பாக்கியவான் மனுஷனே / psalm 1 songs
Sons of God
0:00 / 0:00
பாக்கியவான் மனுஷனே / psalm 1 songs
161 просмотр · 12 дней назад
Sons of God
3 подписчика
161 просмотр · 12 дней назад
பாடல் வரிகள் :
துன்மார்க்கன் ஆலோசனையில் நடவாமலும்
பாவிகள் வழியினில் நில்லாமலும்
பரியாசக்காரர் இடத்தில் உட்காராமலும்
வாழ்ந்திடும் மனுஷனே பாக்கியவான்!
கர்த்தரின் வேதத்தில் பிரியமாய்
இரவும் பகலும் தியானித்து
அவருடைய வழியை நேசித்து
வாழ்ந்திடும் மனுஷனே பாக்கியவான்!
நீர்க்கால் ஓரமாய் நடப்பட்டு
தன் காலத்தில் கனிகள் தந்திடுவான்
இலைகள் உதிரா மரத்தைப் போல
செய்வதெல்லாம் வாய்க்கப் பெறுவான்!
துன்மார்க்கரோ அப்படி இருப்பதில்லை
காற்றுப் பறக்கடிக்கும் பதராவார்
நியாயத்தீர்ப்பிலும் சபையினிலும்
நிலைத்து நிற்கவே முடிவதில்லை!
நீதிமான்களின் வழியை கர்த்தர்
நன்றாய் அறிந்தே வைத்திருக்கிறார்
துன்மார்க்கர் செல்லும் பாதையோ
என்றுமே அழிந்து போகும்!
@sonsofgod7777