஓவா வேட்கள நன்னகராரே. ..... (03) அரைபுல்கும் ஐந்தலை ஆடல் அரவம் அமையவெண் கோவணத்தோடு அசைத்து வரைபுல்கு மார்பில் ஓர் ஆமை வாங்கி அணிந்தவர் தாம் திரைபுல்கு தெண்கடல் தண்கழி ஓதம் தேனலங் கானலில் வண்டு பண்செய்ய விரைபுல்கு பைம்பொழில் சூழ்ந்த வேட்கள நன்னகராரே. ..... (04) பண்ணுறு வண்டறை கொன்றை அலங்கல் பால்புரை நீறு வெண்ணூல் கிடந்த பெண்ணுறு மார்பினர் பேணார் மும்மதில் எய்த பெருமான் கண்ணுறு நெற்றி கலந்த வெண் திங்கள் கண்ணியர் விண்ணவர் கைதொழுது ஏத்தும் வெண்ணிற மால்விடை அண்ணல் வேட்கள நன்னகராரே. ..... (05) கறிவளர் குன்றம் எடுத்தவன் காதல் கண்கவர் ஐங்கணையோன் உடலம் பொறிவளர் ஆரழல் உண்ணப் பொங்கிய பூதபுராணர் மறிவளர் அங்கையர் மங்கையொர் பங்கர் மைஞ்ஞிற மானுரி தோலுடை ஆடை வெறிவளர் கொன்றையந் தாரார் வேட்கள நன்னகராரே. ..... (06) மண்பொடிக் கொண்டு எரித்தோர் சுடலை மாமலை வேந்தன் மகள் மகிழ நுண்பொடிச் சேர நின்றாடி நொய்யன செய்யல் உகந்தார் கண்பொடி வெண்தலை ஓடு கையேந்திக் காலனைக் காலால் கடிந்து உகந்தார் வெண்பொடிச் சேர்திரு மார்பர் வேட்கள நன்னகராரே. ..... (07) ஆழ்தரு மால் கடல் நஞ்சினை உண்டார் அமுதம் அமரர்க்கு அருளிச் சூழ்தரு பாம்பு அரை ஆர்த்து சூலமோடு ஒண்மழு ஏந்திச் தாழ்தரு புன்சடை ஒன்றினை வாங்கித் தண்மதியம் அயலே ததும்ப வீழ்தரு கங்கை கரந்தார் வேட்கள நன்னகராரே. ..... (08) திருவொளி காணிய பேதுறுகின்ற திசைமுகனும் திசைமேல் அளந்த கருவரை ஏந்திய மாலும் கைதொழ நின்றதும் அல்லால் அருவரை ஒல்க எடுத்த அரக்கன் ஆடு ஏழில் தோள்கள் ஆழத்து அழுந்த வெருவுற ஊன்றிய பெம்மான் வேட்கள நன்னகராரே. ..... (09) அத்தம்மண் தோய் துவரார் அமண் குண்டர் யாதுமல்லா உரையே உரைத்துப் பொய்த்தவம் பேசுவது அல்லால் புறனுரை யாதொன்றும் கொள்ளேல் முத்தன வெண் முறுவல் உமை அஞ்ச மூரிவல் ஆனையின் ஈருரி போர்த்த வித்தகர் வேத முதல்வர் வேட்கள நன்னகராரே. ..... (10) விண்ணியன் மாடம் விளங்கொளி வீதி வெண்கொடி எங்கும் விரிந்திலங்க நண்ணிய சீர்வளர் காழி நற்றமிழ் ஞானசம்பந்தன் பெண்ணின் நல்லாள் ஒரு பாகம் அமர்ந்து பேணிய வேட்களம் மேல் மொழிந்த பண்ணியல் பாடல் வல்லார்கள் பழியொடு பாவம் இலாரே. ..... (11) ஆலய முகவரி ; அருள்மிகு பாசுபதேஸ்வரர் திருக்கோவில், திருவேட்களம், அண்ணாமலை நகர் அஞ்சல், சிதம்பரம், கடலூர் மாவட்டம், PIN - 608 002. குறிப்பு : இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். "மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்"