Перейти к содержимому

20 நிமிடத்தில் வீட்டிலேயே ரெஸ்டாரன்ட் ஸ்டைல் ஸ்பைசி சிக்கன் பாஸ்தா | Quick Spicy Chicken Pasta

சுவைச்சாரல்

0:00 / 0:00

20 நிமிடத்தில் வீட்டிலேயே ரெஸ்டாரன்ட் ஸ்டைல் ஸ்பைசி சிக்கன் பாஸ்தா | Quick Spicy Chicken Pasta

44 просмотра · 4 дня назад
சுவைச்சாரல்
15 подписчиков
44 просмотра · 4 дня назад
வீட்டிலேயே அரைத்த தக்காளி சாஸ், ஃபிரெஷ்ஷா அரைத்த சிக்கன், குடைமிளகாய் சேர்த்து ஸ்பைசி சிக்கன் பாஸ்தா செய்வது எப்படி என்று பார்க்கலாம். சீஸ் விருப்பப்பட்டால் மட்டும் சேர்த்துக்கொள்ளலாம். 🥣 தேவையான பொருட்கள் • பாஸ்தா – 250 கிராம் • எலும்பில்லாத சிக்கன் – 350 கிராம் • தக்காளி – 3 • பூண்டு – 5 பல், பொடியாக நறுக்கியது • வெங்காயம் – ¾ கப், பொடியாக நறுக்கியது • குடைமிளகாய் – பொடியாக நறுக்கியது • எண்ணெய் – சாஸுக்கு 3 டேபிள் ஸ்பூன்; சிக்கனுக்கு 3½ டேபிள் ஸ்பூன் • மிளகாய்த்தூள் – சாஸுக்கு ¾ டீஸ்பூன்; சிக்கனுக்கு ¾ டீஸ்பூன் • மிளகுத்தூள் – ¾ டீஸ்பூன் • சர்க்கரை – ¾ டீஸ்பூன் • இத்தாலியன் சீசனிங் – 1½ டீஸ்பூன் • உப்பு – பாஸ்தா வேகவைக்க 1 ஸ்பூன்; சாஸ், சிக்கனுக்கு தேவையான அளவு • சீஸ் – ½ கப் (விருப்பப்பட்டால்) பாஸ்தாவை 8–10 நிமிடம் வேகவைக்கவும். தக்காளியைத் தண்ணீர் சேர்க்காமல் நைசாக அரைக்கவும். பூண்டு, வெங்காயத்துடன் தக்காளி மற்றும் மசாலாவைச் சேர்த்து சுமார் 10 நிமிடம் கெட்டியான சாஸாகக் காய்ச்சவும். ஃபிரெஷ்ஷா அரைத்த சிக்கனை வதக்கி, குடைமிளகாய், சாஸ், பாஸ்தா சேர்த்துக் கிளறவும். விருப்பப்பட்டால் சீஸ் தூவி, மூடி 2 நிமிடம் குறைந்த தீயில் வைக்கவும். Spicy chicken pasta with a homemade fresh tomato sauce, minced boneless chicken and bell peppers. Cheese is optional. Tamil narration with English subtitles. செஞ்சு பார்த்துட்டு எப்படி இருந்துச்சுன்னு கமெண்ட்ல சொல்லுங்க! மேலும் சுவையான சமையல் வீடியோக்களுக்கு சுவைச்சாரலை Subscribe பண்ணுங்க. ❤️ #ChickenPasta #TamilRecipe #SpicyPasta #HomeMadePasta #HomeMadeSauce #TamilCooking #TamilRecipes #SriLankanTamil #சுவைச்சாரல்