Перейти к содержимому

கரம்பொன்: குயில் பாடும் தீவு

Kayts-தீவகம் : ஊர்காவற்றுறை _சரவணை_சின்னமடுவடி

0:00 / 0:00

கரம்பொன்: குயில் பாடும் தீவு

4 просмотра · 12 дней назад
Kayts-தீவகம் : ஊர்காவற்றுறை _சரவணை_சின்னமடுவடி
5 подписчиков
4 просмотра · 12 дней назад
குயில் பாடும் கரம்பொன்னில் கள்ளூறும் தனிப் பனை ஊர்க்கோழி சட்டியில் உறவே என் தீவகமே நீ சொற்கம் தந்தாய் தென் தமிழ் அரங்கில் மரந்தாவும் கவி நான் காணும் தீவில் மழைக் கால் இருட்டு ஊர் உலாச் சவாரி உளமெல்லாம் ஊர் தேவாரம் பாடும் ஞான வைரவர் திசையெல்லாம் சின்னமடுமாதா புளியங்கூடல் செருத்தனைப்பதி ஸ்ரீ இராஜ மகாமாரி… கருமேகஞ் சிதறும் தூவானம் அமிலம் உயிர் கொண்டலையும் கல்வியெனும் ஜந்திரம் யாழ்ப்பாணம் நாறும் தென் தமிழ் அரங்கில் மரந்தாவும் கவி நான் காணும் தீவில் மழைக் கால் இருட்டு குயில் பாடும் கரம்பொன்னில் கள்ளூறும் தனிப் பனை ஊர்க்கோழி சட்டியில் உறவே என் தீவகமே நீ சொற்கம் தந்தாய் பூஜைக்கு வந்த சூடம் தீயில் வீழா… பூஜை பன்றித் தலை அம்மன் வயல் எல்லாம் பொங்கல் நிரம்பிய வயறும் நானும் பக்தன் பூஜை தட்டில் பொலியும் காசு கண்ட அந்தணன் ஓங்கி ஒலிக்கும் தந்திர மந்திரம் புரியாத திசையில் நயினா தீவு ஶ்ரீ நாகபூசணி அம்பாள் அவள் அன்னதானம் அமிழ்தம் பொன்வண்டே புதுவண்டே என் கண்ணே சரவணையே அந்தியில் கொக்கு இறங்கும் அழகு அல்லைப்பிட்டி அமிழ்தமே என் தீவகமே உனைவிட்ட என் வாசம் இருள் சூழ்ந்த வனவாசம் உயிர் வாழ உழைப்பென்றால் உடலென்ன செய்யும்? உளமென்ன கொள்ளும் ? கருமேகஞ் சிதறும் தூவானம் அமிலம் உயிர் கொண்டலையும் கல்வியெனும் ஜந்திரம் யாழ்ப்பாணம் நாறும் குயில் பாடும் கரம்பொன்னில் கள்ளூறும் தனிப் பனை ஊர்க்கோழி சட்டியில் உறவே என் தீவகமே நீ சொற்கம் தந்தாய் தெற்கு ரோட்டில் நொண்டிக் காகம் சின்னமடுவில் தெம்மாங்கு குரலெடுத்தாள் குலமங்கை கோலமகள் குலையாத கூந்தல் வெளிர் வான நிலாவை மறைக்கும் நான் கொண்ட மோகம் நினைவெனும் தடத்தில் பொன்னூஞ்சல் புகழ் மகளே நாரந்தனை தென் தமிழ் அரங்கில் மரந்தாவும் கவி நான் காணும் தீவில் மழைக் கால் இருட்டு அமிழ்தமே என் தீவே உனைவிட்ட என் வாசம் இருள் சூழ்ந்த வனவாசம் உயிர் வாழ உழைப்பென்றால் உடலென்ன செய்யும்? உளமென்ன கொள்ளும் ? குயில் பாடும் கரம்பொன்னில் கள்ளூறும் தனிப் பனை ஊர்க்கோழி சட்டியில் உறவே என் தீவகமே நீ சொற்கம் தந்தாய் கருமேகஞ் சிதறும் தூவானம் அமிலம் உயிர் கொண்டலையும் கல்வியெனும் ஜந்திரம் யாழ்ப்பாணம் நாறும் —ப.வி.ஶ்ரீரங்கன்