தோள்மேல் தூக்கி சுமந்தீங்க |Thozh mel thookki sumanthinga | Sons of God
Sons of God
0:00 / 0:00
தோள்மேல் தூக்கி சுமந்தீங்க |Thozh mel thookki sumanthinga | Sons of God
749 просмотров · 7 дн. назад
Sons of God
20 подписчиков
749 просмотров · 7 дн. назад
பாடல் வரிகள்:
தோள்மேல் தூக்கி சுமந்தீங்க
உங்க அன்பை நான் எப்படி பாடுவேன்
கண்மனி போல் எனை காத்தீங்க
உங்க பாசத்தை நான் எப்படி மறப்பேன்
நான் விழுந்தாலும் எழுந்தாலும்
எங்கே போனாலும்
என் கூடவே இருந்தீங்க
ஒரு தாயை போல பாசத்தை காட்டுனீங்க
தந்தையின் அன்பை உணர வைத்தீங்க
உங்க பிள்ளையா
என்ன எப்பவும் ஸ்பெஷலா நடத்துனீங்க
தோள்மேல் தூக்கி சுமந்தீங்க
உங்க அன்பை நான் எப்படி பாடுவேன்
கண்மனி போல் எனை காத்தீங்க
உங்க பாசத்தை நான் எப்படி மறப்பேன்
காரிருள் என்னை சூழ்ந்தாலும்
என் வெளிச்சமாய் வந்தீங்க
வழிகாட்ட யாருமில்லா நேரத்திலும்
என் கரத்தை பிடித்து நடத்தினீங்க
உலகத்தின் மாயைகள் என்னை சோதித்தாலும்
உங்க வார்த்தையால எனக்கு பெலன் தந்தீங்க
என் வேதனை யாவையும் துடைச்சு
உங்க அமைதியால் நிரப்பினீங்க
தோள்மேல் தூக்கி சுமந்தீங்க
உங்க அன்பை நான் எப்படி பாடுவேன்
கண்மனி போல் எனை காத்தீங்க
உங்க பாசத்தை நான் எப்படி மறப்பேன்
வானாதி வானமும் கொள்ளாத
என்னில் ஊற்றப்பட்ட
உங்க அன்பு பூமியின் எல்லைகள் வரை
பரந்த உங்க கிருபை
என்னை தாங்குதே எப்போதுமே
நித்தியமானவரே சத்தியமானவரே
உங்க பாசத்திற்கு ஈடில்லையே
என் வாழ்நாள் முழுதும்
உங்க புகழை பாடுவது என் பாக்கியமே
தோள்மேல் தூக்கி சுமந்தீங்க
உங்க அன்பை நான் எப்படி பாடுவேன்
உங்க அன்பை நான் எப்படி பாடுவேன்...
@SonsOfGod7777